நீங்கள் செய்யும் சிறு தவறு வற்றாத செல்வத்தையும் வற்ற வைத்து விடுமாம்..! கவனமாக இருங்கள்.!

பிரதான செய்திகள்

மிகப்பெரிய பணக்காரர்கள் கூட திடீரென தொழிலில் நஷ்டமடைந்து ஏழ்மை நிலையை அடைந்து விடுவார்கள். என்ன காரணம் என்று யோசித்து யோசித்து மன அழுத்தத்திற்கு ஆளாகி அதை அறியாமலேயே கவலைப்பட்டுக்கொண்டிருப்பார்கள். பணம் அதிகமாக இருக்கும் போது ஆணவத்தில் போடும் ஆட்டம் கோபுரத்தில் இருந்து குப்பை மேட்டிற்கு தள்ளி விடும். எனவே வறுமை ஏற்படாமல் இருக்க என்னென்ன தவறுகள் செய்யக்கூடாது என்று பார்க்கலாம்.

பாதம் தானே என உதாசினமாய் இருக்கக் கூடாது. நம் முழு உடல் எடையும் தாங்கி முன்னோக்கி நடத்தி செல்லும் முக்கிய உறுப்பே பாதம் தான் அதுவே வணங்குதற்குரிய ஸ்ரீ லட்சுமி பாதமாகும். எனவே சுத்தமாக பாதுகாக்க வேண்டும். தூங்கும் போது கால் மேல் போட்டு தூங்குவது எவ்வித குற்றமும் ஆகாது, எனினும் தூக்கத்தில் கூட குதிக்காலால் பூமியை தேய்க்கக்கூடாது செல்வம் வற்றிவிடும் கவனம்.


பெருமாள் ஆலயங்களில் பாதுகை கொண்டு ஆசீர்வாதம் செய்கிறார்கள், பாதத்தின் பெருமையை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும் என்றுதான். பாதங்களில் வலது பாதம் லட்சுமி நாராயணன் ஆவார்கள், தம்பதி சமேதராய் உள்ள பாதத்தையே முதலில் அடி எடுத்து வைத்து வர முக்கியத்துவம் கொடுப்பார்கள். திருமணமாகி புகுந்த வீட்டிற்கு செல்லும் பெண்களைப் பார்த்து கணவன் வீட்டில் வலது காலை எடுத்து வைத்து உள்ளே வா என்று அழைப்பார்கள். முன்னோர்கள் சொல்வது காரண காரியமின்றி இல்லை.

நம்முடைய பாதமே செல்வம் தரும் ஸ்ரீ மஹாலட்சுமி பாகம் ஆகும். இந்த பாதத்திற்கு மட்டும் தனி மரியாதை உண்டு, நம் கால் மற்றவர் மேல் பட்டு விட்டாலே அவரை தொட்டு வணங்குவோம், அவ்வாறு செய்யாமல் அவமதிப்பாய் இருந்தால் அன்னை மகாலட்சுமி நம்மிடம் இருந்து விலகி நம்முடைய கால் யார் மீது பட்டதோ அவர்களிடம் சென்று விடுவார்கள்.கோவிலுக்கு சென்று இறைவனை வணங்கும் போது பாதத்தை பார்த்து வணங்க வேண்டும் என்று சொல்வார்கள்.

என் சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம் என்றாலும் பாத பூஜையே சிறப்பு பெற்றதாகும். மூன்று உலகையும் அளந்த பெருமையும். நாட்டையே பாத ரட்சை ஆண்ட பெருமையும் புராணங்களில் படித்திருப்போம், பாதத்திற்கு இவ்வளவு மரியாதை ஏனெனில் அதுவே செல்வம் தரும் யோகம் தரும் மகாலட்சுமி குடிகொள்ளும் பாகம் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர்.

புதுமனை கிரக பிரவேசத்தின் போது பசுவின் பாதம் படவே முதலில் இல்லத்திற்கு பசுவையும் கன்றையும் அழைத்து வருவார்கள். மகாலட்சுமியின் அருள் கிடைக்க வேண்டும் என்றுதான். புதுமணப்பெண் புகுந்த வீட்டிற்கு வரும் போது தலைவாயிற் படியில் படி நெல்லை வைத்து வலது காலால் உள்புறமாக தட்டி நெல்லை தரையில் கொட்ட வைத்து உள்செல்லும் பழக்கமும் உள்ளது.

பெரியவர்களின் பாதத்தை குனிந்து தொட்டு வணங்கும்போது அவர்கள் உடனே குனிந்து நம்மை எழுப்பி மனப்பூர்வமாக ஆசீர்வதிப்பார்கள், ஆக பாதமே மரியாதையான லட்சுமி ஸ்தானமாகும். அதன் சுத்தத்திலே தான் செல்வம் உள்ளது. தினசரியும் நமது பாதங்களை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும்.

நடையில் பணிவு வேண்டும் என்று சொல்வார்கள். பூமி அதிர நடந்தால் செல்வம் தங்காது என்று சொல்வார்கள். பணிவாக நடப்பவர்களிடம் ஐஸ்வர்யம் தங்குமாம். எனவேதான் பூமிக்கு அழுத்தம் கொடுக்காமல் நடந்தால் அதிர்ஷ்டமும் செல்வமும் பெருகும் என்று சொல்வார்கள். ஒருபோதும் பூமியை அதிர்ந்து உதைக்கவோ மிதிக்கவோ கூடாது என்பார்கள், குறிப்பாக குதிக்கால் மிக முக்கிய யோகலட்சுமி வாழும் இடமாகும்,எனவேதான் பூமியை யார் உதைத்தாலும் நிச்சயம் உடனே வறுமை குடியேறும் என்ற சொல்வார்கள். ஆணவத்தில் ஆடக்கூடாது பதவி வரும் போது பணிவு வர வேண்டும் என்று அதனால்தான் முன்னோர்கள் கூறியுள்ளனர்.

எப்பொழுதும் சுத்தமாக இருக்க வேண்டிய பகுதி நம் குதிக்கால் பகுதியாகும். காலை கழுவும் போது குதிக்காலை விட்டு மற்ற இடங்களை மட்டும் கழுவினால் வறுமை அதிகரிக்குமாம். கால்களை குறிப்பாக நமது குதிகால்களை நன்றாக கழுவவில்லை எனில் சனிஷ்வர பீடை பிடித்து விடும், பாத சனி பாடாய் படுத்தும், என்றெல்லாம் பயமுறுத்தினார்கள். மகாலட்சுமியின் அருளை பெற வேண்டும் என்றால் நம்முடைய கால்களை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

சிலருடைய வீட்டில் திருமணம் உள்ளிட்ட சுபகாரியம் நடைபெறுவதில் தடை ஏற்படும். குடும்பத்தில் வறுமை, சங்கடங்கள் ஏற்படும். பாதங்களை சரியாக பராமரிக்காததே இதற்குக் காரணமாகும். வெளியில் சென்று வந்தால் சுத்தமாக கால்களை கழுவிய பின்னரே வீட்டிற்கு உள்ளே செல்வார்கள், வெளியே சென்று விட்டு எதையாவது மிதித்து இருப்பார்கள் திருஷ்டிக்கு சுற்றிப்போட்டதை கூட கால்களால் தெரியாமல் மிதித்து இருந்தால் என்ன செய்வது எனவேதான் கால்களை நன்றாக தேய்த்து கழுவிய பின்னரே நடந்து செல்வார்கள்.

யார்மீதும் எதன்மீதும் தெரியாமல் கூட கால் படாதவாறு நடந்து கொள்ளுங்கள். தெரியாமல் கால் பட்டு விட்டால் கூட சிவ சிவா என்று கூறி மன்னிப்பு கேளுங்கள். ஒரு காலை கொண்டு இன்னொரு காலை தேய்க்க மாட்டார்கள், அனாவசியமாக கால்மேல் கால் போட்டு ஆட்டமாட்டார்கள், இவைகளெல்லாம் நாமும் பின்பற்றினால் மிக உயர்ந்த செல்வ சந்தோஷ நிலைக்கு உயரலாம் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *