மறந்தும், பணம் வைக்கும் அலமாரிக்கு அருகில் இத வெக்காதீங்க..!!இல்ல பணம் சேரவே சேராது..!

பிரதான செய்திகள்

நமது வாழ்வில் பணம் முக்கிய பங்கை வகிக்கிறது. இந்த பணத்தை சம்பாதிப்பதற்காகத் தான் நாம் அல்லும் பகலும் அயராது உழைத்துக் கொண்டிருக்கிறோம். இப்படி கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணம் வீட்டில் நிலைக்காமல் செலவாகிக் கொண்டிருந்தால், எப்படி இருக்கும்?


நிச்சயம் அது பலருக்கும் மிகுந்த வேதனையைத் தான் தரும். ஒருவரது வீட்டில் பணம் நிலைக்காமல் அதிகம் செலவாக காரணம், வீட்டில் பணம் வைக்கும் இடம் அல்லது அலமாரிக்கு அருகே இருக்கும் சில பொருட்கள் காரணமாக இருக்கலாம்.

அதை அறிந்து அவற்றை அப்புறப்படுத்தி, வாஸ்து சாஸ்திரம் கூறும் பணத்தை ஈர்க்கும் சில பொருட்களை பணம் வைக்கும் இடத்தில் வைப்பதன் மூலம் வீட்டில் பணம் அதிகம் சேரும். இப்போது பண இழப்பை ஏற்படுத்தும் விஷயங்கள் எவையென்பதையும், எந்த பொருட்களை பண அலமாரியில் வைக்க வேண்டும் என்பதைக் குறித்தும் காண்போம்.

பெரும்பாலானோர் தங்கள் வீட்டில் மருந்து பெட்டி அல்லது முதலுதவி பெட்டியை சமையலறையில் வைத்திருப்பார்கள். நீங்களும் உங்கள் வீட்டில் அப்படி வைத்திருந்தால், உடனே அதை அகற்றுங்கள். இல்லாவிட்டால், அது வீட்டில் உள்ளோரின் ஆரோக்கியத்தில் அடிக்கடி பிரச்சனைகளை ஏற்படுத்தி, மருத்துவ செலவுகளை அதிகம் செய்யத் தூண்டும். இதன் விளைவாக வீட்டில் பணம் நிலைக்காது.

அக்காலத்தில் குளியலறை மற்றும் கழிவறை வீட்டில் வெளியே தான் இருந்தன. ஆனால் தற்போதைய மார்டன் வீடுகளில் வீட்டிற்குள்ளேயே உள்ளன. வாஸ்துப்படி, வீட்டினுள் உள்ள குளியலறை மற்றும் கழிவறையின் கதவுகளை திறந்து வைக்கக்கூடாது. இல்லாவிட்டால், அது அந்த வீட்டில் பண இழப்பை ஏற்படுத்தும். எனவே வீட்டில் பணம் அதிகம் சேர வேண்டுமானால், கழிவறை, குளியலறை கதவுகளை மூடி வைத்திருங்கள்.


உங்கள் வீட்டில் பணம் வைக்கும் அலமாரிக்கு அருகில் துடைப்பத்தை வைத்திருந்தால், உடனே அதை அப்புறப்படுத்துங்கள். வாஸ்துப்படி, பண அலமாரிக்கு அருகே துடைப்பத்தை வைத்திருப்பது, பண இழப்பை ஏற்படுத்தும்.பணம் வைக்கும் அலமாரியில் லட்சுமி தேவி வசிக்கிறாள். எனவே அந்த அலமாரியில் எப்போதும் சிவப்பு நிறத்தை பயன்படுத்துங்கள். எக்காரணம் கொண்டும் கருப்பு நிறத்தை மட்டும் பயன்படுத்தி விடாதீர்கள். இல்லாவிட்டால் லட்சுமி தேவியின் கோபத்திற்கு ஆளாகி, பணப் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

பணம் வைக்கும் அலமாரியில் பணம், தங்கம் போன்றவற்றைத் தவிர தேவையில்லாத பொருட்களை வைத்திருப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், அதுவே பணம் அதிகம் சேரவிடாமல், அதிக செலவுகளை ஏற்படுத்தும்.பணம் வைக்கும் அலமாரியில் பணம் அதிகம் சேர வேண்டுமானால், வாஸ்துப்படி ஒரு சிறிய கண்ணாடியை அலமாரியில் வைத்திருங்கள்.

அதுவும் அந்த கண்ணாடியில் பணம் தெரியும் படி வைக்க வேண்டும். இதனால் பணம் அதிகம் சேரும்.செல்வம் மற்றும் செழிப்பின் அதிபதியான குபேரரின் சிலையை பணம் வைக்கும் அலமாரியில் வைத்தால், அது பணம் அதிகம் சேர உதவி புரியும். உங்கள் வீட்டின் அலமாரியில் குபேரர் சிலை இல்லாவிட்டால், உடனே வாங்கி வையுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *