பீட்சா அதிகம் விரும்பி சாப்பிடுபவர்களுக்கு ஓர் முக்கிய தகவ்கள்..!!

பிரதான செய்திகள்

பீட்சா அடிக்கடி சாப்பிடுவதால் உடம்பில் என்ன நடக்கும் என்பதை குறித்த தகவலை இங்கு காணலாம்.இன்று சிறியவர்கள் மட்டுமின்றி பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவாக பீட்சா இருந்து வருகின்றது. இதன் சுவையானது சீஸ் உள்ளிட்ட பல பொருட்களை கொண்டு தயார் செய்யப்படுகின்றது.


இதில் சேர்க்கப்படும் சீஸ், பதப்படுத்தப்பட்ட இறைச்சியில் கொழுப்புகள் அதிகமாக இருப்பதால் கொலஸ்ட்ரால் அளவும் அதிகமாகின்றது.இதய நோய் ஆபத்தை ஏற்படுத்தும் பீட்சாவை ஒருவர் 3 அல்லது அதற்கு மேல் சாப்பிட்டால் நிச்சயம் உடம்பிற்கு கேடு விளைவிக்கும்.

நீங்கள் சாப்பிடும் ஒரு துண்டு பீட்சாவில் 400 கலோரிகள் காணப்படுவதால், நீங்கள் அதிகமாக சாப்பிட்டால் உடல் எடை கடகடவென அதிகரித்துவிடும்.சராசரியாக ஒரு நபர் ஒரு நாளைக்கு 2 ஆயிரம் கலோரிகளை உணவில் எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் நீங்கள் பீட்சா சாப்பிட்டால் அதிகபட்சம் 60 சதவீதம் கலோரியை எடுக்க வேண்டியதாயிருக்கும்.


பெப்பரோனி, பன்றி மாமிசம் போன்ற அதிக கொழுப்புள்ள பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை பீட்சாவில் மேல்புறமாக தூவி சாப்பிடுவதால் குடல், வயிற்று புற்றுநோய் அபாயம் ஏற்படும்.பீட்சாவை அதிகமாக சாப்பிட்டால், செரிமான பிரச்சினை மற்றும் மந்தமான வளர்சிதை மாற்றத்தினை உருவாக்கும்.

இதுவே நீங்கள் மைதாவிற்கு பதிலாக கோதுமை சேர்த்து வீட்டிலேயே தயாரித்து சாப்பிட்டால் அதிக பிரச்சினையை சந்திக்க மாட்டீர்கள். ஆனால் உணவகத்தில் வாங்கி சாப்பிட்டால் அளவாக சாப்பிடுவது மிகவும் நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *