கிரேக் ஷேப்ஸ் எனும் நபர் தனது சமூக தல பக்கத்தில் இரு பெண்களுடன் ஒரு ஆண் தனியாக வாழ்வது எத்தனை கொடுமை என்று உங்களுக்கு தெரியாது. இப்படி ஒரு அனுபவம் மிகவும் கொடியாது. சிலர் பெண்களுடன் தங்குவது சிறப்பாக இருக்கும் என்று கூறுவார்கள். ஆனால், நிஜமாகவே இதைவிட பெரிய கொடுமை இந்த உலகில் வேறு ஏதும் இல்லை என்று தான் நான் கூறுவேன்.

நான் சென்ற வருடம் எனது காதலி மற்றும் அவளது நெருங்கிய தோழியுடன் ஒரு வீட்டில் குடியேறினேன். அங்கே நான் எதிர்கொண்ட சூழல் மற்றும் அணிபவித்த தருணங்கள் சொல்லி மாளாதது. ஆனால், அதை மற்றவர் அறியும்படி பகிர வேண்டும் என்று கருதுகிறேன். அதற்காகவே எனது அனுபவங்களை பகிர்கிறேன் என்று கூறி சமூகதளத்தில் பதிவு செய்துள்ளார்.
ஒருவருக்கு ஒருவர் அனைவரிடம் இருந்து தங்களுக்கு வந்த செய்திகளை காண்பித்துக் கொள்கிறார்கள். இதில் ஆண்களுக்கு சுத்தமாக பாதுகாப்பே இல்லை. அனைவரும் புகைப்படங்களை தங்கள் நினைவுகளாக சேகரித்து வைத்திருந்தால், இவர்கள் இருவரும் ஸ்க்ரீன் ஷாட்களை நினைவுகளாக சேகரித்து தனி ஃபோல்டரே போட்டு வைத்திருக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
ஒருவரிடம் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகும் போது எந்த மாதிரியான மாற்றங்கள் உண்டாகும் தெரியுமா?ஒருவரிடம் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகும் போது எந்த மாதிரியான மாற்றங்கள் உண்டாகும் தெரியுமா?

ஹேர் கிளிப் எங்கே இருக்கும் என்றே சொல்ல முடியாது, நீங்கள் அதன் மீது நின்றுக் கொண்டிருக்கலாம், அமர்ந்துக் கொண்டிருக்கலா. அதனுடன் உறங்கி கொண்டிருக்கலாம்., உங்கள் சருமத்தில் ஒட்டிக் கொண்டிருக்கலாம். சொன்னால் நம்ப மாடீர்கள். நான் ஒருமுறை ஹேர் கிளிப்புடன் சேர்ந்து குளித்துள்ளேன். இதை எல்லாம் எங்கே போய் சொல்லி அழுவது.
இரவு எங்கேனும் வெளியே போகலாம் என்றால், அது குளித்து முடித்து உடை உடுத்தி செல்வதாக இருக்காது. கேட்வாக் ஷோ, நல்லா இருக்கிறதா? இல்லையா? என்று கூற வேண்டும். சில நேரம் பின்னாடி ஜிப் வைத்த உடைகள் என்றால், நீங்கள் அதை வேலையும் செய்ய வேண்டும்.
எனக்கு புருவம் முடி கொஞ்சம் அதிகம். சிலமுறை அது நீளமாக வளரும் போது, கோணலாக இருக்கிறது, அசிங்கமாக இருக்கிறது என்று கூறி அதை பிடுங்குவார்கள். ஆம்! பெண்களுக்கு வேறு நபர்களின் புருவ முடிகளை பிடிங்குவது கூட பிடித்திருக்கிறது.
டயட் எப்படி தான் இருக்கிறார்கள் என்று தெரியாது. பெரும்பாலான பெண்கள் தங்களுக்காக, தங்கள் ஆரோக்கியத்திற்காக டயட் இருப்பது இல்லை. அதற்கு மாறாக மற்ற பெண்களுடன் தங்களை ஒப்பிட்டுக் கொள் தான் டயட் இருக்கிறார்கள். இதில் சோகமாக இருந்தால் அவர்களும் சாப்பிட மாட்டார்கள், நம்மளையும் சாப்பிட விடமாடார்கள். இதில் சீட் (Cheat) டே என்று ஒன்று இருக்கிறது. அன்று மட்டும் உணவுகளை நொறுக்கி தள்ளுவார்கள்.
நீங்கள் இன்ஸ்டாகிராமில் கண்ட புதிய நபர் என்று ஏதனும் பெயர் கூறினால் போதும், அவர்கள் யார், எங்கே இருக்கிறார்கள், அவர்கள் நாயின் பெயர் முதல் அவர்கள் அணியும் ஷூ சைஸ் வரை மொத்த விபரத்தையும் அழித்துவிடுவார்கள் . வெறும் ஐந்தே நிமிடத்தில். பெண்கள் எதுவாக இருந்தாலும் கண்டுப்பிடித்துவிடுவார்கள் என்பது பொய்யில்லை.
எங்கள் வீட்டில் எங்கு பார்த்தாலும் மெழுகுவர்த்திகள் இருக்கும். எனக்கு இதன் வாடையே பிடிக்காது. ஆனால், எப்படி தான் இந்த வாடையுடன் இவர்கள் குடியிருக்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. மேலும் இது ருத்பர்ப் மற்றும் கஸ்டர்ட் வாடை என்று கூறுகிறார்கள். எனக்கு முதலில் அந்த இரண்டும் என்னவென்றே தெரியாது.
ஐரோப்பாவின் கென்ட் எனும் பகுதியில் வசித்து வரும் கிரேக் இசை துறையில் வேலை செய்து வருகிறார்கள். தனது காதலி மற்றும் அவரது தோழியுடன் வசித்து வரும் கிரேக். நகைச்சுவையாக இரு பெண்களுடன் வசித்து வரும் தனது அனுபவத்தை தன் சமூக தளப்பக்கதில் பகிர்ந்திருந்தார். இவரது பதிவு ஆயிரக்கணக்கானவர்களால் லைக் மற்றும் ஷேர் செய்யப்பட்டு வைரலாக பரவி வருகிறது.