உலகிலேயே மாபெரும் சாதனையினை படைத்த இளம் தமிழ் மாணவி..!! கண்டுகொள்ளாத ஊடகங்கள்..!! முடிந்தவரை நண்பர்களுடன் பகிர்வோம்..!! மனதார பாராட்டுகிறோம்.!

செய்திகள்

இந்தியாவின் மிகப் பெரிய பொக்கிஷம் தமிழக மாணவி விசாலினி.நண்பர்களே,வாருங்கள், கொண்டாடுவோம்.இந்தத் தமிழ் மகளை.யார் இந்த விசாலினி ?திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையை சேர்ந்த, கல்யாண குமாரசாமி – சேது ராகமாலிகா தம்பதியரின் ஒரே மகள்.

திருநெல்வேலி, அரசு பள்ளி தமிழாசிரியர், தமிழ்க்கனலின் பேத்தி .உலகிலேயே அதிக அறிவுத்திறன்* கொண்டவர் — IQ Level 225.(பில்கேட்ஸின் IQ Level 160. சாதாரண மனிதர்களின் IQ Level 90 to 110.)அல்வாவுக்கு மட்டுமல்ல — அறிவுக்கும் திருநெல்வேலிதான்– என்று உலக அரங்கில் உரக்கச் சொல்லியவர்.

தன் 10 வயதில் – ஐந்து (5) உலக சாதனைகள், பதிமூன்று (13) சர்வதேச கணினி சான்றிதழ்கள் பெற்றவர்.தன் வீடு முழுவதையும் பரிசுக் கோப்பைகள், கேடயங்கள், சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களால் நிறைத்து இருப்பவர்.இந்திய பிரதமர் நரேந்திர மோடியால் “விசாலினி, இந்தச் சிறுவயதில், (15) நீ செய்துள்ள சாதனைகளே, இந்திய நாட்டிற்கான சேவைதான்” என்று பாராட்டப்பட்டவர்
தமிழ்நாடு அரசின் 11-வது வகுப்பு, ஆங்கில பாடப்புத்தகத்தில் பாடமாக* இடம்பெற்றவர்

தெரியுமா உங்களுக்கு?கடந்த 5 ஆண்டுகளில், தமிழ்நாடு, பாண்டிச்சேரியைச் சேர்ந்த 50 லட்சம் மாணவர்கள்,விசாலினியைப் பற்றி பாடமாக படித்து* , தேர்வெழுதி, மதிப்பெண் பெற்றுள்ளனர்.உலகின் பல்வேறு நாட்டு அறிஞர்களின் பாராட்டைப் பெற்ற இவர் – *ஓர் இந்தியர், அதுவும் தமிழர்!


*சோதனைகளே சாதனைகள்.விசாலினி, பிறந்து ( 30)முப்பது நாட்கள் கூட உயிர் வாழ இயலாது என்ற நிலையில் இந்த பூமிக்கு வந்தவர். இவரால் பேசவும் இயலாது* என்று மருத்துவர்களால் கைவிடப்பட்டவர்.பிறந்த 41-வது நாளிலிருந்து தினமும் 20 மணி நேரம்* தன் தாயிடம் பேசுவதற்காக பயிற்சி பெற்றவர். அதனால் தன் ஒன்பதாவது மாதத்திலேயே பேசத் தொடங்கியவர்.
விளைவு — இரண்டரை வயதில் முதன்முதலாக மேடை ஏறியவர்.

தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் TNPSC குரூப்-1 தேர்வில் (1000) ஆயிரம் கேள்விகளுக்கான விடைகளை, தன் இரண்டரை வயதிலேயே (2 ½) மேடையேறி முழங்கியவர்.படிப்பில் சாதனை விசாலினி, தொடக்கப் பள்ளியில் பயிலும் போதே, தொடர்ச்சியாக *இரண்டு முறை டபுள் ப்ரமோஷன் பெற்றவர்.

எட்டாம் வகுப்பிற்கு பிறகு நேரடியாக, பி.டெக் (B.Tech) பொறியியல் படிப்பில் சேர்ந்தவர்.அங்கு கம்ப்யூட்டர் சயின்ஸ் துறையில் தன்னைவிட நான்கைந்து வயது மூத்த மாணவர்களுடன் படித்தாலும் எப்போதும் படிப்பில் முதல் மாணவியாகவே திகழ்ந்தவர்.
நான்கு ஆண்டுகள் படிக்கும் பி.டெக் (B. Tech) பொறியியல் படிப்பை மூன்றே ஆண்டுகளில் முடித்து, 96% மதிப்பெண்களுடன் பல்கலைக்கழகத்திலேயே முதல் மாணவியாக தங்கப்பதக்கம் பெற்றவர்.

தொடர்ந்து, இரண்டு ஆண்டுகள் படிக்கும் எம்.டெக் (M. Tech) பொறியியல் படிப்பை ஒன்றரை (1 ½) ஆண்டுகளில் முடித்து, 99.5% மதிப்பெண்களுடன் பல்கலைக்கழகத்திலேயே முதல் மாணவியாக தங்கப்பதக்கம் பெற்றவர்.தற்போது, Artificial Intelligence எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் தனது பி.ஹெச்.டி *(Ph.D)* ஆராய்ச்சியை மேற்கொண்டிருப்பவர். [as of December, 2022].


கணினி துறையில் தனது 10 வயதில் , கம்ப்யூட்டர் நெட்வொர்க்கிங் துறையில், உலக அளவில், இரண்டு முறை பாகிஸ்தான் மாணவர்களின் சாதனைகளை முறியடித்தவர்.பிரதமர், குடியரசுத் தலைவர் பாராட்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடியால்* “விசாலினி, இந்தச் சிறுவயதில், (15) நீ செய்துள்ள சாதனைகளே, இந்திய நாட்டிற்கான சேவைதான்” என்று பாராட்டப்பட்டவர்
குடியரசுத் தலைவர் *அப்துல்கலாமின்* பாராட்டை இரண்டு முறை பெற்றவர், விசாலினி.

இஸ்ரோ அழைப்பு.விசாலினியின் திறமையை அறிந்த, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ — இஸ்ரோவில் உரையாற்ற வருமாறு 15 வயது மாணவி விசாலினிக்கு அழைப்பு விடுத்தது.இஸ்ரோவிற்கு சென்றார் விசாலினி. அங்கு இஸ்ரோ இயக்குனர் உட்பட எழுநூறுக்கும் (700+) மேற்பட்ட விஞ்ஞானிகள் மத்தியில் புதிய தகவல் தொழில்நுட்ப நுணுக்கங்கள் குறித்து விரிவாக உரையாற்றினார். அப்போது அவருக்கு வயது 15 தான்.

விசாலினிக்கு பாராட்டுக்கள் குவிந்தன. இஸ்ரோ இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை உட்பட விஞ்ஞானிகள் அனைவரும் *எழுந்து நின்று standing ovation* கொடுத்து விசாலினிக்கு மரியாதை செய்தனர். எதிர்காலத்தில், இந்திய தகவல் தொழில்நுட்ப துறையில் விசாலினி முக்கியப் பங்காற்றுவார் என்று இஸ்ரோ இயக்குனர் பாராட்டினார்.

மங்கள்யான்.மேலும் செவ்வாய் கிரகத்திற்கு இஸ்ரோ அனுப்பிய *மங்கள்யான் செயற்கைக்கோளையும்* விசாலினிக்கு பரிசளித்தது இஸ்ரோ.இந்திய அரசு புதிதாக வெளியிட்ட *2000 ரூபாய்* நோட்டில் மங்கள்யான் செயற்கைக்கோள் படம் இடம் பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

உலக வரலாற்றில் முதன் முறையாக, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான *இஸ்ரோவில் 15 வயது மாணவி ஒருவர், விஞ்ஞானிகள் மத்தியில் உரையாற்றியது இதுவே முதன் முறை. அந்தப் *பெருமை தமிழக மாணவி விசாலினியையே சேரும்.
*இஸ்ரோவில் ஆராய்ச்சிப் பணி

விசாலினியின் திறமையை அறிந்த இஸ்ரோ இவருக்கு ஓர் ஆராய்ச்சிப் பணியை வழங்கியது. இஸ்ரோ வரலாற்றில் 15 வயது மாணவிக்கு ஓர் ஆராய்ச்சிப் பணி வழங்கப்பட்டது அதுவே முதன்முறை.இரண்டு ஆண்டுகளில் முடிக்க வேண்டிய பணியை 35 நாட்களில் முடித்து நம் *இந்திய நாட்டிற்கு சமர்ப்பித்தார் விசாலினி.அந்த தொழில் நுட்பத்திற்கு இவரது பெயரே சூட்டப்பட்டது தனிச்சிறப்பு.
இஸ்ரோ இயக்குனர் பத்மஸ்ரீ டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை, “ *விசாலினி – தனது வயதுக்கு மிஞ்சிய சவாலான செயல்களை செய்ய வல்ல அபார அறிவாற்றல் பெற்றவர்”* என்று பாராட்டினார்

சர்வதேச அரங்கில் இந்தியாவின் பெருமையை நிலை நாட்டிய குழந்தை விசாலினி.உலகிலேயே இல்லை இப்படி ஒரு குழந்தை என்று சாதித்துக் கொண்டிருக்கும் விசாலினி, *11 வயது குழந்தையாக* இருக்கும் போதே, 15 சர்வதேச கணினி மாநாடுகளுக்குத் தலைமை விருந்தினராக அழைக்கப்பட்டு, கம்ப்யூட்டர் நெட்வொர்க்கிங் தொழில்நுட்பம் குறித்து சிறப்புரை ஆற்றி, உலக அரங்கில் *இந்தியாவின் பெருமையை* நிலை நாட்டியவர்.

சர்வதேச கணினி மாநாடுகளில்–பன்னாட்டு அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள் கூட பார்வையாளராக மட்டும் செல்வதற்கே அதாவது attend பண்ணவே 5000 ரூபாய் முதல் 20,000 ரூபாய் வரை கட்டணம் செலுத்தி தங்கள் இருக்கையை முன்பதிவு செய்யவேண்டும்.

ஆனால் விசாலினியோ, 11 வயது குழந்தையாக இருக்கும்போதே, 15 சர்வதேச கணினி மாநாடுகளிலும் *70 முதல் 80 நாட்டு அறிஞர்கள்* மத்தியில், *தலைமை உரையாற்றிய* பெருமைக்குரியவர். உலகின் எந்த ஒரு குழந்தைக்கும் கிடைக்காத பெருமை இது.

கூகுள் (Google) நிறுவனத்தின் சர்வதேச உச்சி மாநாட்டில் ஒருமணி நேரம் சிறப்புரை ஆற்றிய சிறுமி விசாலினியைப் பார்த்து, பன்னாட்டு அறிஞர்கள் வாயடைத்துப் போயினர். அங்கு The Youngest Distinguished Google Speaker என்ற பட்டமும் பெற்றார் விசாலினி.

TEDx சர்வதேச மாநாட்டில் இரண்டு முறை தலைமை உரை ஆற்றிய விசாலினி 11 வயதிலேயே, The Youngest TEDx Speaker என்ற பட்டமும் பெற்றார்.சில ஆண்டுகளுக்கு முன்பு, உலகையே அச்சுறுத்திய ரான்சம்வேர் *கம்ப்யூட்டர் வைரசுக்கு* தீர்வு கண்டவரும் இவரே.

HCL டெக்னாலஜிஸ் நிறுவனம் இந்தியாவின் பெருமை விசாலினி (The Pride of India – Visalini) என்று பாராட்டிய போது விசாலினிக்கு வயது 11 தான்.விசாலினியின் திறமையை அறிந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கி நிர்வாகம் சர்வதேச தலைமையகத்துக்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்த போது விசாலினிக்கு *வயது 12* (Twelve) தான்.

அங்கு உலக அளவிலான IOB GM தலைமையிலான IT Professional களுக்கு. கம்ப்யூட்டர் நெட்வொர்க்கிங் தொழில்நுட்பம் குறித்து அரை (1/2) மணி நேரம் வகுப்பு எடுக்கச் சொன்னார்கள். ஆனால் விசாலினியோ *2 மணி நேரம்* பாடம் நடத்தி அனைவரையும் பிரமிக்க வைத்தாள். இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் சேர்மன் & நிர்வாக இயக்குனர் நரேந்திராவின் பாராட்டைப் பெற்றார்
*பன்னாட்டு பல்கலைக்கழகங்களில்

தான் கற்றதோடு மட்டும் நிறுத்தவில்லை இவர்.கற்பிக்கவும் தொடங்கினார் — அதுவும் *தன் 11 வயதிலிருந்து* ,
இன்ஜினியரிங் மாணவர்கள், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், துறைத் தலைவர்கள், முதல்வர்கள், அமெரிக்கா உட்பட பன்னாட்டு பல்கலைக்கழக மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், பேராசிரியர்கள், WIPRO, TCS… போன்ற பன்னாட்டு நிறுவன அதிகாரிகள் — இவரின் மாணவர்கள்.

ஆம்! விசாலினியின் மாணவர்கள் இவர்கள்.உலகின் *எந்த ஒரு குழந்தைக்கும்* கிடைக்காத பெருமை இது.இந்திய ஊடகங்கள் மட்டுமல்லாது, பன்னாட்டு ஊடகங்களும் இந்த தமிழ்மகள் பெருமையை பறைசாற்றின. Times Now English News நிறுவனமோ ஒருபடி மேலாக விசாலினியின் வீட்டிற்கே வந்து 2 நாட்கள் தங்கி அவரைப் பற்றிய தகவல்களைத் திரட்டி, *The Amazing Indian – Visalini* என அரை மணி நேர டாக்குமெண்டரி (Documentary) படத்தை ஒளிபரப்பியது.

நியூசவுத்வேல்ஸை தலைமை இடமாகக் கொண்டு, காமன்வெல்த் ஆப் ஆஸ்திரேலியா வால் தொடங்கப்பட்ட, ஆஸ்திரேலியாவின் முன்னணிச் செய்தி நிறுவனமான – SBS ஆஸ்திரேலியா, *உலகின் 74 மொழிகளில் 174 நாடுகளில்* விசாலினியின் அரைமணி நேர பேட்டியை ஒலிபரப்பி கௌரவப் படுத்தியபோது விசாலினிக்கு *வயது 13* (Thirteen) தான்.

தகவல் தொழில்நுட்பத் துறையில் தனக்கென்று ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டு, வருங்கால மாணவ சமுதாயத்திற்கு ஓர் எடுத்துக்காட்டாக விளங்கும் *விசாலினி – ஓர் இந்தியர். அதுவும் தமிழர்.வாழ்நாள் லட்சியம்.இந்திய நாட்டிற்காக *நோபல் பரிசு* பெற்றுத் தரவேண்டும் என்பதே விசாலினியின் வாழ்நாள் லட்சியம்!”

சர்.சி .வி.ராமன், வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன், சுப்பிரமணியன் சந்திரசேகர் ஆகியோரது வரிசையில், நம் *தமிழக மாணவி விசாலினி குமாரசாமியின்* பெயரும் ஒரு நாள் இடம்பெறும்.நம்ப முடியவில்லையா .
விசாலினியின் சாதனைப் பட்டியலின் *நீளம்* சற்று அதிகம்.

வேறொரு நாடாக இருந்தால் பேசவே இயலாது என்ற குழந்தை, இன்று உலகையே பேச வைத்திருக்கிறாள் — தன் சாதனைகளால்.
உலக அளவில் ஒப்பிட்டால் கூட, இந்த இளம் வயதில் – தமிழக மாணவி விசாலினியின் சாதனைப் பட்டியல் *(Profile)* வேறு எவரிடமும் இல்லை இதுவே வேறொரு நாடாக இருந்தால் விசாலினியை *இந்நேரம்* கொண்டாடித் தீர்த்திருப்பார்கள்.
ஆனால் நாம்,நண்பர்களே,வாருங்கள், கொண்டாடுவோம், இந்த தமிழ் மகளை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *