தண்ணீரை இப்படி செலவு பண்ணுங்க..வறுமை உங்க வீட்டுப்பக்கம் எட்டி கூட பார்க்காது..குபேர யோகம்தான்!

செய்திகள்

நாடெல்லாம் நல்ல மழை பெய்து ஆறு,குளங்கள் நிரம்பி வழிகின்றன..தண்ணீர் எங்கும் பெருகியுள்ளது. அணைகள் நிரம்பி வழிகின்றன..ஆறுகளும்..அருவிகளும் உயிர்ப்போடு இருக்கின்றன. கடந்த சில ஆண்டு காலமாகவே நல்ல மழை பெய்வதால் தமிழ்நாட்டில் தண்ணீர்


தட்டுப்பாடு இல்லாமல் இருக்கிறது. தண்ணீரின் பெருமையை உணர்ந்து மதித்து போற்றியதாலேயே செழிப்பாக இருக்கிறது தமிழ்நாடு. நம்முடைய வீட்டில் நாம் தண்ணீரை எந்த அளவிற்கு சிக்கனமாக பயன்படுத்துகிறோம் என்பதைப்பொருத்துதான் நமக்கு அன்னை மகாலட்சுமியின் அருளினால் செல்வ வளம் பெருகும்.

காலை முதல் மாலை வரை உழைப்பது பணத்திற்காகத்தான். பணக்காரர்கள் ஆக வேண்டும் என்பதுதான் பலரது எண்ணம். என்னதான் உழைத்தும் வீட்டில் பணம் தங்கவில்லையே என்பது பலரது கவலை. செல்வத்தின் அதிபதி மகாலட்சுமியின் கடைக்கண் நம்மீது விழாதா? என்று பலரும் ஏங்குகின்றனர்.

மகாலட்சுமியின் அருளினால் செல்வ வளம் பெருக தண்ணீரை வைத்து நாம் சில பரிகாரங்கள் செய்ய வேண்டும். உலக தண்ணீர் தினம் கொண்டாடப்படும் இந்த சந்தர்ப்பத்தில் என்னென்ன பரிகாரங்கள் செய்யலாம் என்று பார்க்கலாம். காலையில் எழுந்தவுடன் யார் முகத்தையும் பார்க்காமல் தண்ணீர் இரண்டு மடக்கு குடிக்க,லக்ஷ்மி கடாக்ஷம் கிடைக்கும், கோபம் வராது. உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

ஆனி மாத வளர்பிறையில் வரும் ஏகாதசி நிர்ஜல ஏகாதசி என போற்றப்படுகிறது. பீமனே அனுஷ்டித்த விரதம் என்பதால் இந்த விரதம் ‘பீம விரதம்’ என்றும் பீம ஏகாதசி என்றும் போற்றப்படுகிறது. அன்றைய தினம் தண்ணீர் தானம் செய்பவர்கள் ஒரு கோடி தங்கம் தானம் செய்த பலன் பெறுகிறார்கள். இந்த ஏகாதசியின் சிறப்பை கேட்பவர்கள் வைகுண்ட பதம் அடைவார்கள். மகத்துவம் நிறைந்த இந்த நாளில் ஒரு குடம் ஏன் ஒரு வாட்டர் பாட்டில் தண்ணீராவது தவித்த வாய்க்கு தானமாக கொடுத்து பாருங்கள் அப்புறம் உங்களுக்கு நடக்கும் நன்மைகளை நீங்கள் அறிவீர்கள்.

எவ்வளவு பெரிய கஷ்டத்திற்கும் மிக மிக சுலபமான தீர்வை கொடுக்கக் கூடிய மகா சக்தியை கொண்டவர் தான் காஞ்சி மகா பெரியவா. இந்த மகா பெரியவா சொன்ன பரிகாரங்களை செய்து பலன் அடைந்தவர்கள் ஏராளமானோர். அப்படி ஒரு பக்தனுடைய கதையைத்தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். மகா பெரியவாவை பார்ப்பதற்கு ஏராளமான பக்தர்கள் மடத்திற்கு வருகை தருவார்கள். நிறைய கூட்டம் இருக்கும். அந்த வரிசையில் ஒரு பக்தன் கண்களில் கண்ணீரோடு முகத்தில் வாட்டதோடு வந்து மகா பெரியவா அவர்களைப் பார்த்து ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டு, குங்குமத்தை பிரசாதமாகவும் வாங்கிக் கொண்டு செல்கின்றான்.

இதேபோல மூன்று நாட்களும் நகர்ந்து சென்றது. மூன்று நாட்களும் மகா பெரியவா, கஷ்டத்தில் வந்த அந்த ஒரு பக்தனை கவனித்துள்ளார். நான்காவது நாளும் அந்த பக்தன் கஷ்டத்தோடு வந்து, சொல்ல வந்த கஷ்டத்தை சொல்லாமல் பிரசாதத்தை வாங்கிக் கொண்டு மஹா பெரியவாவை கடந்து சென்ற போது, மகா பெரியவா அந்த பக்தனின் கைபிடித்து இழுத்து, கூப்பிட்டு ‘சொல்ல வந்த கஷ்டத்தை ஏன் சொல்லாமல் செல்கிறாய்’ என்று கேட்டபோது, பின்பு கண்கலங்கி கஷ்டத்தை அப்படியே சொல்லத் தொடங்கினான் அந்த பக்தன்.

‘தீர்க்கவே முடியாத பணக்கஷ்டம். அள்ளி அள்ளிக் கொடுத்த எங்களுடைய குடும்பம் இப்போது கிள்ளி கொடுப்பதற்கு கூட எதுவும் இல்லாமல் நிற்கின்றது. அன்றாட வாழ்க்கையை நடத்திச் செல்ல முடியாத எனக்கு கோடி கோடியாக இருக்கும் கடனை அடைப்பதற்கான வழியே தெரியவில்லை. என்ன செய்வது என்றே புரியவில்லை’. என்றவாறு கஷ்டத்தோடு கண்கலங்க பிரச்சனைகளை கொட்டி தீர்த்தார் அந்த பக்தன்.

எல்லா பிரச்சனைகளையும் பொறுமையாக கேட்டுக் கொண்ட மகா பெரியவா கஷ்டத்தில் வந்த அந்த பக்தனை பார்த்து, ‘உன்னுடைய வீட்டில் ஒரு கிணறு இருக்கிறது அல்லவா? அந்த கிணற்றில் நிரம்ப தண்ணீர் இருக்கிறது அல்லவா? என்று கேட்கின்றார்’. இவருடைய கஷ்டத்திற்கும் கிணற்றில் இருக்கும் தண்ணீருக்கும் என்ன சம்பந்தம் என்று அங்கு உள்ளவர்களும் யோசிக்க தொடங்கி விட்டார்கள். இருந்தாலும் மகா பெரியவா சொல்கின்ற விஷயத்தை செவிகொடுத்து கேட்க வேண்டும். அதுதானே மரியாதை. அதுதானே பக்தி.

என்னுடைய வீட்டில் கிணறு இருக்கிறது அது நிரம்ப இளநீர் போல சுவையான தண்ணீரும் இருக்கிறது என்று சொல்கிறான் அந்த பக்தன். ‘இன்னும் ஒரு சில நாட்களில் ஆடி மாதம் வரப்போகின்றது. பக்தர்கள் கோவிலுக்கு திரளாக செல்வார்கள். வெயில் சமயம் என்பதால் பக்தர்களுக்கு உதவியாக இருக்கும் வகையில், உன் கிணற்றில் இருந்தே தண்ணீர் எடுத்து பாதை முழுவதும் தண்ணீர் பந்தல் அமைத்து விடு. தண்ணீர் பந்தல் அமைக்கும் போது பானையில் தண்ணீர் நிரப்பும்போது ஹரே கிருஷ்ணா! ஹரே ராம! மந்திரத்தை மனதார உச்சரித்துக் கொண்டே இரு.’ என்று ஒரு பரிகாரத்தை சொல்கிறார் மகா பெரியவா.

பக்தனும் இதைக் கேட்டுக் கொண்டு மகா பெரியவா சொன்னது போலவே பரிகாரத்தை செய்து விட்டான். தாகத்தில் வந்த பக்தர்களுக்கு தண்ணீரும் கிடைத்தது. இந்த பரிகாரம் செய்து முடித்த ஒரு சில நாட்களிலேயே பக்தனின் சொந்த ஊரான அந்த கிராமத்திலிருந்து ஒரு செய்தி வருகின்றது. ஏதோ ஒரு பூர்வீக சொத்து பத்திரம் பக்தனின் தாத்தா பெயரில் உள்ளது. அந்த சொத்தை விற்றால் ஒரு பெரிய தொகை கிடைக்கும் என்ற ஒரு செய்தி. அந்த பக்தனும் சொத்து விவகாரங்களை சரியாக முடித்து சொத்தை விற்று கைக்கு வந்த பணத்தை கடனாளிகளுக்கு திருப்பி கொடுத்துவிட்டான். போக மீதம் ஒரு சிறு தொகையும் இவனுடைய கையில் இருப்பு இருந்தது. ஒரு தண்ணீரை தானமாக கொடுத்ததற்கே இவனுடைய தீரா பரம்பரை கடன் தீர்த்து விட்டது. மகா பெரியவாரிவா அவர்கள் நிகழ்த்திய பல அற்புதங்களில் இதுவும் ஒன்று.

சிலருக்கு பணம் தண்ணீராக செலவாகும். செலவைக் கட்டுப்படுத்தி பணத்தை சேமிப்பதற்கான பரிகாரங்கள் உள்ளன அவற்றை கடைபிடித்தால் வீண் செலவு கட்டுப்படும். எப்போது வீட்டில் தண்ணீர் மற்றும் மின்சார இணைப்பு பிரச்சனைகள் அடிக்கடி வருகிறதோ உங்களுக்கு செலவுகளும் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்றும் அர்த்தம்.

வீட்டின் மேற்கூரையில் இருந்து நீர் ஒழுக ஆரம்பித்தால், அதுவும் அந்த வீட்டில் உள்ள குடும்பம் கடுமையான பணப் பிரச்சனையால் கஷ்டப்படப் போகிறது என்று அர்த்தம். அதே போல நம்முடைய வீட்டில் குளியலறை, பாத்திரம் கழுவும் சிங்க் போன்றவற்றில் உள்ள குழாய்களில் தண்ணீர் வீணாக ஒழுகினால் நிதிப்பிரச்சினை வீண் செலவு வரப்போகிறது என்று அர்த்தம். தேவை இல்லாமல் தண்ணீரை செலவு செய்யக்கூடாது. வீட்டு குழாயில் தண்ணீர் சிந்தாமல் மூடிவைக்க வேண்டும். இந்த பரிகாரங்களைச் செய்தால் பணப்பிரச்சினை நீங்கி செல்வம் பெருகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *