எப்படிப்பட்ட ஜாதக அமைப்பு இருந்தால் திருமணம் செய்யக்கூடாதாம்..!!

செய்திகள்

திருமண பொருத்தம் என்பது ஆயிரம் காலத்து பயிர்.ஜனன கால ஜாதகம் என்பது நம்முடைய வாழ்க்கை மற்றும் நம் குண நலன்களை தீர்மானிக்கும்.அதே போன்று நம்முடைய திருமண வாழ்க்கை மன நிறைவுடனும் மகிழ்ச்சியுடனும் இருக்க சரியான பொருத்தத்தை தேர்வு செய்வது அவசியம்.


ஒருவர் திருமணம் செய்யக்கூடிய காலம் குரு பலம் நிறைந்தாக அதாவது குரு தசா, புத்தி நடந்து கொண்டிருந்தால் மிகவும் நல்லது.ஏனெனில் குருவின் அருள் திருவருள் என்று கூறப்படுகிறது. ஒருவருக்கு நல்ல தசா புத்தி நடக்கும் போது திருமணம் முடிக்க சிறப்பானதாக இருக்கும்.

திருமண முயற்சியில் எந்த பிரச்னையும் இருக்காது என்று கூறப்படுகிறது.பொதுவாக சனி திசையோ அல்லது ஏழரை சனி காலம் நடக்கும் போது திருமணம் செய்வதை தவிர்க்கலாம்.ஒருவருக்கு ஏழரை சனி நடக்கும் போது அவருக்கு ராகு திசையோ அல்லது கேது திசை நடந்தாலும் திருமணத்தை தவிர்ப்பது மிகவும் நல்லது.


எவ்வாறான பொருத்தம் அமைய வேண்டும்.ஒருவரின் ஜாதகத்தில் மோசமான விஷயங்கள் எல்லாவற்றையும் முறியடிக்கும் விதமாக அவருக்கு வர இருக்கும் ஆண் அல்லது பெண் துணையின் ஜாதக அமைப்பு இருக்க வேண்டும்.நல்ல திசை, புத்தியுடன் உள்ள ஜாதகம் இருக்கும் போது அந்த மணமக்களை சேர்த்து வைப்பது வழக்கம்.

திருமணம் செய்ய உள்ள ஒரு ஆண் அல்லது பெண்ணுக்கு ராகு திசையும், ஏழரை சனியும் ஒன்றாக நடக்கிறது என வைத்துக் கொண்டால் அவருக்கு வரக்கூடிய துணையின் ஜாதகத்தில் குரு திசை அல்லது சுக்ர திசை நடந்தால் குறிப்பிட்ட விஷயங்களை சமன் செய்யும் விதத்தில் இருக்கும்.அப்படிப்பட்ட ஜாதகம் வரும் வரை பொருத்து இருந்து சரியான பொருத்தம் அமைந்த பின்னர் திருமணம் முடிக்கலாம் என்கிறது ஜோதிடம்.