இந்த 5 ராசிக்காரங்க எப்பவும் பண கஷ்டத்துல இருப்பங்களாம்..!அதுக்கு காரணம் இவங்கதானாம்..

பிரதான செய்திகள்

பணம் இல்லாமல் இந்த உலகில் நாம் எதையும் செய்ய முடியாது. எல்லாவற்றிற்கும் பணம் தேவை. ஆனால், அதேநேரம் தேவையில்லாத செலவுகளை தவிர்த்து, பணத்தை சேமிக்க வேண்டும். இது உங்களின் எதிர்கால பொருளாதாரத்திற்கு நல்லது. நீங்கள் வெளியே செல்லும்போது, இரண்டு வகையான மக்கள் இருப்பதை கவனித்து இருக்கலாம்.


ஹோட்டல் அல்லது ஏதாவது பொருள் வாங்கும்போது, ஒருவர் பணம் செலுத்துவதற்காக பர்ஸை வெளியே எடுப்பார். மற்றொருவர், ஒருபோதும் பண பர்ஸை வெளியில் எடுக்க மாட்டார்கள். ஆனால், தேவையான இடத்தில் நாம் பணத்தை செலவு செய்துதான் ஆக வேண்டும். ஆடம்பரமாக செலவு செய்வது மற்றும் தேவையில்லாமல் பணம் செலவழிப்பதை யாராக இருந்தாலும் தவிர்க்க வேண்டும்.

ஏனெனில், இது உங்களுக்கு ஏற்படும் பண கஷ்டத்தை தடுக்க உதவும். பணத்தை நிர்வகிக்கும் ஆளுமை பண்பைக் குறித்து ஜோதிடம் கூறுகிறது. ராசி அறிகுறிகளின் அடிப்படையில், பணத்தை தண்ணீராக செலவழிக்கும் ராசிகளை பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம். அவர்களின் நீங்களும் ஒருவரா? உங்கள் நண்பர் அல்லது சக ஊழியர் அவர்களில் ஒருவரா? என இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.

தனுசுதனுசு ராசிக்காரர்கள் எதிர்காலத்தைப் பற்றி குறைவாகவும் இந்த நேரத்தில் வாழ்வதைப் பற்றி அதிகமாகவும் சிந்திக்கிறார்கள். அவர்களின் இந்த மனப்பான்மை பெரும்பாலும் அவர்களுக்கு பணப் பற்றாக்குறையை ஏற்படுத்துகிறது. அவர்கள் சேமிப்பு அல்லது பொருள் சார்ந்த விஷயங்களில் அதிகமாக முதலீடு செய்வதில்லை. இந்த ராசிக்காரர்கள் இந்த நேரம் மற்றும் இந்த நொடி உலகை அனுபவிப்பதில் அதிக ஆர்வமாக உள்ளனர். எனவே அவர்களிடம் அதிக பணம் இருக்கும் என்றும் பணத்தை சேர்த்து வைத்திருப்பார்கள் என்றும் ஒருபோதும் எதிர்பார்க்க வேண்டாம்.

துலாம்துலாம் ராசிக்காரர்கள் பலருக்கு கடன் வாங்கும் பழக்கம் உள்ளது. அவர்கள் பொறுப்பற்ற முறையில் செலவு செய்கிறார்கள். பணத்தை சேர்த்து வைக்கமால் அதிகமாக கடன் வாங்கி செலவு செய்கிறார்கள். நிதி விஷயத்தில் இந்த ராசிக்காரர்கள் மிகவும் சோம்பேறியாக இருக்கிறார்கள். இதனால், நிதி பிரச்சனையை இவர்கள் அதிகமாக சந்திக்க வேண்டியிருக்கும்.


மிதுனம்மிதுன ராசிக்காரர்கள் மக்கள் மற்றும் உறவினர்களுக்கு முன்னாள் ஆடம்பராமாக செலவு செய்யும் தோற்றத்தை காண்பிக்க விரும்புகிறார்கள். வெளியில் சென்று பார்ட்டிக்கு வரும்போது அவர்கள் ஆடம்பரமாக இருக்கிறார்கள். ஆனால் உண்மை என்னவென்றால், அவர்களால் அந்தளவிற்கு பணம் செலவழிக்க முடியாது. ஏனெனில், அவர்களிடம் பணம் இருக்காது. இந்த ராசிக்காரர்கள் தேவையில்லாத பொருட்களை வாங்கிவிட்டு, செலவழிக்கும் சுகம் தீர்ந்து போனதும், அவர்களின் வங்கிக் கணக்கைப் பார்த்து அவர்கள் வருத்தப்படுவார்கள்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களால் இல்லை என்று சொல்ல முடியாது. நெருங்கிய யாருக்காவது பணம் தேவைப்பட்டால், தங்களிடம் குறைவாக இருந்தாலும் மகிழ்ச்சியுடன் கொடுப்பார்கள். இந்த உதவி சிறியதாக ஆரம்பித்து அதிகமாக மாற வாய்ப்புள்ளது. இதனால், இந்த ராசிக்காரர்களுக்கு பணப் பற்றாக்குறை ஏற்படலம். இந்த ராசிக்காரர்களால் பணத்தை எப்போதும் சேமிக்கவே முடியாது. ஏனெனில், இவர்கள் பணத்தை செலவழிப்பதில் குறியாக இருக்கிறார்கள்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் பணத்தை செலவு செய்ய யோசிக்க மாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் ஆடம்பரமான ரசனை கொண்ட ஒருவருடன் டேட்டிங் செய்ய விரும்புகிறார்கள். அவர்களின் துணை நிறைய பணம் சம்பாதிக்கலாம். ஆனால் விருச்சிக ராசிக்காரர்களின் ஈகோ தங்கள் துணை செலவு செய்வதை விரும்பமாட்டார்கள். தங்களை விட அதிகம் சம்பாதிக்கும் நபருடன் பழகினால் அவர்களிடம் பணம் இல்லை என்பதை இந்த ராசிக்காரர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.

இதர ராசிக்காரர்கள்
ரிஷபம், கடகம், சிம்மம், கன்னி, தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிக்காரர்களும் பணத்தைச் செலவழிப்பார்கள். ஆனால் அவர்கள் ஒவ்வொரு மாதமும் பணத்தை சேமித்து வைத்திருப்பார்கள். தேவையில்லாமல் இவர்கள் பணத்தை செலவு செய்ய மாட்டார்கள் மற்றும் பண விஷயத்தில் மிகவும் கவனமாகவும் பொறுப்பாகவும் இருப்பார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *