கொழும்பு செட்டியார்தெரு நிலவரங்களின் படி இன்றைய தினம் (22.05.2023) தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக தெரியவருகிறது.அதன்படி இன்றைய தினம் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 157,250 ரூபாவாக பதிவாகியுள்ளது.இதேவேளை 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 170,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 152,600 ரூபாவாக பதிவாகியிருந்த நிலையில் இன்று 4,650 ரூபாவால் அதிகரித்துள்ளது.இதேவேளை 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை கடந்த வெள்ளிக்கிழமை 165,000 ரூபாவாக பதிவாகியிருந்த நிலையில் இன்று 5000 ரூபாவால் அதிகரித்துள்ளது.