9 தலைமுறைக்கு தேவையான பணம், செல்வம் சேர்க்க வேண்டுமா ? உங்களிடம் சிறிது சில்லறை இருந்தால் போதுமாம்..!

பிரதான செய்திகள்

பொதுவாக நாம் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் வாழ்நாள் முழுவதும் உழைத்துக் கொண்டிருப்பது நமக்காக மட்டுமா, அல்ல நம்முடைய குழந்தைகள், நம்முடைய மனைவி, நம்முடைய பெற்றோர்கள், என நம் குடும்பத்தை சார்ந்த அனைவருக்காகவும்


ஏன் நம்மளை அடுத்தடுத்து வரும் தலைமுறைகளுக்காகவும் தான் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் நாம் செயல்படுவோம். அதனால் இன்று ஒன்பது தலைமுறைகளுக்கான சொத்துக்களையும், செல்வங்களையும், பணத்தை எப்படி சேர்ப்பது அதற்காக என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் நாம் இந்த ஆன்மீக குறித்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

இப்படி நம் அடுத்து வரும் ஒன்பது தலைமுறைகளுக்கும் தேவையான அளவு செல்வங்களை சேர்ப்பதற்காக. நாம் ஒரு சில்லறை பரிகாரம் செய்ய வேண்டும் அதற்காக நமக்கு பித்தளையால் செய்யப்பட்ட செம்பு, வெள்ளியால் செய்யப்பட்ட செம்பு, செம்புவால் செய்யப்பட்ட செம்பு

என எது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் சில்வரால் செய்யப்பட்ட செம்பை தவிர எது வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். இதற்கு அடுத்த படியாக சில்லறைகள் தேவைப்படும். இந்த பொருட்களை எல்லாம் எடுத்துவிட்டு உங்களது பூஜை அறையை தயார் செய்து கடவுள்களின் படங்களுக்கு பூக்கள் அணிவித்து கொள்ளுங்கள்.

பின் பூஜை அறையில் அமர்ந்து ஒரு பெரிய தாம்பூல தட்டை வைத்து அதில் பச்சரிசியை பரப்பி. நாம் வைத்திருக்கும் செம்புவை அதன் நடுவில் வைத்து அதில் நாம் வைத்திருக்கும் சில்லறைகளை போட்டு செம்பை நிறைத்துக் கொள்ளுங்கள். நாம் போட்ட சில்லறைகளின் மீது உங்கள் வீட்டில்

இருக்கும் வெள்ளி நாணயம் அல்லது தங்கம் நாணயத்தை வையுங்கள். எதுவும் இல்லை என்றாலும் பரவாயில்லை வெறும் நாணயங்களை வைத்து இந்த பூஜை செய்யுங்கள் தங்கம் வாங்கக்கூடிய யோகம் கூடி வரும். பின் இந்த பூஜைக்கு நெய் வைத்தியமாக பாலில் பண கற்கண்டு சேர்த்து வைத்து விடுங்கள்.

பின் நாம் நாணயங்கள் நிறைப்பி வைத்திருக்கும் செம்புக்கு தாழம்பூ அல்லது வேறு ஏதாவது நல்ல மனம் நிறைந்த பூக்களை கொண்டு அர்ச்சனை செய்ய வேண்டும். அர்ச்சனை செய்யும் போது ” ஓம் அஷ்டலட்சுமி நமஹ” என்ற மந்திரத்தை 27 முறை சொல்ல வேண்டும். இந்த மந்திரத்தை சொல்லும்போது அனைத்து லட்சுமிகளும் உங்கள் வீட்டில் வாசம் செய்வார்கள். இப்படி இந்த பூஜையை 19 நாட்கள்

தொடர்ந்து செய்து வர வேண்டும். 19 நாட்கள் பூஜை முடிந்த உடன் நாம் செம்புவில் நிறைத்து வைத்திருந்த நாணயங்களை ஒரு மஞ்சள் துணியில் கட்டி வீட்டில் இருக்கும் பீரோ, பணம் வைத்திருக்கும் இடம் அல்லது நீங்கள் தொழில் செய்யும் இடம் என எந்த இடமாக இருந்தாலும் பணம் வைக்கும் இடத்தில் வைத்து விடுங்கள். இதன் மூலமாக உங்களின் ஒன்பது தலைமுறைகளுக்கும் பணமும், சொத்துக்கள் மற்றும் செல்வங்களும் சேர்ந்துவிடும்.source: behindtalkies

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *