காதலிப்பவர்களுக்கு ஆபத்தான ஒரு முக்கிய தகவல்..!!

செய்திகள்

காதலர் தினக் கொண்டாட்டங்கள் இன்று முழுவதும் ஏன் கடந்த ஒரு வாரமாக களைகட்டத்துவங்கியிருக்கிறது . உண்மையில் காதல் என்ற உணர்வினை கடந்து வராதவர்கள் யாருமே இருக்க முடியாது. சிலருக்கு சுவராஸ்யமான அழகான நினைவுகளை கொடுக்கும் அதே காதல் சிலருக்கு மிகவும் கொடுமையான அனுபவங்களை கொடுத்திருக்கும்.


எண்ணற்ற வேறுபாடுகளை கடந்து இன்றும் காதல் திருமணம் செய்து கொள்கிறவர்கள் மத்தியில் காதலே வேண்டாம் அது உங்களை அதலபாதாளத்தில் தள்ளிடும் உங்கள் வாழ்க்கையையே கெடுத்திடும் என்றும் நமக்கு அட்வைஸ் கொடுப்பதுண்டு. லவ் மட்டும் வேணாம் மச்சி. என்று அட்வைஸ் கொடுப்பவர்கள் எல்லாம் கமிட்டாகி குழந்தை குட்டிகளோடு செட்டிலாகியிருப்பார்கள்.

திரைப்படங்களில் கூட சிங்கிள் தாண்டா கெத்து என்று சொல்லி சொல்லியே இறுதியில் நாயகனும் நாயகியும் அழுது தீர்த்து பல போராட்டங்களை கடந்து ஒன்றிணைந்து விடுவார்கள்.எங்கு தோற்கிறோமோ இல்லையோ காதலில் நமக்கு மிகவும் நெருக்கமானவரிடத்தில் தோற்பது என்பது மிகவும் அலாதியான இன்பம் என்றே சொல்லலாம். அது நிச்சயம் நம் உறவை பலப்படுத்திடும். இன்னும் சுவாரஸ்யமாக்கிடும்.

அதோடு காதல் உணர்வினை மேற்கொண்டு அதிகரிக்கச் செய்வது மற்றும் தொடர்ந்து நிலைக்கச் செய்வது என்ன தெரியுமா? காதலில் அந்த உறவுக்கு மத்தியில் நாம் செய்யக்கூடிய சின்ன சின்ன பைத்தியக்காரத்தனம் தான். வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு மட்டுமே அது பைத்தியக்காரத்தனமாகத் தெரியும் ஆனால் காதலில் இருப்பவர்களுக்கு மட்டுமே அந்த ஃபீல் புரிந்திடும். அப்படி காதலில் நீங்கள் செய்யக்கூடிய சின்ன சின்ன பைத்தியகாரத்தனம் எல்லாம் என்ன என்று சிலரிடம் கேட்டோம்.


ரொம்ப சின்ன விஷயத்த கூட நியாபகம் வச்சிருக்கணும்னு எதிர்ப்பாப்பாங்க மொத முறைய பாத்தப்போ என்ன கலர் டிரஸ் போட்டிருந்தோம் அன்னக்கி என்ன சொன்னோம் என்ன பேசினோம்ன்ல ஆரம்பிச்சு எல்லாத்தையும் நியாபகம் வச்சிருக்கணும். நமக்கு இன்னக்கி காலைல என்ன சாப்டோம்னு கேட்டாலே ரெண்டு நிமிசம் யோசிப்போம் இதெல்லாம்…. ம்ம்ஹூம் வழக்கம் போல சரண்டர் ஆகிட வேண்டியது தான்.

ஒன்பது மணி காலேஜுக்கு எட்டு மணிக்கு எந்திரிக்கிறதே ரொம்ப சீக்கிரம்னு நினச்சிட்டு இருப்போம் அதுக்குள்ள நம்ம அம்மணி ஐஞ்சு மிஸ்டு கால் இருபது மெசேஜ் அனுப்பியிருப்பாங்க ஐயையோன்னு அரக்கப்பறக்க எந்திருச்சு கிளம்பி பஸ் ஸ்டாப்ல போய் பிக்கப் பண்ணலாம்னு போனா நான் என்ன சொன்னேன் நீ என்ன செஞ்சிருக்க என் உசுர வாங்குறதுக்குன்னே இருக்க உன்னை எல்லாம் திருத்த முடியாது எவ்ளோவாட்டி சொன்னாலும் உன் மண்டைல ஏறாதான்னு கத்தி கூப்பாடு போடுவாங்க

லவ்வர்ஸ்க்கு இருக்குற மிகப்பெரிய டார்ச்சர்ன்னு இதச் சொல்லலாம். அட சத்தியமா இது ஒரு கட்டத்துக்கு மேல நமக்கே டார்ச்சராத்தான் இருக்கும். எப்போ பாத்தாலும் லவ் யூ. மிஸ் யூன்னு மெசேஜ் அனுப்பிக்கிட்டே இருக்கணும்.ஒரே க்ளாஸ் பக்கத்து பக்கத்து பென்ச் லைட்டா திரும்பினா கூட நம்மாளு மூஞ்சி தான் தெரியும் அப்டி நாள் பூரா உக்காந்திட்டு இருக்கும் போதே மேடம் நமக்கு மிஸ் யூ பேபி மெசேஜ் பண்ணா கடுப்பாகுமா ஆகாதா.

ம்ம்ம்.முழிச்சிட்டேன் கண்ண தொறந்துட்டேன் பிரஸ் பண்ண போறேன் காபி குடிக்கிறேன்.ன்னு கண்ண தொறந்துல இருந்து ஒவ்வொரு ஸ்டெப் நம்ம எடுத்து வைக்கிறதக்கூட லைவ் அப்டேட்ஸ் கொடுக்கணும். வெக்கமே இல்லாம நாங்க அத கரெக்ட்டா கொடுத்திடுவோமே.
இருக்குறதுலயே

கொஞ்சம் கஷ்டமான டாஸ்க்னா அது இதுவாத்தான் இருக்கும். அவங்க பாட்டுக்கு இஸ்டத்துக்கு செல்லக்குட்டி, பேபி, பப்பு,புஜ்ஜிமா,டார்லிங்னு இருக்குற எல்லாத்தையும் போட்டு கூப்ட்ருவாங்க அப்பறம் வந்து எனக்கு ஒரு பேர் வைன்னு நிக்க கிடந்துக்கிட்டு திணறுவோம் பாருங்க.நமக்கு தெரிஞ்ச ஒரே பேரு பேபி அதச் சொன்னா ஒத்துக்கமாட்டாங்க கேட்டா அது ஓல்டு நேமாம். இவங்களுக்கு செல்லப் பேரு வைக்கன்னே தனி டிக்‌ஷ்னரி வாங்கணும் போலயே.

கேட்டாலே கடுப்பாகுற வார்த்தை இது நேரங்காலம் தெரியாம மணிக்கணக்கா பேசி சலிச்சு போயிருக்கும் சரிம்மா காது வலிக்குது கொஞ்ச நேரம் போன வைக்கிறியான்னு கேக்க வாயத்தொறக்கலாம்னு போறதுக்குள்ள அங்கிட்டு இருந்து ம்ம்ம்ம். அப்றம்னு அடுத்த சேப்டர ஓப்பன் பண்ணிருவாங்க.சுவாரஸ்யமா வண்டி வண்டியா டைப் பண்ணி அனுப்பினா Hmm…ன்னு சிம்பிளா எண்ட் கார்டு போட்ருவாங்க இதுக்கு மேல பேசுன்னு சொல்றாளா இல்ல வாய மூடு மொக்க போடாதான்னு சொல்றாளான்னு ஒண்ணுமே புரியாது.

இப்பவெல்லாம் குட் மார்னிங், குட் நைட் மாதிரி சாரியும் சேர்ந்துக்குச்சு ம்ம்ம் சாரிம்மா என்ன பண்றன்னு தான் ஆரம்பிக்கிறது. அந்த அளவுக்கு நம்ம ட்ரைண்ட் ஆகிட்டோம்… அட நெசமாங்க தப்பு நீ தான் பண்ண நான் தான் ஆரம்பிச்சேன். இந்த பேச்சுக்கே இடமில்ல யார் தப்பு பண்ணியிருந்தாலும் சரி அப்டியே சாஸ்டாங்கமா விழுந்துட்டா நமக்கு நல்லது.

கூடவேயிருக்கும் போது அந்த ஃபீல் சுத்தமா இருக்காது விட்டு கொஞ்ச தூரம் வந்த பிறகு தான் இன்னும் கொஞ்ச நேரம் கூட இருந்திருக்கலாமோ அவங்க கை கோர்த்துட்டு இன்னும் கொஞ்ச நேரம் நின்னு பேசிட்டு இருந்திருக்கலாமோன்னு தோணும்.சின்ன இடைவேளி கூட நம்மளால பொறுத்துக்க முடியாது.

இந்த மார்க் எந்த அர்தத்துல லைக்கோட ஹார்ட்ட கொண்டு வந்தார்னு புரியல நம்ம போட்டோவ பாத்து ஹார்ட் போட்டா அந்த போட்டோவ போஸ்ட் பண்ணவங்களப் பாத்து நம்மாளு சண்டைக்கு வருது.அவங்க சொன்னதுக்கு அப்பறம் தான் யாரு போட்டதுன்னு தேடி பாக்க வேண்டியதா இருக்கு. நான் போஸ்ட் போட்டு ஐஞ்சு நிமிஷம் ஆச்சு இன்னும் ஏன் கமெண்ட் வர்லன்னு நடு ரோட்ல கைய பிடிச்சு இழுத்தது மாதிரி சண்டைக்கு வருவாங்களே. ஆண்டவா

நிறைய இடங்கள்ல முக்கியமா சினிமால காதல்ல கமிட் ஆகிட்டா அவங்க நம்மளோட பிரண்ட்ஷிப்ப கட் பண்ணிருவாங்கன்னு தான் சொல்வாங்க அதோட நிம்மதியா வேல செய்ய விடமாட்டாங்க நை நைன்னு டார்ச்சர் பண்ணிட்டேயிருப்பாங்கன்னு நிறைய கதைகள கேட்டிருப்போம் ஏன் லைவா கேட்ருப்போம்.

ஒரே விஷயம் என் கூட டைம் ஸ்பெண்ட் பண்ண எப்பயும் என் கூட நீயிருக்க ஆனா பிரண்ட்ஸ் அப்டியில்ல அவங்க கொடுக்குற டைம நான் யூஸ் பண்ணிக்கனும் என்ன முழுசா புரிஞ்சுக்கிட்டு ஏத்துக்கிட்ட உன்னால தான் இந்த சூழ்நிலைய புரிஞ்சக்க முடியும்னு ஒரு பிட்ட போட்டா போதும் அவங்க அப்டியே சரண்டர் ஆகிடுவாங்க

ரிலேசன்ஷிப்ல வர்றதுக்கு முன்னாடி காதலர்கள் செய்ய கிறுக்குதனங்களப் பாத்தா சிரிப்பா இருக்கும் ஆனா இப்போ அது தான் நம்மளோட உயிர்நாடியா இருக்கு. உண்மைய சொல்லணும்னு இந்த காதல்ன்ற உறவ இன்னும் சுவாரஸ்யம் ஆக்குறது நாங்க செய்ற இது போல சின்ன சின்ன கிறுக்குத்தனங்கள் தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *