காதல் ஒருவரை தாக்கும் போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் எதிர்வினையாற்றுகிறார்கள். காதலுக்காக சிலர் எதையும் செய்ய தயாராக இருக்கும்போது, சிலர் தங்கள் குடும்பத்திற்காக எதையும் செய்ய தயாராக இருக்கிறார்கள். அவர்களுக்கு அனைத்தையும் அவர்களின் குடும்பமே மிகவும் முக்கியமானதாக இருக்கும்.

இப்படிப்பட்டவர்கள் தங்கள் குடும்பத்தினரின் நலனுக்காகவும், மகிழ்ச்சிக்காகவும் எதையும் செய்வார்கள. அதில் முக்கியமானது அவர்களின் திருமணம். அவர்களுக்கு பிடிக்காதவர்களாக இருந்தாலும், அவர்களுக்கு திருமணமே பிடிக்காமல் இருந்தாலும் அவர்கள் தங்கள் குடும்பத்தினருக்காக திருமணம் செய்து கொள்வார்கள். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் குடும்பத்திற்காக திருமணம் செய்து கொள்வார்கள் என்று பார்க்கலாம்.
துலாம்
கடமை உணர்வு மற்றும் சாந்தகுணம் போன்றவை அவர்களின் அடிப்படை குணங்களாகும். ஒரு குடும்பம் சார்ந்த தனிநபராக, துலாம் ராசிக்காரர்கள் தங்கள் குடும்பத்திற்கு எல்லாவற்றிற்கும் கடன்பட்டிருப்பதாக உணர்கிறார்கள், எனவே அவர்கள் தங்கள் தொழில் முதல் காதல் வாழ்க்கை வரை எந்த விஷயத்திலும் தங்கள் குடும்பத்தில் உள்ள பெரியவர்களின் விருப்பத்திற்குக் கீழ்ப்படிகிறார்கள். அவர்கள் உண்மையிலேயே தங்கள் பெற்றோரின் கட்டளைகளுக்கு சரணடைவதால், அவர்கள் திருமணத்தில் மகிழ்ச்சியாக இருப்பார்களா இல்லையா என்ற எண்ணங்கள் அவர்களுக்கு முக்கியமற்றவையாக இருக்கிறது. அதனால் குடும்பத்தினருக்காகவே திருமணம் செய்து கொள்கிறார்கள்.
தனுசு
விடாமுயற்சி, உறுதியான மற்றும் மரியாதைக்குரிய அனைத்து சிறப்பு சொற்களும் தனுசு ராசியை சிறப்பாக வரையறுக்கப் பயன்படும். அவர்கள் அவர்களின் குடும்பம் தொடர்ந்து அமைதியுடனும் ஒற்றுமையுடனும் வாழ்வதை உறுதிசெய்கிறார்கள். எனவே, தங்களுக்கு சரியான பொருத்தத்தைக் கண்டுபிடித்து தேர்ந்தெடுக்கும் பொறுப்பை அவர்கள் பெற்றோரிடம் விட்டுவிடுகிறார்கள். அவர்களில் பலர் நிச்சயிக்கப்பட்ட திருமணங்களின் சக்தியை நம்புகிறார்கள் மற்றும் தங்கள் குடும்பத்தின் மகிழ்ச்சியை எதிர்மறையாக பாதிக்கும் ஒருவரைத் தேர்ந்தெடுக்கும் பயத்தில் தங்கள் சொந்த துணையைத் தேடுவதில்லை.

ரிஷபம்
ரிஷபம் என்பது தொடர்ந்து காதலில் இருக்கும் ஒரு ராசியாகும். அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் பல உறவுகள் இருந்தாலும, இந்த பூமியின் அடையாளத்தால் ஆளப்படும் பல நபர்கள் தங்கள் விருப்பத்திற்கு எதிராக திருமணம் செய்து கொண்டு தங்கள் குடும்பங்களுடன் மிகவும் இணைந்திருக்கிறார்கள். அவர்கள் தேர்ந்தெடுத்த காதலை பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ளாத போது, கடமை உணர்வுடன் தங்கள் குடும்பத்தை மகிழ்விப்பதற்காக அவர்கள் சகித்துக் கொண்டு பெற்றோருக்காக திருமணம் செய்து கொள்வார்கள்.
மிதுனம்மற்ற ராசிக்காரர்களைப் போலல்லாமல் மிதுன ராசிக்காரர்களுக்கு பெரும்பாலும் திருமணம் என்ற உறவிலேயே நம்பிக்கையில்லை. அவர்கள் வாழ்நாள் முழுவதும் ஒரு நபருடன் பிணைக்கப்படுவதை அவர்கள் விரும்பமாட்டார்கள். அவர்கள் வேடிக்கையாக இருக்கவும், உலகத்தை சுற்றவும், அவர்களின் சுதந்திரத்தில் திருப்தியடையவும் விரும்புகிறார்கள். திருமணம் தங்களின் வாழ்க்கையில் சுமையை அதிகரிப்பதாக நினைக்கிறார்கள். இருப்பினும் தங்கள் குடும்பத்தின் மகிழ்ச்சிக்காக அவர்கள் திருமண பந்தத்தில் இணைய தயங்க மாட்டார்கள்.