இந்த பொருட்கள் எல்லாம் உங்க வீட்ல இருந்தால் உங்களுக்கு பணப்பிரச்சினை வர வாய்ப்பே இல்லையாம்..!!

பிரதான செய்திகள்

பணத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அத்தியாவசிய தேவைக்கு பணம் ஓரளவு தேவை என்றாலும் கல்வி, மருத்துவ செலவுகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்வதால் பணத்தை எதிர்கால தேவைக்காக சேமிக்க வேண்டியது அவசியமாகும். நாம் சம்பாதிக்கும் பணம் வீண், விரைய செலவு ஆகாமல் இருக்க நாம் சில பொருட்களை நம்முடைய வீட்டில் வைத்திருப்பது அவசியம். அந்த பொருட்கள் பணத்தை நம்முடைய வீட்டில் தக்கவைக்கும்.


நாம் நேர் வழியில் சம்பாதிக்கும் பணம்தான் நம்முடைய வீட்டில் தங்கும். பலரும் குறுக்கு வழியில் முறைகேடாக சம்பாதிக்கும் பணம் ஏதோ ஒரு வழியில் தேவையில்லாமல் செலவாகிவிடும். நம்முடைய வருமானம் அதிகரிக்கவும், நாம் சம்பாதிக்கும் பணம் நம்முடைய வீட்டில் தங்கி பயன் தரவும் என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்றும் பார்க்கலாம்.

நாம் முதலில் நம்மிடம் வரும் பணத்தை மதிக்க வேண்டும். பிறர் கொடுக்கும் பணத்தை நாம் பெற்றுக்கொள்ளும் போது அதை இரண்டு கைகளாலும் பெற்றுக்கொண்டு கண்களில் ஒற்றி வணங்க வேண்டும். இதன் மூலம் அந்த பணம் மகிழ்ச்சியுடன் நம்மிடம் தங்கும்.

நம்மிடம் வரும் பணத்தை நாம் பர்ஸ், ஹேண்ட் பேக், பீரோவில் வைக்கும் போது இந்த பணம் பல மடங்காக பெருக வேண்டும், லாபம் வசி வசி என்று சொல்லி வைக்க வேண்டும். நாம் சொல்லும் அந்த வார்த்தை பணத்தை வசியப்படுத்தி நம்மிடமே தங்க வைக்கும். பணம் பல வழிகளில் பெருகி சுப செலவுகளுக்கு தேவைப்படும் போது பயன்படும்.

நாம் சமையலுக்கு பயன்படுத்தும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் பொருட்களும், சந்தனம், ஜவ்வாது, பன்னீர் போன்ற வாசனை பொருட்களையும் பணம் வைக்கும் இடங்களில் பயன்படுத்த வேண்டும். நல்ல வாசனை குபேரனுக்கும் அன்னை மகாலட்சுமிக்கும் பிடித்தமானது. நம்முடைய ஹேண்ட் பேக், பர்ஸ் போன்றவைகளில் சிறிதளவு பச்சைக்கற்பூரம் வைப்பது அவசியம்.

சிலருக்கு கண் திருஷ்டி அதிகமாக இருக்கும். கண் திருஷ்டியினால் அதிக பிரச்சினைகள் வரும். பண வருமானம் வந்தாலும் செலவுகளும் அதிகரிக்கும். கண் திருஷ்டியை போக்குபவர் கணபதி. எனவே நாம் சிறிய அளவிலாவது விநாயகர் சிலையை வாங்கி நம்முடைய வீட்டில் வைக்க வேண்டும். பித்தளை, செம்பு, வெள்ளி, மரத்தில் செய்யப்பட்ட பிள்ளையார் என நம்முடைய கை விரல் அளவு சிறிய சிலையாக வாங்கி வைக்கலாம்.

பொதுவாக மகாலட்சுமியின் அருள் நமக்கு இருந்தாலே செல்வ செழிப்பிற்கு குறை இருக்காது. நம்முடைய பாதத்தில் அன்னை மகாலட்சுமி குடியிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. அதேபோல மகாலட்சுமியின் பாதம் நம்முடைய வீட்டிற்கு வருவது போல பூஜை அறையில் வைக்க வேண்டும். இதன் மூலம் செல்வ செழிப்பு அதிகரிக்கும். அதே போல வலம்புரி சங்கு இருக்கும் வீட்டிலும் நல்ல அதிர்வுகள் இருக்கும். நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும் செல்வ செழிப்பும் அதிகரிக்கும்.

நம்முடைய வீட்டு ஷோ கேகேஸில் யானை பொம்மைகளை வைக்க வேண்டும். யானை விநாயகரின் அம்சம். யானை பொம்மையை வீட்டில் அழகுக்காக வாங்கி வைக்கலாம். எப்போதுமே ஜோடியாக இருக்கும் யானைகளைத்தான் வாங்க வேண்டும். இதனால் வாஸ்து பிரச்சினைகள் நீங்கும். கண் திருஷ்டி செய்வினை கோளாறுகள் இருந்தாலும் நீங்கும். பண வரவில் ஏற்படும் தடைகடள நீங்கும்.

பசுவும் கன்றும் ஒன்றாக இருப்பது போன்ற காமதேனு சிலையை வாங்கி வீட்டின் வரவேற்பு அறையில் வைக்கலாம் அனைத்து தேவர்களும், தெய்வங்களும் குடியிருக்கும் இடமாக பசு விளங்குகிறது. இந்த சிலை உங்கள் வீட்டில் இருக்கும் பட்சத்தில் உங்கள் வீட்டில் செல்வ செழிப்பு அதிகரிக்கும். ஒரு தட்டில் ஆமை சிலையை வைத்து நம் வீட்டிற்குள் வருவது போன்று வைக்க வேண்டும். வரவேற்பறையில் வைக்க வைத்துக் கொள்ளலாம். அது நல்ல சகுனங்களை வீட்டிற்கு அழைத்து வரும். இது போன்ற பொருட்களை நம்பிக்கையுடன் வைத்து பாருங்கள் நாம் சம்பாதிக்கும் பணம் வீண் விரைய செலவு ஆகாமல் நிரந்தரமாக நம்மிடம் தங்கும். அப்படியே செலவானாலும் சுப செலவாக மாறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *