விஜய் த்ரிஷா ரொமான்ஸ் பற்றி மனம் திறந்த த்ரிஷா !

Featured செய்திகள்

‘கில்லி’ படத்தில் நடித்தது குறித்து பல சுவாரஸ்யமான விஷயங்களை நடிகை த்ரிஷா மனம் திறந்து பேசியுள்ளார்.

நடிகை த்ரிஷா
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை த்ரிஷா. கதாநாயகிகளால் சினிமா துறையில் நீடிக்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியவர் நடிகை த்ரிஷா.

பள்ளி காலத்திலேயே மாடலிங் துறையில் கால்பதித்த த்ரிஷா, மிஸ் சேலம், மிஸ் மெட்ராஸ் பட்டங்களை வென்றவர். தமிழ் சினிமாவில்‘லேசா லேசா’ திரைப்படத்தில் மூலம் ஒப்பந்தமானார் த்ரிஷா. ஆனால் அதற்கு முன்னதாகவே ‘மெளனம் பேசியதே’ வெளியானது.


முன்னணி நடிகர்களான அஜீத், விஜய், சூர்யா, விக்ரம் போன்ற நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன் – 2’ படத்தில் த்ரிஷா நடித்திருந்தார்.

சமீபத்தில் இப்படம் வெளியானி மக்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது நடிகர் விஜய்க்கு ஜோடியாக ‘லியோ’ படத்தில் த்ரிஷா நடித்து வருகிறார்.


மனம் திறந்து பேசிய த்ரிஷா
இந்நிலையில், ஒரு சேனலுக்கு நடிகை த்ரிஷா பேட்டி கொடுத்துள்ளார்.

அந்த பேட்டியில், நடிகை த்ரிஷா மனம் திறந்து பேசியுள்ளார்.

அப்போது அவர் பேசுகையில்,

படத்தில் நடிக்கும்போது நடிகைகளுக்கு கிளாமர் வெவ்வேறாக இருக்கும். எல்லாருக்குமே வித்தியாசம் இருக்கும். கிளாமர் என்பது கவர்ச்சியோ, செக்ஸியோ மட்டும் கிடையாது. நான் கிளாமரில் நடிக்க யோசித்துல்லாம் செய்ய மாட்டேன். அந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருந்தா கிளாமராக நடிப்பேன். இல்லையென்றால் சில நேரங்களில் எனக்கு அது சங்கடமாக அமைந்துவிடும். எனக்கு அந்த கிளாமர் நடிப்பு பிடிக்கவில்லையென்றால் அது அப்படியே திரையில் தெரியும்.


‘கில்லி’ படத்தில் அந்த கலங்கரை விளக்கத்தில் நடிப்பது பற்றி தொகுப்பாளர் கேட்க, அதற்கு த்ரிஷா பேசுகையில்,அந்த சீன் இரவு 2 மணிக்கு எடுக்கப்பட்டது. எனக்கும், விஜய்க்கும் நல்ல தூக்கம் வந்தது. ரெண்டு பேரும் நல்லா தூங்கு மூஞ்சா இருந்தது. இயக்குநர் வந்து எங்களிடம் அய்யோ… இது ரொமான்ஸ் சீன். இரண்டு பேரும் தூங்குறீங்கன்னு வந்து சொன்னாரு. அந்த சீனுக்காக 15 மணி நேரமாக ஷூட் பண்ணிட்டிருந்தாங்க. எங்களுக்கு ரொம்ப கலைப்பாகிவிட்டது. திரையில் பார்க்க ரொம்ப அழகா இருக்கும். ஆனா… நமக்குத்தான் தெரியும் அந்த நேரத்தில் எப்படி இருந்தோம்ன்னு. ரொமான்ஸ்லாம் ரொம்ப கஷ்டம். ஆனா… அதை செய்துதான் ஆக வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *