உருத்திரபுரம் சிவன் ஆலயத்தின் 2400 ஆண்டு பழமையான சற்சதுர வடிவ ஆவுடைலிங்கம் 1882 ஆம் ஆண்டு அடையாளப்படுத்தப்பட்டது.மூத்த பேராசிரியர் பத்மநாதன் அவர்கள் சற்சதுர ஆவுடைலிங்கங்கள் 2400 ஆண்டு பழமையானது என்று என உறுதி செய்து இருக்கின்றார்.

அதனால் உருத்திரபுர சிவாலய கட்டட இடிபாடுகளை சோழர்காலத்துக்கு முற்பட்டவையாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் சொல்லுகின்றார்கள்.அதனாடிப்படையில் பல்லவரின் பத்தி இயக்க காலத்தில் உருத்திரபுர சிவன் கோயில் எழுச்சியடைந்திருக்க வேண்டும் என ஆய்வாளர்கள் பதிவு செய்து இருக்கின்றார்கள்.
குறிப்பாக இங்கே கிடைத்த லிங்க உருவங்களும், சூலம் பொறித்த மட்பாண்டங்கள் பல 2300 ஆண்டுகளுக்கு முன்னரே இங்கே சிவ வழிபாடு இருந்ததற்கான சான்றாக சொல்லப்படுகின்றன.அதேபோல இங்கே இயிருக்கும் சுடுமண் உருவங்கள் தாய் தெய்வ வழிபாட்டின் தொன்மையை உறுதி செய்து இருக்கின்றன.

ஆனால் 1956 ஆம் ஆண்டு இப்பகுதியில் பௌத்த மத தொல்லியல் சின்னங்கள் பல அடையாளம் காணப்பட்டு இருப்பதாக தொல்லியல் திணைக்களம் சொல்லுகின்றது.அதனாடிப்டையில் இங்கே தூபி ஒன்றின் சிதைவுகள் கிடைத்தாக சொல்லுகின்றார்கள் . அதேபோல சிங்க உருவம்
ஒன்றின் தலை, நாணயங்கள், தூபிக்குரிய தூண்கள் என்பவரை கண்டுபிடித்து இருப்பதாக சொல்லுகின்றனர்.இதனாடிப்படையில் மஹிந்த ராஜபக்சே அரசாங்கம் உருத்திரபுர ஆலய பகுதியை தொல்லியல் பகுதியாக வர்த்தமானியில் அறிவித்து இருக்கின்றது.