வீட்டில் அடிக்கடி தூசி படிகிறதா? அப்போ இப்படி செஞ்சு பாருங்க.. வீடு எப்பவும் சுத்தமா இருக்கும்..!!

பிரதான செய்திகள்

வீட்டை சுத்தம் செய்வது என்பது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. அதிலும் அடிக்கடி தூசி படிந்து கொண்டே இருந்தால், எப்பொழுதும் சுத்தம் செய்து கொண்டே இருக்க வேண்டியிருக்கும். குழந்தைகள் இருக்கும் வீட்டில் தூசி படியாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியமான ஒன்றாக உள்ளது. வீட்டில் படியும் தூசியால் ஆஸ்துமா, சுவாச கோளாறுகள், கண்களில் நீர் வடிதல் அடிக்கடி

சுவாச தொற்றுக்கள் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது.எனவே உங்கள் வீட்டை எளிமையான முறையில் எப்படி தூசி இல்லாமல் பார்த்துக் கொள்ளலாம் என்பதற்கான சில டிப்ஸ்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. இந்த டிப்ஸ்களை பின்பற்றி உங்கள் வீட்டை எப்பொழுதும் நீங்கள் சுத்தமாக வைத்துக் கொள்ளலாம். அதைப் பற்றி இக்கட்டுரையில் நாம் காண்போம்.

எப்பொழுதும் உங்கள் பழைய படுக்கை விரிப்புகளையே வைக்காதீர்கள். முடிந்த வரை தூசிகளை தட்டி புதிய படுக்கை விரிப்புகளை மாற்றுங்கள். தலையணை உறைகளையும் அடிக்கடி மாற்றுங்கள். ஏனெனில் அதிகளவு தூசி படியும் இடமாக படுக்கை விரிப்புகள் உள்ளது. எனவே அடிக்கடி மாற்றி சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.

தரையில் இருக்கும் மூலை முடுக்குகளில் உள்ள தூசிகளைக் கூட துடைப்பம் கொண்டு நன்றாக சுத்தம் செய்து விடுங்கள். இதற்கு டஸ்ட்பேனைக் கூட நீங்கள் பயன்படுத்தலாம். தரையில் இருக்கும் அழுக்குகளை அடிக்கடி நீக்குவது தூசிகள் சேராமல் தடுக்க உதவுகிறது.

டிஹைமிடிஃபையர் அறையின் ஈரப்பதத்தை குறைக்க உதவுகிறது. வீட்டின் ஈரப்பதத்தை குறைப்பது தூசிகள் அதிகமாக படிவதை தடுக்கிறது. இதன் மூலம் தூசிகள் மற்றும் பூச்சிகளை எளிதாக கட்டுப்படுத்த முடியும். எனவே அறையின் ஈரப்பதத்தை குறைக்க பல்வேறு வகையான டிஹைமிடிஃபையர் (Dehumidifier) கிடைக்கிறது. அதை வாங்கி நாம் பயன்படுத்தி வரலாம்.

ரோலர் பிளைண்ட்கள் வீட்டில் உள்ள தூசிகளை அகற்றாது. ஆனால் வீட்டில் உள்ள தூசிகளை குறைக்க உதவி செய்யும். எனவே உங்கள் வீட்டில் திரைச்சீலைக்கு பதிலாக ரோலர் பிளைண்ட்களை பயன்படுத்தி வரலாம். இந்த ரோலர் பிளைண்ட்களை அகற்றுவதும், சுத்தம் செய்வதும் மிகவும் எளிதானது.

வீட்டில் உள்ள அனைத்து தூசிகளையும் போக்கவும் அடிக்கடி சுத்தம் செய்யவும் வாக்யூம் க்ளீனரை பயன்படுத்தி வரலாம். வாக்யூம் க்ளீனர்கள் எளிதாக காற்றில் இருந்து வரும் 99.9% மகரந்தம் துகள்கள் , விலங்குகளின் முடிகள் மற்றும் பாக்டீரியாக்களை அகற்றும் அதிக திறன் கொண்டது. இதன் மூலம் மூலை முடுக்குகளையும் நீங்கள் எளிதாக சுத்தம் செய்ய முடியும்.

வீட்டில் உள்ள அலமாரிகளில் தூசிகள் படியாமல் இருக்க மைக்ரோ ஃபைபர் துணியை பயன்படுத்துங்கள். இந்த துணிகளில் நூலிழைகள் மிக நெருக்கமாக இருப்பதால் அவை எளிதாக தூசிகளை நீக்குகிறது. மைக்ரோ ஃபைபர் துணியைக் கொண்டு எளிதாக தூசிகளை துடைக்கவும் முடியும். கண்ணாடிப் பொருட்களை துடைக்க இது மிகவும் ஏற்றது. அலமாரியில் இந்த துணியை விரிப்பாக கூட நீங்கள் பயன்படுத்தலாம்.

செல்லப் பிராணிகளை நன்றாக குளிக்க வைத்து எப்பொழுதும் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். செல்லப் பிராணிகளின் ரோமம் மற்றும் பொடுகுகளை அடிக்கடி நீக்குங்கள். அவற்றை சுத்தம் செய்ய வீட்டில் தனி இடத்தை பயன்படுத்துங்கள். செல்லப் பிராணிகளை எல்லா இடத்திலும் வைத்து சுத்தம் செய்யாதீர்கள்.

வீட்டில் இருக்கும் தூசியை போக்க தவறாமல் மாப்பை பயன்படுத்துங்கள். வீட்டின் தரைக்கு மாப் போடுவது தூசிகள் படியாமல் இருக்க உதவி செய்யும்.காற்று சுத்திகரிப்பான் மூலம் ஜன்னல்களுக்கு அருகில் உள்ள தூசிகளை எளிதாக போக்க முடியும். இது காற்றில் உள்ள தூசிகள் மற்றும் அழுக்குகள் அறைக்குள் நுழைவதை தடுக்கிறது.


கால் மிதியடிகள் வீட்டிற்குள் தூசி வருவதை தடுக்க உதவுகிறது. எனவே எல்லா அறைகளிலும் கால் மிதியடிகளை போட்டு வையுங்கள். இதன் மூலம் வீட்டிற்குள் தூசி வருவதை தடுக்க முடியும்.குழந்தைகள் அறையை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். அவர்கள் பயன்படுத்தும் பொம்மைகள், மரச்சாமான்களில் தூசிகள் படிவதை தடுக்க அந்த விளையாட்டு பொருட்களை ஒரு பெட்டியில் போட்டு மூடி வையுங்கள்.

வீட்டிற்குள் தூசி படிவதில் காற்றுகள் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. எனவே காற்று வீசும் காலங்களில் ஜன்னல்களை மூடி வையுங்கள். இதன் மூலம் அறைக்குள் தூசி நுழைவதை தடுக்க முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *