வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள விகாரைகள் மற்றும் நாடளாவிய ரீதியில் உள்ள விசேட பௌத்த தொல்பொருள் தலங்களின் புனரமைப்புப் பணிகளை உறுதிப்படுத்துமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் அஸ்கிரிய மகா விகாரை வலியுறுத்தியுள்ளது.அஸ்கிரிய மகா விகாரையின் வரக்காகொட சிறி ஞானரான தேரரினால், அதிபருக்கு இன்றைய தினம் (21) அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நடைமுறைப்படுத்தப்படும் தொல்பொருள் தலங்கள் சம்பந்தமான திட்டங்களை அவ்வாறே தொடர்ந்து முன்கொண்ட செல்லல் மற்றும் வெளி தரப்புகளிலிருந்து பெற்றுக்கொள்ளப்படும் உதவிகளை அதற்காகப் பயன்படுத்தல் தொடர்பிலும் அவதானம் செலுத்த வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.
மேலும், இனவாத மற்றும் மதவாத பிரச்சினைகள் ஏற்படுவது போன்றதான பிம்பத்தை, நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் இடம்பெறுகின்ற சம்பவங்களின் மூலம் காணக்கூடியதாக உள்ளது.எனவே, அவற்றைத் தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
இந்த விடயங்கள் தொடர்பில் தாங்கள் விசேட கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்வதாக அஸ்கிரிய மகா விகாரை, அதிபருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.