தமிழ் சின்னத்திரையில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை கேப்ரில்லா. இவர் விஜய் டிவியில் ஜோடி ஜூனியர் என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி மூலம் கலைத்துறையில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து 7C என்ற தொடரிலும் நடித்து அசத்தார். அதில் இவரின் நடிப்பு திறமையை பார்த்து சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளியான 3திரைப்படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அந்தத் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இவருக்கு அடுத்தடுத்து பல பட வாய்ப்புகளும் குவிந்தன. பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் விளையாடிய இறுதி சுற்று வரை சென்ற நிலையில் இவருக்கு என தனி ஒரு ரசிகர் பட்டாளுமே உருவானது. தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே இரண்டு நிகழ்ச்சியில் கதாநாயகியாக நடித்து வருகின்றார்.

இதனிடையே இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம். தற்போது அவர் காந்த கண்ணழகியாக மாறி ஹாட்டான லுக்கில் போட்டோ சூட் வீடியோவை பகிர்ந்து உள்ள நிலையில் அந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.
https://www.instagram.com/reel/CsQxWU5gUqD/?utm_source=ig_web_copy_link