தையிட்டி போராட்டக்களத்தில் அதிகரிக்கும் பதற்றம்..!! விகாரையை சூழ ஆயுதம் தாங்கிய படையினர் குவிப்பு!

செய்திகள்

யாழ்ப்பாணம், தையிட்டி விகாரையை சூழவுள்ள வீதிகளில் சிறிலங்கா இராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.அத்துடன் உழவு இயந்திரங்களில் முட்கம்பிகள், வீதி தடை கம்பிகள் என்பவற்றை ஏற்றி வந்து வீதிகளில் போட்டு, வீதி தடைகளை ஏற்படுத்தியுள்ளனர்.


அதேவேளை பெருமளவான இராணுவம் துப்பாக்கிகளுடன் விகாரையை சூழவுள்ள பகுதிகளில் குவிக்கப்பட்டு, கடுமையான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.நேற்று மதியம் முதல் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட பெருமளவான மக்கள் ஒன்று கூடி தொடர் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

இதன் போது தையிட்டியில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரையை அகற்றுமாறும், அதனைச் சூழவுள்ள மக்களின் காணிகளை விடுவிக்குமாறும் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இவ்வாறான நிலையில், மக்களின் போராட்டத்தை தடுத்து நிறுத்தும் நோக்கில் இரவோடு இரவாக காவல்துறைியனர் குவிக்கப்பட்டு போராட்டக்காரர்களை விரட்டியப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டது.இதன் தொடர்ச்சியாக போராட்டக்களத்தில் நின்றவர்களில் பெண் உட்பட ஐவரை எந்தவிதமாக காணமுமின்றி காவல்துறையினர் கைது செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.