விவசாய நடவடிக்கைகளில் ஆர்வமுள்ள வேலையற்ற இளைஞர்களுக்கு மானிய வட்டி வீதத்துடன் கடன்களை வழங்கும் விசேட வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிகளால், வேலை வாய்ப்பின்றி தடுமாறும்,

அரச வங்கிகளில் கடன் பெற முடியாத நிலையில் உள்ள, விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு இந்த நிவாரணம் வழங்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இளைஞர்களிடையே இதுபோன்ற நடவடிக்கைகளை மேலும் ஊக்குவிக்கும் முயற்சியாகவும், விவசாயம் சார்ந்த செயல்களில் ஆர்வமுள்ளவர்களுக்கு சொந்தமாக பண்ணை அல்லது கால்நடை வளர்ப்பை மேலும் மேம்படுத்தும் முயற்சியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த வேலைத்திட்டத்தின் முதல் கட்டத்தின் ஒரு பகுதியாக அம்பாந்தோட்டை மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 50 இளைஞர்களுக்கு, 6.5% என்ற வட்டி வீதத்தில் 10 இலட்சம் மற்றும் 20 இலட்சம் ரூபாவை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதற்காக அரச வங்கிகளில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதற்கேற்ப நடவடிக்கை எடுக்குமாறு பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.