இந்த 5 ராசிக்காரங்க எதற்கெடுத்தாலும் பயப்படும் கோழையாக இருப்பார்களாம்..!!

செய்திகள்

வாழ்க்கை எப்போதும் ஒரே மாதிரியாக நகராது. மகிழ்ச்சியான தருணங்கள் போலவே மோசமான தருணங்களும், சோதனையான காலக்கட்டங்களும் நிச்சயம் வரும். அதுபோன்ற தருணங்களை எதிர்கொள்ள மற்றும் மீண்டுவர தைரியம் தேவை. தைரியம் அனைவருக்கும் தேவையான மற்றும் அனைவராலும் பாராட்டப்படும் ஒரு பண்பாகும்.


தைரியம் உள்ளவர்களுக்கு வாழ்க்கையில் எப்போதும் பல கதவுகள் திறந்திருக்கும், தாமதமானாலும் தாங்கள் நினைத்ததை அடையும் ஆற்றல் அவர்களிடம் இருக்கும். சில இதற்கு நேர்மாறாக வாழ்க்கையில் துணிச்சல் என்ற குணமே இல்லாதவர்களாக இருப்பார்கள். அவர்கள் சிறிய தடைகளுக்கும், மிரட்டல்களுக்கு கூட அடிபணிந்து செல்வார்கள். தங்களின் ஆறுதல் மண்டலத்திற்குள் வாழ்வதுதையே அவர்கள் இலட்சியமாக கொண்டிருப்பார்கள்.

ஜோதிட சாஸ்திரத்தின் படி சில ராசிக்காரர்களுக்கு தைரியக் குறைபாடு இருக்கும். அவர்கள் தங்கள் வாழ்க்கையில் எதையும் புதிதாக முயற்சிக்க மாட்டார்கள். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் வாழ்க்கையில் தைரியமே இல்லாதவர்களாக இருப்பார்கள் என்று பார்க்கலாம்.

ரிஷப ராசிக்காரர்கள் எப்போதும் தங்கள் ஆறுதல் மண்டலத்தில் வாழ விரும்பும் சோம்பேறித்தனம் கொண்டவர்கள். அவர்கள் பெரும்பாலும் “சாதாரண” வாழ்க்கையை வாழ்கிறார்கள், ஏனென்றால் அதுவே அவர்களுக்கு வசதியானதாக இருக்கிறது, அதிலிருந்து முன்னேற அவர்கள் முயற்சிப்பதில்லை. மேலும் அவர்கள் அளவிட முடியாத பொறுமையைக் கொண்டுள்ளனர் மற்றும் அவர்கள் நலனுக்கு எதிராக எது நடந்தாலும் அதனை எதிர்த்து குரலை உயர்த்த மாட்டார்கள். அவர்கள் எப்போதும் மாற்றத்தை நினைத்து பயப்படுகிறார்கள்.


கடக ராசிக்காரர்களுக்கு விடாமுயற்சியும் ஸ்திரத்தன்மையும் தேவை. அவர்கள் மிகவும் உணர்ச்சிவசப்படுபவர்கள் மற்றும் பெரும்பாலும் தங்கள் உணர்வுகளின் அடிப்படையிலேயே தங்கள் வாழ்க்கையை வழிநடத்துவார்கள், அது அவர்களுக்கு சேதத்தை ஏற்படுத்தினாலும் வேறு முடிவெடுக்க பயந்து அதனையே செய்கிறார்கள். அவர்கள் பாதுகாப்பற்றவர்களாகவும், கோழைத்தனமாகவும் மற்றும் தைரியம் இல்லாதவர்களாகவும் உணரலாம், மேலும் இது அவர்களின் முன்னேற்றத்தில் அவர்களைத் தடுத்து நிறுத்தலாம்.

கன்னி ராசிக்காரர்கள் அனைத்திலும் பர்பெக்ட்டாக இருக்க வேண்டுமென்று விரும்புபவர்கள் மற்றும் அதற்காக தங்களை அதிகமாக சுய விமர்சனம் செய்து கொள்கிறார்கள். அவர்களுக்கு மிகவும் மோசமான எதிரியே அவர்கள்தான். மேலும் அவர்கள் தங்கள் பதட்டம் மற்றும் கோழைத்தனத்தால் தங்களுக்கு நடக்க வேண்டிய நல்லதை கெடுத்துக் கொள்கிறார்கள். அவர்களின் கோழைத்தனம் அவர்களை தேடிவரும் வாய்ப்புகளை கூட பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்காது.


மீனம்இந்த கொடூரமான, கரடுமுரடான உலகத்தை அவர்கள் விரும்பாததால், மீன ராசிக்காரர்கள் தங்கள் சொந்த கற்பனை உலகில் வாழ விரும்புகிறார்கள். இந்த உலகம் அவர்களை ஏதாவது துணிச்சலாக முடிவெடுக்க வேண்டிய சூழலில் தள்ளும்போது, அவர்கள் பீதியடைந்து உறைந்துபோய் முடிவெடுக்க முடியாமல் தயங்கவார்கள். அவர்கள் எல்லாவற்றையும் பார்த்து அச்சமடைகிறார்கள், அதை சமாளிக்க அவர்களுக்கு நிச்சயமாக மற்றவர்களின் ஆதரவு தேவை.