2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை மே 29 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது. பரீட்சை 3,568 தேர்வு மையங்களில் நடாத்துவதற்கு சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பரீட்சைக்கு தேவையான அனுமதி அட்டைகள் மற்றும் நேர அட்டைகள் உரிய தரப்பினருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்ட அறிவித்தல் வருமாறு,இதேவேளை மே 29ஆம் திகதி முதல் ஜூன் 08ஆம் திகதிவரை 2022ஆம் ஆண்டுக்கான க.பொ.த சா/த பரீட்சைகள் இடம்பெறவுள்ள நிலையில், பிரத்தியேக மற்றும் மீட்டல் வகுப்புகளை நடத்துவதற்கு பரீட்சைகள் திணைக்களம் தடை விதித்துள்ளது.

23ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை நடைமுறயாகும் என்றும் இந்த உத்தரவை மீறி நடத்தப்படும் வகுப்புகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எச்சரித்துள்ளார்.