கனவுகள் என்பது நாம் அனைவரும் தினமும் காணக்கூடியதுதான். ஒவ்வொரு கனவிற்கு பின்னாலும் ஒவ்வொரு அர்த்தம் இருக்கும். அனைத்து கனவுகளும் நல்லதாகவே இருக்கும் என்று கூற முடியாது, ஏனெனில் சில கனவுகள் ஆபத்தின் அறிகுறியாகவும் இருக்கலாம்.
சில அதிர்ஷ்ட கனவுகள் நீங்கள் விரைவில் நிறைய பணத்தை பெறப்போகிறீர்கள் என்பதை குறிப்பதாக இருக்கலாம். இந்த பதிவில் எந்தெந்த கனவுகள் உங்களை நோக்கி அதிர்ஷ்டம் தேடிவருகிறது என்பதை உணர்த்தும் என்று பார்க்கலாம்.

உங்கள் கனவுகளில் சூரியனைப் பார்ப்பது உங்களுக்கு விரைவில் நிறைய பணம் கிடைக்கும் என்பதைக் குறிக்கிறது என்று பவிஷ்ய புராணம் கூறுகிறது. சூரியனின் பிரகாசமான ஒளி விரைவில் உங்கள் வாழ்க்கையை ஏராளமான பணத்தால் நிரப்பும்.
சூரியனைப் போலவே, உங்கள் கனவுகளில் சந்திரனைப் பார்ப்பதும் நீங்கள் விரைவில் பணக்காரர் ஆவீர்கள் என்பதற்கான ஒரு குறிகாட்டியாகும். ஒரு கிரகமாக சந்திரன் உங்கள் வாழ்க்கையில் அமைதியான விளைவை ஏற்படுத்துகிறது.
முடி உதிர்தல் கவலை அளிக்கும் விஷயமாக இருக்கலாம், ஆனால் கனவு உலகில் உங்கள் முடி உதிர்தலைப் பார்ப்பது லக்ஷ்மி தேவி விரைவில் உங்களை ஆசீர்வதிக்க போவதற்கான ஒரு அறிகுறியாகும்.
நாம் அனைவரும் ஒரு சிறப்பு சந்தர்ப்பங்களில் அலங்கரித்து செல்வோம். இருப்பினும், ஒரு கனவில் நீங்கள் தயாராகி வருவதைக் கண்டால் என்ன ஆகும் என்று எப்போதாவது யோசித்தீர்களா? இதன் பொருள் கனவில் உங்கள் முகம் மிகவும் அழகாக இருப்பது போலவே, உங்கள் பணப்பையும் விரைவில் பணத்துடன் அழகாக இருக்கும்.
சுதந்திரம் மற்றும் குடியரசு தினத்தில் ஒரு கொடியை ஏற்றி வைக்க நாங்கள் விரும்புகிறோம், இதுபோன்ற ஒன்றை நீங்கள் ஒரு கனவில் கண்டால், நீங்கள் விரைவில் பணக்காரர் ஆவீர்கள் என்று அர்த்தமாகும்.பசு தான் நமக்கு பால் தருகிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். இருப்பினும் உங்கள் கனவில் மாடு பால் கறப்பதைப் பார்ப்பது நீங்கள் விரைவில் பணக்காரர்களாக மறுவதற்கான அறிகுறியாகும் என்பதை நம்மில் பலருக்குத் தெரியாது.

அதிகளவு தங்க நகைகளை வைத்திருப்பது செல்வத்தின் அறிகுறியாகும். ஆனால் ஒரு கனவில் உங்களை தங்கத்தில் அலங்கரிப்பதைப் பார்ப்பது உங்கள் வாழ்க்கையில் விரைவில் தங்கம் மற்றும் பணத்தைப் பெறுவதற்கான ஒரு அறிகுறியாகும்.உடைந்த கண்ணாடியைப் பார்ப்பது, நிஜ வாழ்க்கையிலும் கனவுகளிலும் ஒரு கெட்ட சகுனமாகக் கருதப்படுகிறது, இருப்பினும் உங்கள் கனவில் வெற்று, அழகான கண்ணாடியைப் பார்ப்பது நீங்கள் விரைவில் பணக்காரர் ஆவதற்கான ஒரு சிறப்பான அறிகுறியாகும்.
தானியங்கள் பூமியின் ஏராளமானபொக்கிஷங்களில் ஒன்றாக கருதப்படுகின்றன. அறுவடை பொதுவாக லாபம், செல்வம் மற்றும் மகிழ்ச்சியுடன் தொடர்புடையது. தானியங்களைப் பற்றி கனவு காண்பது என்பது நல்ல அதிர்ஷ்டம் உங்களை தேடி வரப்போகிறது என்பதன் அறிகுறியாகும்.
நாம் அனைவரும் இனிப்பான பாயசத்தை விரும்புகிறோம்? அரிசி, பால் மற்றும் சர்க்கரை ஆகியவற்றால் ஆன பாயசம் ஒரு பொதுவான இந்திய இனிப்பாகும். இருப்பினும் உங்கள் கனவுகளில் பாயசம் நிறைந்த ஒரு கிண்ணத்தைப் பார்ப்பது நீங்கள் விரைவில் பணக்காரர்களாக மாறப்போவதற்கான அறிகுறியாகும்.