அமெரிக்காவில் மகிழ்ச்சியான வேலை மரம் வெட்டும் வேலைதானாம்.பத்தாம் இடத்தில் கணிணி தொழில் முதலான ஆபிஸ் தொழில்கள் வருகின்றன.மரம் வெட்டும் வேலையில் நல்லா சம்பாதிக்கலாம். ரிஸ்க் உண்டு. ஆனால் என்னதான் மரங்களை வெட்டினாலும்,

இயற்கையின் நடுவே இருப்பது பணியிட அழுத்தத்தை அத்தனை குறைக்கிறதாம். தவிர மரம் வெட்டுபவர்கள் இடையே டீம் ஒர்க் நல்லா இருக்கும். நல்ல பணியிட சூழல், நட்பு, சம்பளம் எல்லாம் இருப்பதால் அமெரிக்காவின் மிக மகிழ்ச்சியான வேலையாக அது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது
தவிர மரம் வெட்டுவதால் இயற்கை அழிவதும் இல்லை. மரம்கம்பனிகள் பெரிய அளவில் நிலம் வாங்கி மரம் நட்டு, அவற்றை தான் வெட்டி எடுத்து பயன்படுத்துகிரார்கள். அந்த குற்ற உணர்வும் இல்லை.இப்ப எதுக்கு இந்த கதை எல்லாம் என கேட்கிறீர்களா?வீட்டு தோட்டத்தில் பத்து மாங்கள் உள்ளன. அவற்றின் கிளைகளை வெட்டவேண்டும். இல்லையென்றால் மரமே விழுந்துவிடும்.
அதில் சில பக்கத்து வீட்டு காம்பவுன்டிலும் எட்டிபார்த்துக்கொன்டு இருந்தன. பக்கத்து வீட்டு சுவற்றில் விழுந்தால் என்ன ஆவது?அதனால் மரம் வெட்டுக் கம்பனிகளை அழைத்து “மரத்தை ட்ரிம் பண்ணுங்க” என்றதுக்கு $800க்கு கொடேசன் கொடுத்தார்கள். ஒரு சின்ன இலை கூட இல்லாமல் மரம், கிளை எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு போய்விடுவார்கள்.

$800 வாங்கினால் அப்புறம் ஏன் அது அமெரிக்காவின் மகிழ்ச்சியான வேலையாக இருக்காது என யோசித்தபடி நானே ஒரு எலெக்ட்ரிக் கோடாலி வாங்கி வெட்டிடலாம் என கடைக்கு போய் கேட்டால் $630 விலை சொன்னார்கள்.$150 மிச்சம் என்றாலும் இன்னும் எதாவது மிச்சம் பண்ணமுடியுமா என பார்த்தால் “எலெக்ட்ரிக் கோடாலியை வாடகைக்கு கொடுக்கிறோம்” என அதே கடையில் சொன்னார்கள். நாள் வாடகை $41 தான்.
கோடாலியை உடைத்துவிட்டால்? பிரச்சனை இல்லை. $7 இன்சூரன்சு.மகிழ்ச்சியுடன் அதை வாடகைக்கு எடுத்து வந்தேன். நாள் முழுக்க எல்லா மரக்கிளைகளையும் அறுத்து, அதையும் துண்டாக்கினேன். ஏகபட்ட சுள்ளிகளும் காய்ந்த மரங்களும் தேறின.அதை எல்லாம் அதே மரங்களுக்கு அடியில் காயட்டும் என போட்டுவைத்துவிட்டேன். செங்கல் எடுத்து அடுக்கி விறகடுப்பு செய்து சீனியர் நேற்று பிரியாணியும் சமைத்துவிட்டார்.
கோடை முழுக்க இப்படி விறகடுப்பு சமையல். அதில் வரும் கரி எல்லாம் தோட்டத்துக்கு அருமையான உரம்.அமெரிக்காவின் மகிழ்ச்சியான வேலை என ஏன் இதை சொல்லமாட்டார்கள்னேன்?~ நியாண்டர் செல்வன்