யாழ்ப்பாணத்தில் இருக்கும் தமிழர்கள் கதைக்கும் கதை கொச்சைத் தமிழா??

செய்திகள்

யாழ்ப்பாண தமிழர்கள் நிச்சயமாக கொச்சைத் தமிழ் பேசவில்லை அவர்கள் தமிழ் பேசும் சமூகத்தினரிடையே உண்மையில் மிகவும் நேர்த்தியான அழகான இலக்கணத்தோடு கூடிய தமிழ் பேசுகின்றனர்.நான் யாழ்ப்பாண தமிழன் இல்லை நாளும் அவர்களோடு பழகி பேசி இருக்கின்ற அனுபவத்தில் கூறுகின்றேன். நாம் ஒரு விடயத்தை நன்றாக நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் மொழிகளில் இரண்டு வகையுண்டு ஒன்று இறந்த மொழி Dead language இரண்டாவது உயிரோட்டமுள்ள Living language மொழி


நாம் இரண்டாவது வகை முதலாவது வகை மொழியினர் தற்பொழுது எழுத்துவழக்கு மாத்திரமே இருக்கும். மொழி பேசப்படாது. இவ்வகையான மொழியின் அர்த்தங்கள் எந்த சூழ்நிலையிலும் மாறுபடாமல் அப்படியே இருக்கும் இன்னும் நூறு வருடம் கழித்து வாசித்தாலும் அதேதான் அர்த்தம் புரிந்து கொள்ள முடியும் ஆனால் வாழும் மொழியில் 50 வருடம் கழித்து வாசித்தால் தமிழை தமிழல் மொழிபெயர்க்க வேண்டிய நிலை ஏற்படும். உதாரணம் திருக்குறள்

ஆனால் உயிரோட்டமுள்ள மொழிகளுக்கு நாளுக்கு நாள் இடத்துக்கு இடம் தேவைக்கு ஏற்ப புதிய சொற்கள் வந்து சேரும். உதாரணமாக நாம் தமிழர் கண்டுபிடிக்காத பொருட்கள் அனைத்திற்கும் ஏதேனும் ஒரு வேற்று மொழியே பெயராக இருக்கும். அந்த சந்தர்ப்பங்களில் நம் மொழிக்கு ஏற்ப நாம் பெயர்கள் வைப்போம். அல்லது வேற்று மொழி பெயரையே நாம் பயன்படுத்துவோம். இவ்வாறு மொழியில் அவர்கள் வாழும் சமூகமும் தாக்கம் செலுத்தும். இந்தியாவின் இந்திய அதிகமாக பேசப்படும் பிரதேசங்களில் வாழ்கின்றவர்கள் தமிழுடன் இந்திய கலந்து பேசுவார்கள். இலங்கையில் சிங்களவர்களோடு இணைந்து வாழ்கிறார்கள் சிங்கள மொழியில் வார்த்தைகளை கலந்து தமிழ் பேசுவார்கள். ஆனால் அவர்கள் பேசும் மொழி தமிழ்.

இன்று நம் தமிழ் மொழியில் ஆங்கிலம் கலந்துள்ளது. ஆங்கிலம் கலந்த தமிழ் மொழி இந்தியாவில் அதிகம் பேசப்படுகிறது அதற்கு இப்பொழுது புதிதாக ஒரு பெயரும் வைத்துள்ளார்கள் “தமிங்கிலம்” இதுதான் அதன் பெயர் இதை நன்கு அறிந்து கொண்ட கூகுள் கூட இப்பொழுது கூகுள் தேடுபொறியில் இந்தியன் இங்கிலீஷ் என்று ஒன்றைக் சேர்த்துள்ளது ஏனென்றால் இந்தியாவில் ஆங்கிலம் கூட

வித்தியாசமாகத்தான் பேசுகிறார்கள். நாம் இந்திய நாட்டில் கூகுள் பயன்படுத்தினால் சாதாரணமாக ஆங்கிலம் தமிழ் கலந்த வார்த்தைகளை பயன்படுத்தினாலும் அது தமிழாகவே ஏற்றுக்கொள்ளப்படும். நீங்கள் அதைப் பரீட்சித்துப் பார்க்க வேண்டுமானால் கூகுள் ட்ரான்ஸ்லேட் சென்று அங்கே ஆங்கிலம் கலந்து அதாவது தமிழ்மொழியில் ஆங்கில வார்த்தைகளை டைப் செய்யுங்கள் அதில் இருக்கும் பிழைகளை கூட ஆங்கில வார்த்தையிலேயே திருத்தி தமிழ் எழுத்துக்களில் கொடுக்கும். அந்த நிலை நம் தமிழுக்கு ஏற்பட்டுள்ளது.

உதாரணமாக இந்திய அநேக தமிழர்களுக்கு தமிழ் என்ற சொல்லை சரியாக சொல்லத் தெரியாது. அவர்கள் தமில் என்றே அதை சொல்வார்கள். தமிழ் என்ற உச்சரிப்பு சரியாக வராது.சிலவேளை இந்த கேள்வியை கேட்ட நபர் வெகுளியாக கேட்டிருக்கலாம். அல்லது யாழ்ப்பாண தமிழ் மொழியை கொச்சைப்படுத்த நினைத்தே கேட்டிருக்கலாம் எது எப்படி இருந்தாலும் நம் மொழி சார்ந்த சரியான விடயங்களை நான் தெரிந்துகொள்ள வேண்டும் மொழியை கொச்சைப்படுத்த கூடாது அதை வளர்க்க வேண்டும். ஏனென்றால் தமிழ் நம் தாய்மொழி.

நம் தாய்மொழியின் உரிமைக்காக குரல் கொடுக்கும், உயிர் கொடுக்கும், உயிர் தியாகம் செய்த, ஏக்கம் உடைய, மொழியில் பெருமை கொள்ளும், மொழியை வளர்க்கும், முதன்மை சமூகமாக இலங்கை யாழ்ப்பாண இலங்கைத் தமிழர்களே உள்ளனர். தயவுசெய்து யாரும் அவர்களை கொச்சைப்படுத்தவோ சீண்டவோ வேண்டாம். ஒரு தமிழனாய் எனக்கு மனம் வலிக்கின்றது.நன்றி
நான் ஜெயமணி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *