இந்த 5 ராசிக்காரங்க ஆபிஸில் என்ன நடந்தாலும் பொறுமையாதான் இருப்பாங்களாம்..!! இவங்களுக்கு கோபமே வராதாம்!

பிரதான செய்திகள்

பொறுத்தார் பூமி ஆள்வார்’, ‘பொறுமை கடலினும் பெரியது’ போன்ற திருக்குறளும் பழமொழிகளும் பொறுமையை பற்றி அதிகம் கூறுகிறது. ஆனால், ஒரு மனிதன் எல்லா நேரங்களிலும் பொறுமையாக இருக்க முடியுமா? என்றால் அது கேள்விகுறித்தான்.


ஏனெனில் பெரும்பலான மனிதர்கள் தங்கள் வாழ்க்கையில் பொறுமையை கடைபிடிப்பார்கள். ஆனால், ஒருகட்டத்திற்குமேல் பொறுமையை இழந்து கத்த தொடங்கிவிடுவார்கள். உங்களின் பொறுமையை சோதிக்கும் பலர் இவ்வுலகில் உள்ளனர். அவர்கள் உங்கள் வாழ்க்கையில் வந்து பல நேரங்களில் உங்கள் பொறுமையை சோதிப்பார்கள்.

நிச்சயமாக பொறுமையாக அமைதியாக இருப்பது ஒரு நல்லொழுக்க பண்பு. அதேநேரம் கொஞ்சமும் பொறுமை இல்லாத மனிதர்களும் இவ்வுலகில் இருக்கிறார்கள். முதலாளி எவ்வளவு கோபமாக திட்டினாலும் கத்தினாலும், இந்த நபர்கள் பொறுமையாக இருப்பார்கள்.
அவர்கள் எந்த ராசி அறிகுறிகள் என்று இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.

மகரம்மகர ராசிக்காரர்கள் மிகவும் உறுதியானவர்கள், வலிமையானவர்கள் மற்றும் தைரியமானவர்கள். அவர்கள் அதிக மன அழுத்தத்தில் இருக்கும்போது கூட அமைதியாகவும் பொறுமையாகவும் இருப்பதில் சிறந்தவர்கள். எனவே, இந்த ராசிக்காரர்களின் முதலாளி கோபமடைந்து, அவர்களுக்கு முன்பாகவோ அல்லது அவர்களைப் பற்றியோ திட்டும்போது, அவர்கள் சிறிதும் பதிலளிக்காமல்,

அமைதியாகவே இருப்பார்கள். இந்த ராசிக்காரர்கள் இதை நினைத்து வருந்தவும் மாட்டார்கள். பிரச்சனை எதற்காக வந்தது என சிந்தித்து, அதை தீர்க்க அவர்கள் முயற்சி செய்வார்கள். இந்த ராசிக்காரர்களுக்கு நன்மை மற்றும் தீமை எது என பார்த்துவிட்டு வேலையை தொடங்கும் பழக்கம் உள்ளது.


கன்னிகன்னி ராசிக்காரர்கள் பகுப்பாய்வு செய்வதிலும் மற்றும் நடைமுறையை புரிந்துகொண்டு செயல்படுவதிலும் வல்லவர்களாக இருப்பார்கள். இந்த ராசிக்காரர்கள் பரிபூரணவாதிகள் மற்றும் அவர்களின் முதலாளி அவர்கள் மீது கோபமாக இருந்தாலும், கோபத்தைக் காட்டினாலும், அவர்கள் எதிர்வினையை காட்ட மாட்டார்கள். அவர்கள் மனதிற்குள் கோபம் இருந்தாலும், அதை அடக்கிக்கொண்டு அமைதியாகவும் பொறுமையாகவும் இருப்பார்கள். கன்னி ராசிக்காரர்கள் கடினமான சூழ்நிலைகளில் பகுத்தறிவு முடிவுகளை எடுக்கும் திறன் கொண்டவர்களாக இருப்பார்கள்.

துலாம்துலாம் ராசிக்காரர்கள் ஒரு பிரச்சனையின் அனைத்து அம்சங்களையும் ஆழமாக பகுப்பாய்வு செய்வதால் சமநிலைப்படுத்துவதில் சரியானவர்களாக இருக்கிறார்கள். ஆதலால், இந்த ராசிக்காரர்களால் கடினமான முதலாளிகளை நிர்வகிக்க முடியும். எந்த நிலையிலும் முட்டாள்தனமான முடிவுகளை இவர்கள் எடுக்க மாட்டார்கள்.

கும்பம்கும்ப ராசிக்காரர்கள் மிகவும் சுறுசுறுப்பானவர்கள். ஆனால், அவர்கள் சந்திக்கும் கடினமான மற்றும் மோசமான சூழ்நிலைகளில் தங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் வல்லவர்களாக இருப்பார்கள். இந்த ராசிக்காரர்கள் தங்கள் முதலாளி கோபமாக இருக்கும்போது அமைதியாக இருப்பார்கள்.

இதர ராசிக்காரர்கள்மேஷம், மிதுனம், மீனம் ஆகிய ராசிக்காரர்கள் சில சூழ்நிலைகளில் பொறுமையை இழந்து கோபத்தை வெளிப்படுத்துவார்கள். குறிப்பாக தங்கள் மீது எந்த தவறும் இல்லாதபோது, அவர்களை திட்டுவதை, அவர்களால் தாங்க முடியாது. ஆதலால், முதலாளி கோபப்பட்டு கத்தும்போது, கோபத்தில் கண்ணீரையோ அல்லது கூச்சலிடுவதையோ போன்ற எதிர்ப்புகளை இந்த ராசிக்காரர்கள் வெளிப்படுத்தலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *