அவன் அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டான்..!! என்று பெண்கள் கூறும் அசால்ட்டு காரணங்கள்!

பிரதான செய்திகள்

நிச்சயம் ஆவதற்கு முன், மணப்பெண் துணையுடன் சிறிது நேரம் பேசி அவரை பற்றி அறிந்துக் கொள்ள நேரம் கேட்கிறாரே… அது தான் டேட்டிங். என்ன அங்கே அதிகபட்சம் பத்தில் இருந்து இருபது நிமிடம் தான் கிடைக்கும். இங்கே ஒருசில நாட்கள் முதல் ஓரிரு வாரங்கள் வரை டேட்டிங் நிகழலாம். சிலர் வருட கணக்கில் எல்லாம் டேட்டிங் செய்வார்கள். அது வேற ரகம்.


நாங்கள் சந்தித்து கொள்வது அதுவே முதல் முறை அல்ல. ஆனால், நானும், அவனும் தனியே சந்தித்து கொண்டு ஒருவரை பற்றி ஒருவர் அறிந்துக் கொள்ள ஏற்படுத்திக் கொண்ட நிகழ்வு அதுதான் முதல் முறை.அவனது வயது 27-28 இருக்கும். அவன் பெண்கள் என்றாலே இனிமையானவர்கள், நேர்மையானவர்கள், குடும்ப பாங்கானவர்கள் என்ற கருத்துக்கள் கொண்டிருந்தான். நான் அவனிடம் சிரித்த முகத்துடன். நல்லவர்களுக்கு பாலின பிரிவினை எல்லாம் இல்லை என்று கூறினேன்.

நான் அவனை வேண்டாம் என்று முடிவு செய்ததற்கு காரணம்.தன்னை அறிமுகம் செய்துக் கொண்டபோதே தன்னை ஒரு பெண்ணியவாதி என்று கூறிக் கொண்டான்.எங்கள் முதல் சந்திப்பில் நான் நன்கு அறிந்துக் கொண்ட ஒரு விஷயம்.ஒன்று அவனுக்கு பெண்ணியம் என்றால் என்ன என்ற உண்மையான புரிதல் இல்லை.அல்லது போலியாக பெண்ணியவாதி போல நடித்துக் கொண்டிருக்கிறான்.

அவன் யாரென்றெல்லாம் தெரியாது. எனது நெருங்கிய நண்பனின் நண்பன் அவன். அவன் மிகவும் புத்திசாலி, நகைத்து பேச தெரிந்தவன். ஆனால், எங்கள் முதல் சந்திப்பில் அவன் பேசியது எல்லாமே அவனது முன்னாள் காதலி குறித்து மட்டுமே. நாங்கள் இருவரும் டேட் செய்ய வெளியே வந்த நாள் முழுக்க அந்த பெண்ணை பற்றியே பேசிக் கொண்டிருந்தான்.


அப்போதே எனக்கு தெரிந்துவிட்டது. அவன் முழுமையாக அவளை விட்டு வரவில்லை என்று. ஏதோ புரிதல் இல்லாமல், மன குழப்பத்தின் காரணமாக தான் அவர்கள் பிரிந்திருக்க வேண்டும். ஆகவே, அவனை ஏற்க என் மனம் ஒப்பவில்லை.பிராட் மைண்டட் என்ற நோக்கம் கொண்டவன் அவன். எதையும் சாதரணமாக எடுத்துக் கொள்ளும் மனப்பக்குவம் கொண்டவன் என்பது போல தன்னை காண்பித்துக் கொண்டான். எங்கள் முதல் சந்திப்பு நன்றாக தான் சென்றது.

சரியாக, எங்கள் டேட்டிங் முடிந்து பிரியும் தருவாயில் திடீரென இறுக்கமாக கட்டிப்பிடித்து, முத்தமிட்டான். ஒரு அடி பின்னாடி நகர்ந்ந்து அவனது முகத்தில் பளார் என்று ஒன்று விட்டேன். அதற்கு பின் பலமுறை என்னிடம் மன்னிப்பு கோரினான். ஆனால், அவனது அந்த செயல் இயல்பானது அல்ல. வேண்டுமென்றே அவன் அப்படி நடந்துக் கொண்டான்.

மேனர்ஸ் என்பது பல வகைகள்.ஒருவர் முன் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும், எப்படி பேச வேண்டும், எப்படி சாப்பிட வேண்டும் என இதை வகை பிரிக்கலாம். எங்கள் டேட்டிங்கில் மோசமாக அமைந்தது அவனது டேபிள் மேனர்ஸ் தான். அவன் டேட் செய்ய வந்தது போல இல்லை. அவனது முழு கவனமும் சாப்பாட்டில் தான் இருந்தது. வாயில் இருந்து வழியும் அளவிற்கு உணவுகளை அள்ளி திணித்து கொண்டிருந்தான்.

உணவை துடைத்துக் கொள்ள அவன் டிஷ்யூ பேப்பரை கூட பயன்படுத்தவில்லை. ஸ்பூனை எப்படி பிடிக்க வேண்டும் என்று கூட அவனுக்கு தெரியவில்லை. அவன் விட்ட ஏப்பத்தின் சப்தம் அந்த ஹோட்டல் வாசல் வரைக்கும் கேட்டிருக்கும். எப்போது அந்த டேட்டிங் முடியும், தப்பித்து வீட்டுக்கு ஓடலாம் என்று காத்திருந்தேன்.


அவனிடம் எனக்கு பிடிக்காமல் போன விஷயம் அவனது சுய தம்பட்டம். சம்பளம் எத்தனையாக வேண்டுமானாலும் இருக்கட்டும். பணமும், அவனது வாழ்க்கை முறை குறித்தும் மட்டுமே அவன் டேட்டிங் முழுக்க பேசிக் கொண்டிருந்தான். அவனது ஆடம்பரமான வாழ்க்கை மீது அவனுக்கு பேரார்வம் இருந்ததே தவிர, என் மீது இல்லை.

அவனிடம் நடுவே எத்தனயோ முறை பேச்சை மாற்ற சொல்லி கூறினேன். எங்கே போனாலும், சுற்றி வளைத்து அவனது ஆடம்பர வாழ்க்கை பற்றியே பேசிக் கொண்டிருந்தான். அவனுடன் வாழ்வதற்கு ஆடம்பர பொருட்கள் தான் வேண்டுமே தவிர பெண்கள் அல்ல.எத்தனை கோபம் வந்தாலும் நம்மை சுற்றி இருக்கும் நபர்கள் முகம் சுளிக்கும் படி நடந்துக் கொள்ள கூடாது. குறைந்த பட்சம் போலியாக சிரிக்கவாவது அறிந்திருக்க வேண்டும்.

நாங்கள் முதல் முறை டேட்டிங் சென்ற போது அவன் அங்கிருந்த பணியாட்களை ஏதோ அடிமைகளை போல நடத்தினான். அது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. ஐந்து நிமிடம் உணவு தாமதம் ஆனதற்கே தாட்டு, பூட்டு என்று கத்த ஆரம்பித்துவிட்டான்.எல்லாவற்றுக்கும் பிறகே தான் செய்து வரும் நன்கொடை விஷயங்கள் பற்றி பேசினான். மனிதம் இல்லாதவன் கொடை அளித்து என்ன பயன்.

அவனை பற்றி கூற வேண்டும் என்றால்சமூக தளங்களில் சிலர் பதிவிட்டு கொண்டே இருப்பார்களே… பார்க்கவே அட இவ்வளவு விஷயம் இவங்களுக்கு தெரியுமா என்று நாம் யோசிப்போம். இப்படியான ஒரு காரணத்தால் தான் அவனுடன் நான் டேட் செய்ய சம்மதித்தேன்.ஆனால், அவனோ நேரில் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ஊமை போல உட்கார்ந்துக் கொண்டிருந்தான். அப்போது தான் தெரிந்தது… அவன் பதிவு செய்தது எல்லாம் Ctrl+C, Ctrl+V என்று. இவனை போன்ற ஆட்களுடன் உறவில் இருப்பது எல்லாம் மிகவும் கடினம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *