ஒல்லி பெல்லி இடுப்பை காட்டி… கவர்ச்சியில் ரவுண்டு கட்டும் தர்ஷா குப்தா!

செய்திகள்

விஜய் டிவி குக்வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை தர்ஷா குப்தா, பார்த்தவுடன் பக்குனு பற்றிக்கொள்ளும் அழகு புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து இளசுகளை வளைத்துப் போட்டுள்ளார்.சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் இவர், நேரம் கிடைக்கும் போதெல்லாம் போஸ்ட் போடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.


பார்த்தவுடன் சுட்டி இழுக்கும் அழகும், வசீகரமான கண், வளைந்து நெளிந்த இடை என கொள்ளை அழகை மொத்தமாக குத்தகைக்கு எடுத்தவர் தர்ஷா குப்தா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக்வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானார். ஆனால், அதற்கு முன்பாக ஒரு தொலைக்காட்சி தொடரில் நடித்துள்ளார்.

ஜீ தமிழில் ஒளிபரப்பான முள்ளும் மலரும் சீரியலில் தர்ஷா குப்தா கதாநாயகியாக நடித்திருந்தார். ஆனால், அந்த தொடரில் இவரை பார்க்கும் போது, இயல்பான பக்கத்துவீட்டு பெண் போல, இழுத்துப் போர்த்திக் கொண்டு அடக்க ஒடுக்கமான குடும்ப குத்துவிளக்காக வலம் வந்தார்.


சினிமாவில் உச்சத்தை தொட அடக்க ஒடுக்கம் மட்டும் போதாது கிளாமரும் காட்ட வேண்டும் என்பதை புரிந்து கொண்ட தர்ஷா குப்தா. தற்போது இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற சமூகவலைத்தளத்தில் கவர்ச்சியில் கதகளி ஆடி வருகிறார். இதையடுத்து இவர் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 1.5 பாலோயர்ஸ்களை தொட்டது.

கிளாமர் போட்டோஷூட் பக்காவாக ஒர்க்கவுட்டாகி குக் வித் கோமாளி சீசன் 2வில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றுத்தந்தது. இதையடுத்து, செந்தூரப்பூவே தொடரில் ஐஸ்வர்யா என்ற வில்லி கதாபாத்திரத்தில் மிரட்டி கலக்கினார். மேலும், இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகின ருத்ர தாண்டவம் திரைப்படத்திலும் நடித்திருந்தார் இந்த படம் ஓரளவு பெயரை பெற்றுத்தந்தது.

ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்தாலும், இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் தர்ஷா குப்தா,சிவப்பு நிற சேலையில் முந்தானையை நழுவவிட்டு விதவித போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்தில், அவர் கையில் போட்டு இருக்கும் டாட்டூ, நெஞ்சில் போட்டு இருக்கும் டாட்டூ என அனைத்தும் அம்சமாக தெரிகிறது. இந்த புகைப்படம் பல லைக்குகளை குவித்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *