சிலருக்கு திடீர் என வேலை போகும்..சிலர் நோய் பாதிப்பிற்கு ஆளாகி மருத்துவத்திற்காக லட்சக்கணக்கில் செலவு செய்வார்கள். ஏன் இப்படி கஷ்டம் வருகிறது என்று யோசிக்க முடியாத அளவிற்கு மாறி மாறி குடும்பத்தில் பிரச்சினை வந்து கொண்டே இருக்கும். கஷ்டங்கள் நீங்கவும் பிரச்சினைகள் முடிவுக்கு வரவும் நாம் சில பரிகாரங்களை செய்ய வேண்டும். பரிகாரங்களை நம்பிக்கையுடன் செய்தால் போதும் நம்முடைய கஷ்டங்கள் நீங்குவதுடன் செல்வ வளமும் அதிகரிக்கும்.

நாம் தெரிந்தோ, தெரியாமலோ செய்யும் காரியங்கள் நமக்கு சில நேரங்களில் கஷ்டங்களை கொடுத்து விடும். அந்த தவறுகளை திருத்திக் கொள்வதோடு பண வருமானத்திற்கு ஏற்ற பரிகாரங்களை செய்ய வேண்டும். நமக்கு செல்வம் அதிகரிக்க அன்னை மகாலட்சுமியின் அருள் தேவை. அன்னை மகாலட்சுமிக்கு பிடித்தமான சில காரியங்களை நாம் செய்தால் நமக்கு தடையின்றி வருமானம் வரும்.
நாம் பரிகாரம் செய்ய வியாழக்கிழமை நல்ல நாள். குபேரனுக்கு ஏற்ற நாள் வியாழக்கிழமை. குரு புஷ்ய யோகம் இருந்தால் கூடுதல் சிறப்பு. குபேர காலத்தில் குபேர பகவானை வழிபட்டு வந்தால் வீட்டில் பணம் சேரும்.
வியாழக்கிழமை குபேர பகவானுக்கு நாம் விளக்கு ஏற்றி அதற்கு முன் அமர்ந்து வேண்டிக் கொள்வது மிகவும் சக்தி அமர்ந்து இருக்கும். அதனால் வியாழக்கிழமை அன்று மாலை 6 மணிக்கு மேல் பூஜை அறையை சுத்தப்படுத்தி, உங்கள் வீட்டில் இருக்கும் குபேரனின் திருவுருவப்படம் அல்லது குபேரரின் சிலையை சுத்தமாக துடைத்து, அதன் மீது பன்னீர் தடவி, சந்தனம் குங்குமம் ஆகியவற்றை வைத்து அலங்காரம் செய்து. பூக்களை வைத்து பூஜை அறையை தயார்படுத்திக் கொள்ளுங்கள். பின்பு பூஜை அறையில் மண் விளக்கை வைத்து அதில் 1 ரூபாய் நாணயம் மற்றும் 2 ஏலக்காய் போட்டு, நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். பின்பு மஞ்சள் நல்லெண்ணெய் திரி போட்டு விளக்கை ஏற்றி குபேரருக்கு நைவேத்தியமாக இனிப்பு பொருட்கள் அல்லது ஏதேனும் பழ வகைகளை வைத்து வழிபட வேண்டும்.
இந்த விளக்கின் முன் அமர்ந்து கொண்டு “ஓம் லட்சுமி குபேராய நமஹ” அல்லது ” ஓம் மகாலட்சுமியே போற்றி” என்று ஏதாவது ஒரு மந்திரத்தை உச்சரியுங்கள். இதை ஒரு கணக்கு வைத்து 108 முறை என்ற கணக்கில் கூட நீங்கள் உச்சரிக்கலாம். நீங்கள் இப்படி ஒவ்வொரு முறையும் மந்திரத்தை உச்சரிக்கும் போது உதிரி பூக்களால் உங்கள் முன்பு ஏற்றி வைத்திருக்கும் தீபத்திற்கு அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். பூஜை முடிந்த பின்னர் குபேரையும் மகாலட்சுமி மற்றும் உங்கள் குலதெய்வத்தையும் மனதார நினைத்து நல்ல வேலை கிடைக்கவும், பண வருமானம் அதிகரிக்கவும் மனதார வேண்டிக்கொள்ள வேண்டும்.
நீங்கள் தொடர்ந்து அனைத்து வியாழக்கிழமைகளிலும் இந்த பூஜையை செய்வதால் ஒவ்வொரு வியாழக்கிழமையும் விளக்கில் உள்ள எண்ணெய் மாற்றி விட்டு விளக்கை சுத்தமாக துடைத்துவிட்டு. விளக்கில் இருந்த திரியை கால் படாத இடத்தில் போட்டுவிடுங்கள். நாணயத்தை நன்றாக துடைத்து விட்டு மீண்டும்
விளக்கில் எண்ணெய் ஊற்றி புதியதாக திரி போட்டு, அதில் நாணயத்தை போட்டு ஏலக்காயும் புதிதாக போட்டு விளக்கு ஏற்றலாம். இந்த பூஜையை தொடர்ந்து ஐந்து வாரம், ஏழு வாரம் அல்லது 11 வாரம் என செய்யலாம். குறிப்பிட்ட காலம் வரை பூஜை செய்து முடிந்தவுடன். அந்த நாணயத்தை நன்றாக துடைத்துவிட்டு மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து பீரோவில் பணம் வைக்கும் இடத்தில் வைத்தால் குபேரரின் அருளால் உங்கள் வீட்டில் செல்வம் சேர்ந்து கொண்டே இருக்கும்.
தினமும் காலையில் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுபவர்களின் வீடு தேடி அதிர்ஷ்டம் தேடி வரும். நாம் நெல்லிக்காய் சாப்பிடும் போது ஆறு நெல்லிக்காய்களை தனியாக எடுத்து அதன் மேல் உள்ள சதைப்பகுதியை வெட்டி எடுத்து விட்டு நெல்லிக்காய் கொட்டைகளை மட்டும் தனியாக எடுத்துக் வெயிலில் காய வைத்து பின் ஒரு வெள்ளை நிற சதுர துணியை விரித்து அதில் நெல்லிக்காய் கொட்டைகளை சேர்த்து ஒரு முடிச்சாக முடிந்து உங்கள் வீட்டின் வட கிழக்கு திசையில் வைத்து விடுங்கள். நீங்கள் இதை சரியாக செய்து வைத்து விட்டால் மட்டும் போதும் நிலையில்லாத உங்கள் வருமானம் நிலையானதாக மாறிவிடும். வருடத்திற்கு ஒருமுறை பழைய நெல்லிக்காய் கொட்டைகளை எடுத்து மனிதர்களின் கால் படாத இடத்தில் போட்டுவிட்டு புதிய நெல்லிக்காய் கொட்டைகளை போட்டு முடிந்து கொள்ளுங்கள்.
பச்சை கற்பூரம்,சோம்பு,ஏலக்காய் இவை மூன்றையும் ஒரு மஞ்சள் துணியில் முடிச்சாக கட்டி குபேர மூலையில் வைத்து தூபம் காண்பித்து வரவும். லவங்கப்பட்டை குச்சியில் பத்து ரூபாய் தாளை சுற்றி வைத்து அதனை நம் பண பெட்டியில் வைத்து வர பண வரவு மிகும். இலவங்கப்பட்டையும் பண வரவை ஈர்க்கும் ஒன்றாகும்.
புதினா இலைகளை பர்ஸில் வைத்து வரலாம். ஒவ்வொரு முறை பணத்தை வெளியே எடுக்கும் போதும் இலையை பார்த்து வர பண வரவு அதிகரிக்கும். மூன்று நாட்களுக்கொரு முறை பர்ஸில் இருந்து புதினா இலைகளை மாற்றி விட வேண்டும்.
வெந்தயம் பணத்தை ஈர்க்கும். கண்ணாடி கிண்ணத்தில் வெந்தையத்தை போட்டு சமையல் அறையில் வடகிழக்கு மூலையில் வைத்து வர என்றும் உணவு பொருட்களுக்கு குறைவிருக்காது. வாரம் ஒரு முறை பழைய வெந்தையத்தை ஓடும் நீரில் போட்டு விட்டு புதியதாய் மாற்றி விடவும்.
உங்களது வீட்டின் அருகில் கோவில்களில் வில்வமரம் இருந்தால் அதை திங்கட்கிழமைகளிலும், வெள்ளிக்கிழமைகளிலும் வாரம் தோறும் தவறாமல் ஐந்து முறை சுற்றி வர வேண்டும். உங்களால் முடிந்தால் 21 முறை சுற்றுவது மிகவும் நல்லது. குறைந்தபட்சம் ஐந்து முறையாவது அந்த வில்வமரத்தை சுற்றி வந்தால் நிரந்தரமான வருமானத்திற்கு வழி கிடைக்கும்.
அமைதியாக இருப்பவர்களிடம் அன்னை மகாலட்சுமி ஆனந்தமாக குடியேறுவாள். பொறுமையும் நிதானமாகவும் நடப்பவர்களின் வீடு தேடி ஓடி வருவாள் அன்னை மகாலட்சுமி. எனவே நாம் பேசும் போதும் நடக்கும் போதும் பொறுமையாக நிதானமாக பேசுவது நடப்பது நல்லது. பண வருமானத்தை அதிகரிக்க நம்பிக்கையுடன் நீங்கள் செய்யக்கூடிய பரிகாரங்கள் உங்களுக்கு வரக்கூடிய தடைகளை நீக்கும். செல்வ வளத்தை அதிகரிக்கக் செய்யும்.