வருங்கால மனைவியாக வரப்போகும் பெண் நல்ல வேலையில் இருக்கிறாரா? நமக்கு நிகராக சம்பாதிக்கிறாரா? அழகாக இருக்கிறாரா? வடிவாக இருக்கிறாரா? என்பதை காட்டிலும், அவரது குணாதிசயங்கள், பண்பு, நடவடிக்கை போன்றவற்றை பார்த்து தேர்வு செய்வது தான் உங்கள் இல்லறம் சிறக்க உதவும்.

அந்த வகையில் திருமணம் செய்துக் கொள்ள தயாராகிக் கொண்டிருக்கும் ஆண், தனது வருங்கால மனைவியிடம் முக்கியமாக எதிர்பார்க்க வேண்டிய 10 குணங்கள், பண்புகள் என்னென்ன என்று இனிக் காண்போம்.
விசுவாசம் இன்மை, கசப்பாக இருப்பினும் சமூக விகிதத்தில் சற்றே அதிகரித்து வருகிறது என்று தான் கூற வேண்டும். ஆண்கள் அதிகம் இப்போது பெண்களிடம் எதிர்பார்ப்பது மனைவி என்றும் தங்களுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்பது தான்.தன் மீதும், தன் உழைப்பு, வேலை மீதும் நம்பிக்கை கொண்ட நபராக இருக்க வேண்டும். எதிர்மறை எண்ணங்கள் குறைவாக இருக்க வேண்டும்.
குடும்பத்தின் மீதும், உறவினர் மீதும் உரிய மரியாதை செலுத்த வேண்டும். சிலருக்கு பெரும் சம்பளம் வாங்கும் போது சற்று ஏளனமும் வந்துவிடுகிறது, இது கூடாது.இல்லறத்தின் மீதும், கணவன் மீதும் பேராவல் கொண்டிருக்க வேண்டும். இந்த ஆவல் தான் இல்லறம் மற்றும் தாம்பத்தியத்தை இறுக்கமடைய வைக்கும் அஸ்திவாரம்.

எப்போதும் தங்களையே எதிர்பார்க்காமல், அவர்களது வாழ்க்கையையும் சுதந்திரமாக வாழ வேண்டும், ஆண்கள் சுதந்திரத்திலும் தலையிடக் கூடாது.சிறு, சிறு விஷயங்களில் பொய் கூறுவது தவறில்லை. அது அனைவரும் செய்வது தான். ஆனால், அது பெரிதாகாமல், உறவை சிதைக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மொத்தத்தில் ஒருவருக்கு ஒருவர் நேர்மையாக இருக்க வேண்டும்.
ஒருவருக்கு ஒருவர் என்றும் உறுதுணையாக இருக்க வேண்டும், தன் வேலை, உன் வேலை என்ற பிரிவினைகள் எப்போதும் எழுந்துவிடக் கூடாது.எதற்கெடுத்தாலும் கேள்வி கேட்டுக் கொண்டு இருக்காமல் கூகுகிள் தேடி விடை பெருமளவிலாவது புத்திக் கூர்மை இருக்க வேண்டும்.
தான் எடுக்கும் முடிவில் நிலையாக இருக்க தெரிந்திருக்க வேண்டும். புடவை எடுப்பதில் தடுமாறுவது போல, இல்லற முடிவுகளில் தடுமாற்றம் இருக்க கூடாது.இது பொன்னகை அல்ல, புன்னகை. எப்போதும் மூஞ்சியை தூக்கி வைத்துக் கொண்டு இல்லாமல். சற்று சிரிக்கவும் வேண்டும், கணவனை அவ்வப்போது சிரிக்க வைக்கவும் வேண்டும்.