காதலில் எப்போதும் ஒருவரையொருவர் சார்ந்திருக்க வேண்டியது மிகவும் அவசியம். அப்போதுதான் உறவில் மகிழ்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நிறைந்திருக்கும். இந்த சார்பு நிலையும் குறிப்பிட்ட எல்லைக்குள் இருக்க வேண்டும். ஏனெனில் சார்புநிலை ஒட்டுண்ணி நிலையாக மாறும்போது அது உறவிற்குள் விரிசலை ஏற்படுத்தும்.

பொதுவாக பெண்கள் காதலில் ஆதிக்கம் செலுத்துபவராகத்தான் இருக்க விரும்புவார்கள். ஆனால் விதிவிலக்காக சில பெண்கள் காதலில் எப்போதும் தங்கள் காதலரை சார்ந்திருப்பதில் மகிழ்ச்சியாக உணர்வார்கள். அவர்கள் தங்கள் வாழ்க்கையின் அணைத்து தருணங்களிலும் தங்கள் காதலர் உடனிருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். ஜோதிட சாஸ்திரத்தின் படி சில ராசி பெண்கள் இந்த வினோதமான குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
கடகம்அதிக அன்பும், இரக்கமும் உள்ள ராசி என்றால் அது கடக ராசிதான். அதனால்தான் கடக ராசிக்காரர்கள் அவர்கள் எவ்வளவு அன்பான இதயம் மற்றும் அன்பின் உணர்வைப் பொக்கிஷமாகக் கொண்டவர்கள் என்று வரையறுக்கப்படுகிறார்கள். இதயம் முழுக்க அன்பு நிறைந்த கடக ராசி பெண்கள் அவர்களின் கூட்டாளர்களுடன் இணைந்திருப்பதும், அவர்களுடன் எப்போதும் தொடர்பில் இருப்பதும், அவர்களை சார்ந்திருப்பதும் காதலில் விழுந்தவுடன் அவர்களின் இயல்பான குணமாக மாறிவிடுகிறது.
துலாம்காதலில் இருக்கும் போது அவர்களின் காதலரைப் பற்றிய எந்நேரமும் சிந்திப்பவர்கள் துலாம் ராசிக்காரர்கள். துலாம் ராசிக்காரர்கள் எப்போதும் தங்களைச் சுற்றி அன்பானவர்கள் இருக்க வேண்டுமென்று விரும்புகிறார்கள், மேலும் அவர்களை நேசிக்கும் நபர்களை இருமடங்கு அதிகமாக நேசிப்பார்கள். இந்த ராசி தாங்களாகவே எதையும் செய்வதை வெறுக்கிறார்கள், மேலும் அவர்கள் செய்யும் ஒவ்வொரு திட்டத்திலும் தங்கள் துணையைச் சேர்க்க முயற்சிப்பார்கள், அது தவறானதாக இருந்தாலும் தங்கள் துணையின் ஆதரவை நாடுவார்கள்.

கும்பம்மிகவும் தைரியமானவர்களாக அறியப்படும் கும்ப ராசிக்காரர்கள் காதலில் மிகவும் தீவிரமானவர்களாக அறியப்படுகிறார்கள். அவர்கள் காதலர் மீதான அவர்களின் அன்பும் அக்கறையும் பெரும்பாலும் எல்லைகள் இல்லாததாக இருக்கும். அவர்கள் வெளிப்படையானவை, எளிதில் மன்னிக்காதவர்கள் மற்றும் தீவிரமானவர்கள், அதாவது அவர்கள் எப்போதும் தங்கள் காதலரைச் சுற்றியே இருப்பார்கள். இது சிலசமயங்களில் உறவுகளில் சிக்கல்களை ஏற்படுத்தும்.
ரிஷபம்மிகவும் பிடிவாதக்காரர்களாக அறியப்படும் ரிஷப ராசிக்காரர்கள், தங்கள் காதலரை எப்போதும் சார்ந்திருப்பார்கள். ஆரம்பத்தில் மிகவும் எதார்த்தமானவர்களாக அறியப்படும் இவர்கள் உறவில் தீவிரமாக இறங்கியவுடன் மிகவும் நாடகத்தனமானவர்களாக மாறுகிறார்கள். தங்கள் காதலருக்கு போதுமான சுதந்திரம் கொடுக்கும் இவர்கள், பின்னர் அதனை முழுமையாக எடுத்துக்கொள்வார்கள்.
சிம்மம்சிம்ம ராசி பெண்கள் எவ்வளவுதான் சுதந்திரமானவர்களாக அறியப்பட்டாலும், அவர்களின் ஆளுமைகள் எவ்வளவு சுதந்திரமாக இருந்தாலும், அவர்கள் சரிபார்த்தல் மற்றும் பாராட்டுக்கள் மற்றும் கவனத்தின் வடிவத்தில் அன்பைப் பெறுவதில் மிகவும் ஆர்வமுள்ளவர்களாக இருக்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை , அவர்கள் எவ்வளவு சிறப்பு வாய்ந்தவர்கள் என்பதை நீங்கள் அவர்களிடம் சொல்லவில்லை என்றால், அவர்கள் மனக்கசப்புக்கு ஆளாக வாய்ப்புள்ளது. எனவே சிம்ம ராசி பெண்கள் காதலில் எப்போதும் சார்புணர்வு கொண்டவர்களாக இருப்பார்கள்.

மீனம்மீன ராசி பெண்கள் அதிகமாக சிந்திப்பவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் தொடர்ந்து தங்கள் துணையிடமிருந்து ஒப்புதல் மற்றும் கவனத்தை பெற விரும்புகிறார்கள், இது அவர்களை பாதுக்காப்பாக உணர வைக்கும். மீன ராசி பெண்கள் தங்கள் துணையுடன் தனியாக நிறைய நேரத்தை செலவிடுவார்கள், சில நேரங்களில் அவர்களுடன் இருப்பதையே தங்கள் இலட்சியமாகக் கொள்வார்கள்.