நாட்டு மக்களுக்கு பேரிடியான செய்தி..!! இலங்கையில் புதிதாக அறிமுகமாகிய வரி..!!

செய்திகள்

வருமான வரி அறவீடு தொடர்பில் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.12 லட்சம் ரூபாவிற்கு மேல் வருட வருமானத்தை ஈட்டுவோர் வருமான வரி செலுத்த வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.வர்த்தகர்கள், வாடகை வருமானம் ஈட்டுவோர், முதலீடுகளின் மூலமான வட்டி ஊடாக வருமானம் ஈட்டுவோர் அல்லது தொழில் மூலம் சம்பளம் பெறுவோர் உள்ளிட்ட தரப்பினர் இவ்வாறு வரி செலுத்த வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.


வருமான வரி செலுத்த வேண்டியது மக்களின் கடப்பாடு என அறிவிக்கப்பட்டுள்ளது.உரிய நேரத்தில் உரிய தொகை வருமான வரியை செலுத்துமாறு தேசிய இறைவரித் திணைக்களம் பொதுமக்களிடம் கோரியுள்ளது.மேலும், வருமான வரி கணக்கினை www.ird.gov.lk என்ற இறைவரித் திணைக்களத்தின்

இணையத்தளத்தினூடாக பிரவேசித்து திறக்க முடியும் எனவும், தமது திணைக்களத்தின் இரண்டாம் மாடியில் உள்ள பதிவு செய்தல் பிரிவுக்கு பிரவேசித்தோ அல்லது இணையத்தள சேவைகள் ஊடாகவோ, வருமான வரி கோப்பைத் திறக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதேநேரம், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பிராந்திய அலுவலகங்களிலும், வருமான வரி கோப்பைத் திறப்பதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.