தங்கம் வாங்க நினைப்பவர்களுக்கு ஏற்பட்ட குழப்பநிலை..!! தற்போது வெளியான செய்தி.!!

செய்திகள்

நாட்டில் நாளாந்தம் நிகழும் பொருளாதார மாற்றத்தின் காரணமாக தங்கத்தின் விலையானது ஏற்ற இறக்கங்களுடன் பதிவாகி வருகின்றது.அந்தவகையில், நேற்று வீழ்ச்சியடைந்திருந்த தங்கத்தின் விலையானது இன்றையதினம் அதிகரித்துள்ளது.இன்றைய தங்க விற்பனை நிலவரப்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலையானது 644,366 ரூபாவாக காணப்படுகின்றது.


இந்த நிலையில், 24 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்றைய தினம் 181,850 ரூபாவாக பதிவாகியுள்ளது.அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 166,700 ரூபாவாக பதிவாகியுள்ளது.அத்துடன் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 159,150 ரூபாவாக இன்றைய தினம் பதிவாகியுள்ளது.

அதேசமயம், 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை 22,730 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை 20,840 ரூபாவாகவும், 21 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை 19,890 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.எனினும், ஆபரணத் தங்கத்தின் விலை இந்த விலைகளில் இருந்து மாற்றம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.