இறந்து போன ஆன்மாக்கள் உங்களை நெருங்குகிறது என்பதை உணர்த்தும் அறிகுறிகள்..!

செய்திகள்

இறப்பிற்கு பின்னாலும் ஒரு வாழ்க்கை உள்ளதென்று பலர் கூறக் கேட்டிருக்கின்றோம். அது உண்மையா அல்லது வெறும் வதந்தியா என்பது குறித்த ஆய்வுகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, உயிரிழிந்த ஆன்மாக்கள் மனித உடலின் துணையின்றி பூமியை வந்தடைந்து எம்முடன் உரையாட முற்படும் என்பதை நீங்கள் அறிவீர்களா?


ஆம், இறந்து போன ஆன்மாக்கள் சில சமயங்களில் அவர்கள் சம்பந்தப்பட்டவர்களுடன் உரையாட முற்படும் என அண்மைய ஆய்வொன்று தெரிவித்துள்ளது.ஏதோ ஒரு விடயம் தொடர்பில் ஏதோ ஒரு தகவலை தெரிவிக்கும் பொருட்டே குறித்த ஆன்மா பூமியை வந்தடைகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சில ஆன்மாக்கள் எம்மை தொடர்பு கொள்ள முற்படும் போது ஒரு சில அறிகுறிகள் தென்படும்.

அவை பின்வருமாறு!நாம் உறங்கும் போது சில சமயங்களில் எமக்கு தெளிவான கனவுகள் வருவதுண்டு. குறித்த கனவுகள் எமக்கு ஞாபகத்தில் இருப்பதோடு அந்த கனவில் ஏதேனும் ஒரு விடயம் தொடர்பில் செய்தியொன்று தெரிவிக்கப்பட்டிருக்கும்.

கண்பார்வை, காது கேட்கும் திறன், சுவாசிக்கும் திறன், சுவைத்தல் மற்றும் தொடுதல் என்பவற்றை மேன்மேலும் தெளிவாக்கும் சக்தி இந்த ஆன்மாக்களுக்கு உண்டு. தெளிவற்ற உருங்களைப் பார்க்க முடிதல், சில வாசனையை உணர முடிவதோடு அந்த வாசனை வேறு யாரையேனும் ஞாபகப்படுத்தல் போன்றவாறான சம்பவங்கள் நிகழும். ஆரம்பத்தில் நம்மால் வித்தியாசத்தை உணர முடியாதிருப்பினும், கண்ணால் பார்வைக்கு அப்பால் உள்ளவற்றை உணர இடம் அளிக்க வேண்டும்.

இலத்திரனியல் உபகரணங்கள் இருப்பின் அவை திடீரென்று வேலை செய்ய ஆரம்பித்தல் மற்றும் வேலை செய்து கொண்டிருக்கும் இலத்திரனியல் உபகரணங்கள் திடீரென நின்று விடுதல் போன்றனவும் இதற்கு உதாரணமே. குறித்த இலத்திரனியல் உபகரணங்கள் பக்கம் நாம் எமது கவனத்தை திருப்பும் வரை இவ்வாறானவை நிகழ்வதுண்டு.

சில விடயங்களை நாம் கற்காமலேயே தெரிந்து வைத்திருப்போம். ‘அதை எப்படி நான் செய்தேன், இதை எப்படி என்னால் செய்ய முடிந்தது’ போன்றவாறான சிந்தனைகள் எமக்கு எழும். நாம் அறிந்திராத விடயங்களை எமக்கு அருகில் உள்ள ஆன்மாவே டெலிபத்தி மூலம் தெரியப்படுத்தியிருக்கும். எனவே இந்த சந்தர்ப்பங்களில் குழப்பம் வேண்டாம்.

இறந்தவர் எவரைப் பற்றியேனும் கதைக்கையில் அல்லது அவர்கள் சம்பந்தப்பட்ட விடங்களை பற்றி கதைக்கையில் உடல் புள்ளரிக்குமாயின் குறித்த ஆன்மா எமது அருகில் இருந்து கொண்டு எம்முடன் உரையாட முற்படுகின்றது என்று அர்த்தம்.

சில நேரங்களில் எம்மை அறியாமலேயே சில இடங்களுக்கு நாம் சென்று விடுவோம். ஏன் செல்கின்றோம் என்ற கேள்விக்கான விடை தெரியாவிடிலும் எமது உள்ளம் அதனை ஆதரித்து நம்மை இழுத்துச் செல்லும். இந்த சந்தர்ப்பங்களில் எமக்கு தெரியாத ஒரு விடயத்தை தெரியப்படுத்தவோ அல்லது எம்மிடம் மறைக்கப்பட்ட சில உண்மைகளை புரியவைக்கவோ ஆன்மாக்கள் இவ்வாறு செயற்படும்.மேற்குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் பயத்தை விடுத்து உமது உள்ளுணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். – © Tamilvoice.com | All Rights Reserved

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *