பொன்னையும் பொருளையும் அள்ளித்தரும் புதன் பிரதோஷ வழிபாடு!

செய்திகள்

இன்று சினவுக்குரிய பிரதோக்ஷ நன்னாளாகும். பிரதோஷ நன்னாளில், சிவபெருமானையும் . நந்திதேவரை வணங்கி வந்தால் அவர்களின் ஆசிகிடைத்து வாழ்வில் எல்ல வளங்களும் பெற்று வாழலாம்.ஒவ்வொரு நாட்களில், வரக்கூடிய பிரதோசத்திற்கென்று பல சிறப்புக்கள் உள்ளன. அந்தவகையில் இன்று பிரதோக்ஷ தினமாகும். புதன் பிரதோஷ தரிசனம், நமக்கு பொன்னையும் பொருளையும் அள்ளித்தரும் என்பது ஐதீகம்.


சிவ வழிபாடுகளில் மிக மிக முக்கியமானது பிரதோஷ பூஜை.திரயோதசி திதி அன்று பிரதோஷ நாளாகக் கொண்டாடுகிறோம். திரயோதசி திதி மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையிலான காலத்தில் அன்றைய நாளே பிரதோஷ பூஜை செய்யப்படும்.

அதாவது திரயோதசி திதி நாளில், பிரதோஷ நேரம் என்பது மாலை 4.30 முதல் 6 மணி வரையிலான நேரம்.இந்த நேரத்தில், அனைத்து சிவன் கோயில்களிலும் பிரதோஷ வழிபாடு விமரிசையாக செய்யப்படுகிறது. ஒவ்வொரு கிழமையில் வருகிற பிரதோஷத்துக்கு ஒவ்வொரு விதமான பலன்கள் உண்டு என்கிறது சிவபுராணம்.

புதன் கிழமை அன்று வரக்கூடிய பிரதோஷம், நமக்கு பொன்னும் பொருளும் தரக்கூடியது என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.பிரதோஷ விரதம் இருந்தும் சிவ புராணம் படித்தும் நமசிவாய மந்திரம் சொல்லியும் சிவபெருமானை வழிபடலாம். விரதம் மேற்கொள்ள இயலாதவர்கள், சிவபுராணம் படித்து விரதம் மேற்கொள்ளலாம்.


அல்லது ‘நமசிவாய’ எனும் ஐந்தெழுத்து மந்திரத்தை பிரதோஷ நேரத்தில் சொல்லிக் கொண்டே இருப்பதும் மகா புண்ணியம் தரும் என்கிறார்கள் சிவாச்சார்யர்கள்.புதன் கிழமை பிரதோஷ நன்னாளில், மறக்காமல் சிவ தரிசனம் செய்யுங்கள். நந்திதேவருக்கு அருகம்புல் சார்த்துங்கள். சிவலிங்கத் திருமேனிக்கு வில்வம் சார்த்தி வேண்டிக்கொள்ளுங்கள்.

பிரதோஷத்தின் போது, சிவனாருக்கும் நந்திதேவருக்கும் 16 வகையான அபிஷேகங்கள் நடைபெறும். நம்மால் முடிந்த நைவேத்தியப் பொருட்களை வழங்கி சிவ தரிசனம் செய்வது இன்னும் பல நன்மைகளை வழங்கும்.மேலும், பிரதோஷ நன்னாளில் எவருக்கேனும் தயிர்சாதப் பொட்டலத்தை வழங்குங்கள்.

பசுவுக்கு பழங்கள் ஏதேனும் வழங்குங்கள். அப்படி வழங்கும் தருணத்தில் ‘நமசிவாய நமசிவாய நமசிவாய’ என்று மூன்று முறை சொல்லி வழங்குங்கள்.தென்னாடுடைய சிவனாரின் பேரருள் கிடைக்கும். பொன்னும் பொருளும் கிடைக்கப் பெற்று இனிதே வாழலாம்; வாழ்வில் உயரலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *