உங்கள் படுக்கை அறையில் ஒரு எலுமிச்சையை வெட்டி வையுங்கள்! அப்பறம் பாருங்க அதிசயத்தை..!

செய்திகள்

எலுமிச்சைக்கென்று எதிலும் எப்பொழுதும் ஒரு தனி மணம். சுவை உண்டு. இது உண்பதற்கு மாத்திரமல்ல. நாம் படுக்கும் அறையில் இதைக் கொண்டு வைத்தால் பல்வேறு நன்மைகள் நடக்குமாம். சரி இனி அந்த நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.பொதுவாகவே எலுமிச்சை மருத்துவம் குணம் கொண்டது. நோய்த்தொற்றுக்களை அழிக்கக்கூடியது.


எனவே இதனை படுக்கை அறையில் வைப்பதால் அறையில் துர்நாற்றம் ஏற்படாமல் தடுப்பதுடன் கிருமிகளையும் அழிக்கிறது.
எலுமிச்சையை எடுத்து அதனை இரண்டாக வெட்டி, அதில் கிராம்பை குத்தி வைத்து, படுக்கும் அறையில் வைப்பதால், கொசுக்கள், எறும்புகள், பூச்சிகளின் தொல்லைகளிலிருந்து விடுதலை பெறலாம்.

எலுமிச்சையின் வாசமானது இரத்த அழுத்த பிரச்சினையை சரி செய்கிறது. அதனால் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தாங்கள் படுக்கும் அறையில் இதை வெட்டி வைத்தால் நல்லது.சளி, ஆஸ்துமா, தொண்டை அடைப்பு, அலர்ஜி இருப்பவர்கள் எலுமிச்சையை வெட்டி

படுக்கும் அறையில் வைப்பதன் மூலம் அதன் வாசனையை நுகர்ந்துகொண்டே தூங்க முடியும். இது சளி, ஆஸ்துமா போன்ற நோய்கள் வராமல் தடுக்க உதவுகிறது.எலுமிச்சையினால் மூளையின் செயல்பாடுகள் ஆரோக்கியமாக இருப்பதுடன் நினைவுத்திறனும் அதிகரிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *