உங்க வீட்ல நீங்க எத்தனையாவது குழந்தைனு சொல்லுங்க… உங்கள பத்தின ரகசியங்கள நாங்க சொல்றோம்..!

செய்திகள்

இந்த பூமியில் மனிதராய் பிறப்பது என்பது வரம். நாம் பிறந்ததற்கு பின்னால் நிச்சயம் ஒரு காரணம் இருக்கும். நாம் பிறக்கும் போதே நமது விதி நிர்ணயிக்கப்பட்ட ஒன்றாகும். நமது எதிர்காலம், நாம் வாழ்க்கையில் சந்திக்கப் போகும் அனுபவங்கள், சம்பவங்கள் என அனைத்தும் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டதாக இருக்கும்.


நம்முடைய ஆளுமையையும், குணங்களையும் தீர்மானிப்பதில் நமது பிறப்புடன் தொடர்புடைய பல விஷயங்கள் முக்கியப்பங்கு வகிக்கிறது. அதில் நாம் எதனாவது குழந்தையாக பிறக்கிறோம் என்பதும் முக்கியமான ஒன்றாகும். இந்த பதிவில் பிறப்பு வரிசையை பொறுத்து ஒருவரது ஆளுமை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது என்று பார்க்கலாம்.

ஒரு குழந்தை எத்தனையாவது குழ்நதையாக பிறக்கிறது என்பது அவர்களை அவர்களே எப்படி பார்க்கிறார்கள் என்பதில் மாற்றத்தை ஏற்படுத்தும். உதாரணத்திற்க்கு பலரிடையே நடத்தப்பட்ட ஆய்வில் நடுவில் பிறக்கும் குழந்தைகள் எப்பொழுதும் தன்னை பற்றி எதிர்மறையாகவே சிந்திப்பதாக ஆய்வுகள் கூறுகிறது. அதேபோல கடைசி குழந்தைகள் மூத்தவர்கள் அனுமதிக்கும் செயல்களை மட்டுமே செய்ய முடிவதாக கூறுகிறார்கள்.

ஆராய்ச்சியாளர்களின் கருத்துப்படி குழந்தைகளின் பாலினத்தை போலவே அவர்களின் பிறப்பு வரிசையும் முக்கியமானதாகும். ஒரே குடும்பத்தில் வாழ்ந்தாலும் இரண்டு குழந்தைகளும் ஒரே பெற்றோரை உணர்வதில்லை. ஏனெனில் குழந்தைகள் எப்போதும் ஒரே மாதிரி அனைத்து குழந்தைகளிடமும் நடந்து கொள்ள மாட்டார்கள். நீங்கள் அதிகம் கவனிக்கப்படும் குழந்தையாக இருந்தால் அடுத்த குழந்தை பிறந்தவுடன் உங்கள் நிலை மாறிவிடும், உங்களின் பொறுப்பு மாறிவிடும்.

முதல் குழந்தைகள் பிறக்கும் போது அவர்கள் அந்த தம்பதியினரின் கௌரவத்தின் அடையாளமாக இருப்பார்கள், அதனால் அவர்களின் மீது அதிக அன்பு இருக்கும். நடுவில் பிறக்கும் குழந்தைகள் எப்போதும் முதல் குழந்தைகளால் கட்டுப்படுத்த படுவார்கள். இவர்கள் புத்திசாலிகளாகவும், போட்டியை விரும்புபவர்களாகவும் இருப்பார்கள். குழந்தைகள் பிறந்தவுடன் பெற்றோர்களின் உலகமே மாறிவிடும்.


முதல் குழந்தைகள் இயற்கையாகவே தலைமைப்பண்பு கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்கள் ஆச்சரியங்களை விரும்பாத நம்பகமான, மனசாட்சிக்கு அஞ்சும் மற்றும் பரிபூரணவாதிகளாகவும் இருப்பார்கள். இவர்கள் பெரும்பாலும் சற்று ஆக்ரோசமானவர்களாக இருப்பார்கள். முதல் குழந்தையாக இருப்பதால் இவர்கள் அனைத்திற்கும் மற்றவர்களிடம் இருந்து அனுமதி பெற வேண்டியிருக்கும். இவர்களை பெற்றோர்கள் எப்பொழுதும் ஊக்குவித்து கொண்டே இருப்பார்கள்.

பெற்றோரிடம் இருந்து பொறுப்பை வாங்கிக் கொள்ளும் இவர்கள் குடும்பத்தில் அனைத்தும் சரியாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். இவர்களின் தவறை இவர்கள் ஒருபோதும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். உலக வரலாற்றில் இதுவரை அதிகளவில் விண்வெளிக்கு சென்றவர்கள், அதிக நோபல் பரிசு வென்றவர்கள் என அனைவருமே முதல் குழந்தையாக இருப்பது எதார்த்தமாக நடந்தது அல்ல.

நடுவில் பிறக்கும் குழந்தைகள் எப்பொழுதும் முதல் குழந்தைகளுக்கே அனைத்து உரிமைகளும், பொறுப்புகளும் கொடுக்கப்படுவதாக நினைப்பார்கள். இவர்கள் பெரும்பாலும் நன்கு பேச்சுவார்த்தை நடத்த கூடியவர்களாகவும், யதார்த்தமான எதிர்பார்ப்புகளை கொண்டவர்களாகவும், சுதந்திரத்தை விரும்புபவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் குடும்ப பாலத்தின் நடுவில் இருப்பதால் இவர்கள் பெரும்பாலும் குடும்பத்திற்கு வெளியே தனக்கான ஆதரவுகளை உருவாக்கி கொள்வார்கள். இவர்கள் ஒருபோதும் பின்வாங்க மாட்டார்கள் அதேசமயம் தங்கள் மூத்த சகோதரருக்கு நேர்மாறாக இருப்பார்கள்.

இந்த உலகம் தனக்கு குறைவான கவனம் மட்டுமே வழங்குவதாக இவர்கள் நினைப்பதால் இவர்கள் மிகவும் இரகசியமானவர்களாக இருப்பார்கள். இவர்கள் தங்கள் எண்ணங்களையோ, உணர்ச்சிகளையோ வெளிப்படுத்த மாட்டார்கள். இவர்கள் மற்றவர்களின் மனதை எளிதில் படிக்க கூடியவர்களாக இருப்பார்கள், அதேசமயம் சூழ்நிலைகளை சரியாக ஆராய்ந்து அமைதியை ஏற்படுத்துபவர்களாக இருப்பார்கள். இவர்கள் ஒழுங்கீனமாக நடந்து கொள்ள வாய்ப்பு குறைவு, அனைவருக்கும் உறுதுணையாகவும், ஆறுதலாகவும் இருப்பார்கள்.

பொதுவாக இருக்கும் நம்பிக்கைப்படி கடைசிக் குழந்தைகள் எப்பொழுதும் வேடிக்கையானவராகவும், விளையாட்டுத்தனம் மிக்கவர்களாவும் இருக்கமாட்டார்கள். அவர்கள் தங்களின் மூத்தவர்களை வலிமையானவர்களாகவும், புத்திசாலிகளாகவும் பார்ப்பார்கள். அதனால் அவர்களுக்கு ” நான் யார் என்று காட்டுகிறேன் ” என்ற அணுகுமுறை இவர்களிடம் இருக்கும். அனைவருக்கும் பிடித்தவர்களாக இருக்கும் இவர்கள் அதிக கற்பனைத்திறன் உள்ளவர்களாக இருப்பார்கள். கடைசிக் குழந்தையாக இருப்பதால் இவர்கள் பெரும்பாலும் பண விஷயத்தில் பொறுப்பற்றவர்களாக இருப்பார்கள். இவர்கள் மகிழ்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்களாக இருப்பார்கள்.

கடைசி குழந்தைகள் மூத்த குழந்தைகள் போல அதிக பொறுப்பையோ அல்லது நடுக்குழந்தைகளை போல குறைவான கவனத்தையோ பெறுவதில்லை. பெரும்பாலான கடைசிக் குழந்தைகள் தங்கள் மூத்தவர்களை போல இருக்கக்கூடாது என்று வித்தியாசமான வழியை தேர்ந்தெடுப்பார்கள். இவர்கள் வசீகரமானவராக இருந்தாலும் இவர்கள் எளிதில் ஏமாற்றப்படக் கூடியவர்களாகவும், பொறுப்பற்றவராகவும் இருப்பார்கள். ஆய்வுகளின் படி கடைக்குட்டிகள் எப்பொழுதும் வசீகரமானவர்களாகவும், பாசக்காரர்களாகவும், எளிதில் ஏமாறக் கூடியவர்களாகவும், பழிவாங்கும் எண்ணம் உடையவர்களாகவும், கலையில் ஆர்வமுள்ளவர்களாகவும், பொறுமையற்றவைகளாகவும், கவனத்தை ஈர்க்கக் கூடியவர்களாகவும் இருப்பார்கள்.

குடும்பத்தில் ஒரே குழந்தையாக இருப்பவர்கள் முதல் குழந்தையை போன்ற குணாதிசயங்களுடன் பெற்றோர்களின் அதிகபட்ச எதிர்பார்ப்புகளை சுமப்பவர்களாக இருப்பார்கள். இவர்கள் முதல் குழந்தைகளை விட சில விஷயங்களில் அதிக ஆளுமையுடன் இருப்பார்கள். இவர்கள் பரிபூரணமாக இருக்க வேண்டுமென்ற குணம் சிலசமயம் இவர்களுக்கும், மற்றவர்களுக்கும் பிரச்சினைகளை உண்டாக்கலாம். மற்றக் குழந்தைகளை விட அதிக கற்பனைத்திறனும், கனவு காணும் குணமும் கொண்டவர்களாக இருப்பார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *