அதிகம் சண்டையிடும் 5 ராசிக்காரர்கள்..!! வாங்க பார்க்கலாம்.!

பிரதான செய்திகள்

ஒவ்வொரு ராசியும் ஒரு குறிப்பிட்ட பொதுவான குணாதிசயங்கள் கொண்டிருக்கும். அவை அணைத்தும் அந்த ராசியை ஆளக்கூடிய கிரகங்கள் மற்றும் அந்த நபரின் நட்சத்திரத்தை ஆளக்கூடிய கிரகத்தை பொருத்து அமைவதாக இருக்கும்.சிலரின் குணம் அதிகம் சண்டையிடுவதாக இருக்கும். சிறிய விஷயங்களுக்குக் கூட தேவையில்லாமல் வாதிடுவதும், சண்டையிடுவதும் என இருப்பார்கள்.


ரிஷபம்ரிஷபம் ராசி குறியீடே காளை ஆகும். இவர்கள் பல நேரத்தில் பிரச்சினைக்குரிய விஷயங்களை சரியாக புரிந்து கொள்ளாமல், அடுத்தவர் சொல்வதைக்கூடக் காது கொடுத்துக் கேட்காமல், வாக்குவாதத்தில் ஈடுபடுவார்கள். இதனால் சிறிய விஷயம் கூட தேவையற்ற வாக்குவாதம், சண்டையாக வாய்ப்புள்ளது.

கடகம்கடக ராசில் அதிபதி சந்திரன். மனோகாரகனான சந்திரன் மற்றவர்கள் மீது அதீத அன்பையும், அதே சமயம் உணர்ச்சிவசத்தை அதிகம் கொடுப்பவராக இருப்பார்.இவர் மற்றவர்களிடம் சிறப்பாக பழகினாலும், பல நேரங்களில் உணர்ச்சிவசத்தால் சிறிய விஷயங்களைக் கூட பொறுத்துக் கொள்ள முடியாமல் மற்றவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுதல், சண்டையிடுதல் போன்ற விஷயங்களில் ஈடுபடக்கூடியவர்களாக இருப்பார்கள்.இது போன்ற விஷயங்களை தவிர்க்கவும். இல்லையெனில் நீங்கள் பின்னர் வருத்தப்படுவீர்கள்.

கன்னிகன்னி ராசியினர் சுயமாக இருக்க வேண்டும், மற்றவர்களைச் சாராமல் இருக்க வேண்டும் என நினைக்கக்கூடியவர்கள். கன்னி ராசியினர் சண்டையிட பல நேரங்களில் காரணமே இருக்காது.அவர்கள் விஷயங்களை தவறாக புரிந்து கொண்டு குழப்பமான சூழலை உருவாக்கிக் கொள்வார்கள். இதனால் மற்றவர்களின் மனம் புண்படும் விதத்தில் நடந்து கொள்வார்கள்.


விருச்சிகம்விருச்சிக ராசி அதிபதி செவ்வாய். இவர் ஒருவருக்கு வீரம், ஆக்ரோஷம், வேகம் உள்ளிட்டவற்றை தரக்கூடியவர். படைத் தலைவன், வீரனாக செயல்படக்கூடிய செவ்வாய் அதிபதி என்பதால், இவர்கள் சற்று ஆக்ரோஷமானவர்களாக இருப்பார்கள்.இவர்கள் தவறு செய்தாலும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். வாக்குவாதங்கள் எதிலும் தோற்க விரும்பாதவர்களாகவும், ஆணவக்காரராகவும் இருப்பதால், இவர்கள் தொடர்ந்து வாதிடக்கூடியவர்களாக இருப்பார்கள்.

மகரம்மகர ராசிக்காரர்கள் கணிக்க முடியாதவர்கள் மற்றும் பிடிவாதமானவர்கள். எனவே அவர்கள் தங்களால் தவறை ஒத்துக் கொள்ள முடியாத போதெல்லாம் அவர்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ள மற்றவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *