வாழ்க்கை என்பது பல்வேறு அனுபவங்களைக் கொண்டது. அதில் எந்தவிதமான அனுபவம் எப்போது கிடைக்குமென்று யாராலும் கணிக்க முடியாது. சிலர் தைரியமான முகமூடியை அணிந்துகொண்டு, நம்பிக்கையுடன் தங்கள் துயரங்களைச் சமாளிக்கும் போது, சிலர் தங்கள் உணர்வுகளில் மூழ்கி தங்கள் வாழ்க்கையைத் தொலைத்து விடுகிறார்கள்.

தங்கள் உணர்ச்சிகளை சார்ந்திருப்பது ஆரோக்கியமான விஷயமாக கருதப்பட்டாலும், சில ராசிகள் அதை வெகுதூரம் எடுத்துச் செல்கிறார்கள். சில பெண் ராசிகள் எப்போதும் தங்களை சோக ராணிகளாக காட்டிக் கொள்வார்கள், ஏனெனில் இவர்கள் பெரும்பாலும் தங்கள் சோகத்தின் அளவை மிகையாகக் காட்டி அன்பானவர்களிடமிருந்து ஆறுதலையும் கவனத்தையும் பெற முயற்சிப்பார்கள்.
சிம்மம்திமிர் மற்றும் பிடிவாதம் கொண்ட சிம்ம ராசி பெண்கள், தனக்கு நெருக்கமான நபர்களிடம் தங்களை பாவப்பட்டவர்களாக ஒருபோதும் வெட்கப்படுவதில்லை. அவர்கள் ஏதவாது சிக்கலில் இருந்தால் அல்லது கஷ்டத்தால் இருந்தால் அவர்கள் அதனை வெளிப்படையாக காட்டுவதை நீங்கள் கவனிக்கலாம். தோழியுடன் தகராறாக இருந்தாலும் சரி, சக ஊழியருடன் சண்டையாக இருந்தாலும் சரி அல்லது வீட்டில் ஏதாவது பிரச்சினையாக இருந்தாலும் சரி அவர்கள் தங்கள் சோகத்தை அனைவரும் அறியும்படி வெளிப்படுத்த தயங்க மாட்டார்கள்.
கடகம்கடக ராசிக்காரர்கள் எப்போதும் தங்கள் சோகத்தை நாடகத்தனமாக வெளிப்படுத்துவார்கள். தங்கள் சோகத்தை வெளிப்படுத்தும் போது எதிரில் இருப்பவர்கள் தங்கள் சோகத்தைக் கூறினால் அதைவிட தங்களின் சோகமும், பிரச்சினையும்தான் என்று காட்டுவதற்காக அவர்கள் பல விஷயங்களை மிகைப்படுத்திக் கூறுவார்கள். தங்களுக்கு பிடித்தவர்கள் அருகில் இருக்கும்போது அவர்களின் கவனத்தையும், அக்கறையையும் பெறுவதற்காக தங்களை சோகமாகவே காட்டிக்கொள்வார்கள்.

கன்னிஇந்த ராசிக்காரர்கள் அனைத்திலும் பர்பெக்ட்டானவர்களாக அறியப்படுவதால், அவர்கள் நாடகமாடுவதிலும் பர்பெக்ட்டானவராக இருக்கிறார்கள். உங்களுக்கு கன்னி ராசி காதலி இருந்தால், அவர்களுக்கு தேவை இருக்கும் போதெல்லாம் தங்களை சோகமாக காட்டிக்கொண்டு அவர்களுக்கு தேவையானதை நிறைவேற்றிக் கொள்வதை நீங்கள் கவனிக்கலாம். அவர்கள் எப்போதும் கொஞ்சப்படுவதை விரும்புகிறார்கள் மற்றும் அவர்களை குழந்தை போல பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள்.

மீனம்சிலர் தங்கள் சோகத்தை வெளிக்காட்டாமல் மௌனத்தில் தவிப்பார்கள், ஆனால் பார்க்கும் அனைவரிடமும் தங்கள் சோகத்தை விளம்பரம் செய்ய விரும்புபவர்களும் உள்ளனர். மீனம் இதில் இரண்டாவது வகையை சேர்ந்தவர்கள், ஏனெனில் அவர்கள் பெரும்பாலும் அவர்கள் அனுபவித்த காயங்களைப் பற்றி அனைவரிடமும் கூறுவதை நீங்கள் பார்க்கலாம், ஆனால் அது உண்மையில் அவர்களின் கற்பனையாக இருக்கலாம்.