இந்த 5 ராசிக்காரங்க தங்கள் ‘வாழ்க்கையே நரகமாக’ இருப்பதுபோல எப்பவும் கவலையாவே இருப்பாங்களாம்!

செய்திகள்

நம் வாழ்க்கையில் நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களுக்கும் தனித்தனி குணநலன்கள் மற்றும் ஆளுமை பண்புகள் இருக்கலாம். வெவ்வேறு விதமான மக்களை நம் வாழ்க்கை பயணத்தில் நாம் பார்த்திருப்போம். சிலர் அதிகம் நம்மை ஈர்ப்பவர்களாக இருக்கலாம், சிலர் நம்மை அதிகம் கோபப்படுத்துவராக இருக்கலாம். சிலரை நம்மால் புரிந்துகொள்ள முடியாமல் போகலாம்.


எல்லா விதமான மக்களும் நிறைந்ததுதான் இந்த உலகம். ஏதோ ஒரு விஷயத்திற்காக சிணுங்குவது, புகார் கூறுவது, தவிப்பது மற்றும் அழுவது போன்ற நடத்தை கொண்ட நபர்களை நாம் பார்த்திருக்கலாம். உலகம் தங்களுக்கு எதிராகவே சதி செய்வதாக இந்த நபர்கள் உணர்கிறார்கள்.

அதனால், தங்கள் வாழ்க்கை முழுவதும் வலி மற்றும் துன்பங்கள் நிறைந்து இருப்பதாக அதிக கற்பனை செய்து கொண்டிருப்பார்கள்.இந்த நபர்களை நாம் நெருக்கமாகப் பார்த்தால், ராசி அறிகுறிகளின் அடிப்படையில் அடையாளம் காணலாம். வெவ்வேறு காரணங்களால் வாழ்க்கை முழுவதும் வலி மற்றும் துன்பத்தை பெறும் ராசி அறிகுறிகள் பற்றி இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

மகரம்சிலர் எப்பவுமே எதோ ஒன்றை பறிகொடுத்ததுபோல இருப்பார்கள். அதேபோல மகர ராசிக்காரர்களும் எப்பவும் கவலையிலே இருப்பார்கள். இளகிய மனம் கொண்டவர்களாக இருக்கும் மகர ராசிக்காரர்கள், தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில் தீவிரமாக இருப்பார்கள். அவ்வாறு அதை செய்யத் தவறினால், அவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகலாம். தங்கள் உணர்ச்சிகளுடன் மிகவும் போராடும் இவர்கள், சுயமாக ஏற்படுத்திய துன்பம் மற்றும் வலியுடன் இந்த வாழ்க்கையை வாழ்கிறார்கள்.

ரிஷபம்உள்முக சிந்தனையாளர்களாக இருக்கும் ரிஷப ராசிக்காரர்கள், வாழ்க்கை முழுவதும் ஒரு பாதுகாப்பு வளையத்திற்குள் இருக்கவே அதிகம் விரும்புகிறார்கள். அதனால், இவர்கள் மாற்றங்களை வெறுக்கிறார்கள். சிறியதாக சூழ்நிலை மாறும்போது கூட, அவர்கள் கலக்கமடைந்து, வருத்தமடைவார்கள். தங்கள் வாழ்க்கையில் எல்லாமே குழப்பமாக இருப்பதைப் போல வலியையும் துன்பத்தையும் உணர்கிறார்கள்.


விருச்சிகம்மற்ற ராசிக்காரர்களை விட விருச்சிக ராசிக்காரர்கள் துன்பத்திற்கு மிகவும் ஆளாகிறார்கள். ஏனெனில் அவர்கள் எல்லா விஷயங்களையும் ஆழமாகவும் தீவிரமாகவும் உணர்கிறார்கள். இந்த ராசிக்காரர்கள் தங்கள் தனிப்பட்ட உறவுகளில் அதிக ஈடுபாடு கொண்டுள்ளனர்.

ஏதாவது சரியாக வேலை செய்யவில்லை என்றால் எளிதில் கவலையடைவார்கள். அவர்கள் சூழ்நிலை அல்லது நிலைமை என்ன என்பதை விட அதிகமாக கற்பனை செய்து வருத்தப்படுகிறார்கள். இந்த ராசிக்காரர்கள் தங்கள் உணர்வுகளை கூட யாரிடமும் பகிர்ந்து கொள்ளாமல் தனிமையில் இருப்பார்கள்.

கடகம்கடக ராசிக்காரர்கள் மிகவும் அன்பானவர்கள், மற்றவர்கள் மீது மிகுந்த அக்கறை கொண்டவர்கள். அவர்கள் உங்கள் முன் தன்னை ஒரு துணிச்சலான நபராக காட்டிக்கொள்ளலாம். ஆனால் உள்ளே அவர்கள் உருகிய மெழுகு போன்ற இளகிய குணமுடையவர்களாக இருப்பார்கள்.

கடக ராசிக்காரர்கள் நல்ல ஆளுமை பண்பைக் கொண்டுள்ளனர். மேலும், மற்றவர்களை அதிகமாக நேசிக்கிறார்கள். இதனால், அவர்களுக்கு நேரும் துன்பத்தை தனக்கு நேர்ந்தது போன்ற இவர்கள் உணருவார்கள். அதனால், கடக ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் எப்போதும் துன்பம் இருப்பதாக நினைத்துக்கொண்டு, கவலையாக இருப்பார்கள்.

மீனம்பொதுவாக மிகவும் அன்பாகவும் அக்கறையாகவும் இருக்கும் ராசிக்காரர்களில் மீனமும் ஒன்று. மற்றவர்கள் மீது அன்பு வைப்பதால், எந்த விஷயத்திலும் தியாகம் செய்ய இவர்கள் தயாராக இருப்பார்கள். தன்னை தானே துன்புறுத்திக்கொள்ளும் விஷயங்களை வாழ்க்கையில் செய்துவிட்டு, வாழ்க்கையே துன்பமாக இருக்கிறது என்று புலம்புவார்கள். இதனால், தேவையற்ற துன்பங்களையும் வலிகளையும் இந்த ராசிக்காரர்கள் அனுபவிக்க நேரிடும்.

மேஷம், மிதுனம், சிம்மம், கன்னி, துலாம் மற்றும் கும்பம் ஆகிய ராசிக்காரர்கள் உலகில் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர். மேலும் இவர்கள் எல்லாவற்றையும் நடைமுறை அணுகுமுறையுடன் சமாளிக்க முயற்சி செய்கிறார்கள். சிறந்ததை அடைவதற்கான அவர்களின் அணுகுமுறை பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நேர்மறை எண்ணங்களையும் நன்மைகளையும் வழங்கலாம்.