ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஏதோ ஒரு மர்மம்நிச்சயம் ஒளிந்திருக்கும். நமது கையில் இருக்கும் கோடுகள் நம் எதிர்காலத்தை தெரிந்து கொள்வதில் மிகவும் பயனுள்ளவையாக இருக்கும். கையில் உள்ள ரேகைகள் மாறிக்கொண்டே இருக்கும் என்று கூறப்படுகிறது, ஆனால் சில கோடுகள் எப்போதும் இருக்கும் மற்றும் எதிர்காலத்தைப் பற்றிய துல்லியமான அறிகுறிகளைக் கொடுக்கும்.

கையில் உள்ள சில ரேகைகள் ஒரு நபரின் வேலை அல்லது வணிகம் பற்றிய தகவலையும் வழங்குகின்றன. அரசு வேலைக்கு ஆசைப்படுபவருக்கு, அரசு வேலை கிடைக்குமா, கிடைக்காதா என்ற கேள்வி பலரின் மனதில் ஒளிந்திருக்கிறது.
ஒருவரின் கர்மவினைக்கு ஏற்ப, கையில் உள்ள கோடுகளில் மாற்றங்கள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. இருப்பினும், கைரேகையின் படி எந்த கோடுகள் மற்றும் நிலைகள் அரசாங்க வேலை பெறுவதற்கான வாய்ப்பைக் குறிக்கின்றன என்பதை இந்த பதவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.
ஒருவரது உள்ளங்கையில் சூரியன் ரேகையில் மேடு இருந்தால், அந்த மேட்டில் எந்த இடையூறும் இல்லாமல் நேர்கோட்டில் இருந்தால், அது அரசு வேலைக்கான வலுவான யோகத்தை உண்டாக்கும்.ஒருவரின் உள்ளங்கையில் குரு மேட்டை நோக்கி சூரிய ரேகையில் இருந்து கோடு இருந்தால், அத்தகைய நபர் உயர் பதவியில் இருக்கும் அரசு அதிகாரியாக வாய்ப்புள்ளது.

ஒருவரது உள்ளங்கையில் புதன் மேட்டில் முக்கோண வடிவம் இருந்தால், அவர்கள் அரசு வேலையில் உயர் பதவியைப் பெற வாய்ப்புள்ளது.ரு நபரின் உள்ளங்கையில் ஆயுள் ரேகை குரு மேட்டை நோக்கி ரேகைகளைக் கொண்டிருந்தால்,அத்தகைய நபருக்கு அரசு வேலை கிடைப்பதற்கான வலுவான வாய்ப்புகள் உள்ளன.
குரு மற்றும் சனி மேட்டுக்கு இடையில் இருந்து விதி ரேகை மற்றும் தலைமை ரேகை குறுக்கிட்டு வெளியே வந்தால், அத்தகையவர்களுக்கு அரசாங்க வேலை கண்டிப்பாகக் கிடைக்கும்.ஒருவரின் உள்ளங்கையில் குரு மற்றும் சூரியன் மேடுகள் தீர்க்கமாக இருந்தால், அவர்கள் திறமை மற்றும் நிபுணத்துவம் பெற்றவர்களாக இருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் தங்கள் வாழ்நாளில் 30 வயதிற்குள்க்குள் அரசு வேலை பெறலாம்.