அட்சய திருதியை நாளில் உருவாகும் பஞ்ச கிரக யோகம்.!! இந்த 4 ராசிக்காரங்க கையில செல்வம் அதிகம் சேருமாம்.!!

செய்திகள்

இந்து மதத்தில் அட்சய திருதியைக்கு தனி முக்கியத்துவம் உண்டு. இந்நாள் மிகவும் புனிதமான நாள் மட்டுமின்றி, இந்நாளில் தங்கம் வாங்கினால், தங்கம் அதிகம் சேரும் என்பது நம்பிக்கை. இப்படிப்பட்ட அட்சய திருதியை நாளானது இந்த ஆண்டு ஏப்ரல் 22 ஆம் தேதி வருகிறது.


இந்நாள் தங்கம் வாங்க மட்டுமின்றி, சுப காரியங்கள் செய்யவும் உகந்தது. ஜோதிடத்தின் படி, இந்த ஆண்டு அட்சய திருதியை மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் இந்நாளில் மேஷ ராசியில் பஞ்ச கிரக யோகம் உருவாகிறது. அதாவது மேஷ ராசியில் குரு, புதன், சூரியன், யுரேனஸ் போன்ற கிரகங்களின் சேர்க்கையால் பஞ்சகிரக யோகம உருவாகிறது. கூடுதலாக, ரிஷப ராசியில் சுக்கிரன் மற்றும் சந்திரனின் சேர்க்கை நிகழ்கிறது.

அட்சய திருதியை நாளில் மேஷ ராசியில் பஞ்ச கிரக யோகம் உருவாகியிருப்பது 4 ராசிக்காரர்களுக்கு ஏராளமான நன்மைகளை வாரி வழங்கப் போகிறது. இப்போது எந்த ராசிக்காரர்கள் அட்சய திருதியை நாளில் நற்பலனைப் பெறப் போகிறார்கள் என்பதைக் காண்போம். உங்கள் ராசியும் அதில் உள்ளதா என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மேஷ ராசிக்காரர்களுக்கு அட்சய திருதியை தினமானது அற்புதமாக இருக்கும். ஏனெனில் மேஷ ராசியில் பஞ்ச கிரக யோகம் உருவாகிறது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு சமூகத்தில் மதிப்பு அதிகரிக்கும். மேலும் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். இந்நாளில் முடிந்ததை இயலாதவர்கள் மற்றும் ஏழை எளியோருக்கு தானம் செய்தால், இரட்டிப்பு நற்பலன் கிடைக்கும்.


ரிஷபம்அட்சய திருதியை நாளில் பஞ்ச கிரக யோகம் உருவாவதோடு, ரிஷப ராசியில் சுக்கிரன் மற்றும் சந்திரனின் சேர்க்கையும் நிகழ்வதால், ரிஷப ராசிக்காரர்களுக்கு மங்களகரமானதாக இருக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் நல்ல பலன்களைப் பெறுவார்கள். பாராட்டுடன் புதிய பொறுப்புக்களையும் பெறலாம். நிறைய பணம் சேமிக்க முடியும் மற்றும் உங்களின் வருமானமும் அதிகரிக்கும். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். எந்த வேலை செய்தாலும், உங்களைச் சுற்றியிருப்பவர்களின் முழு ஆதரவு கிடைக்கும்.

கடகம்கடக ராசியின் 10 ஆவது வீட்டில் பஞ்ச கிரக யோகம் உருவாகிறது. மேலும் சுக்கிரன் 11 ஆவது வீட்டில் இருப்பார். இதனால் இந்த ராசிக்காரர்கள் வாழ்வின் அனைத்து துறையிலும் வெற்றியையும், செல்வத்தையும் காண்பார்கள். பணிபுரிபவர்கள் தங்களின் இலக்குகளை அடைவார்கள். வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். மொத்தத்தில், கடக ராசிக்காரர்களுக்கு அட்டகாசமான காலமாக இருக்கும்.


சிம்மம்சிம்ம ராசிக்காரர்களுக்கு அட்சய திருதியை தினமானது மிகவும் சிறப்பானதாக இருக்கப் போகிறது. இந்நாளில் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிக்கப்படும். இக்காலத்தில் பெரிய பணவரவு இருக்கும் மற்றும் நல்ல பணவரவால் பணப்பிரச்சனைகள் நீங்கி, நிதி நிலை மேம்படும். வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் நல்ல வளர்ச்சியைக் காண்பீர்கள். இக்காலத்தில் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி கிடைக்கும் மற்றும் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.