லொட்டரியில் விழுந்த கோடிக்கணக்கான பணம் – பல்கலைக்கழக மாணவனுக்கு அடித்த அதிர்ஷ்டம்..!! குவியும் வாழ்த்துக்கள்.!

செய்திகள்

கனடாவைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவன் ஒருவன் இரண்டு தடவைகள் லொத்தர் சீட்டில் பரிசு வென்றுள்ளார்.கனடாவின் மிஸ்ஸிசாகுவாவைச் சேர்ந்த 21 வயதான டியாஷு ச்சூ என்ற மாணவனே இவ்வாறு இரண்டு தடவைகள் பரிசு வென்றுள்ளார்.


Instant Crossword Tripler என்ற லொத்தர் சீட்டின் ஊடாக ஒன்றரை ஆண்டு காலப் பகுதிக்குள் இவ்வாறு இரண்டு சந்தர்ப்பங்களில் தலா ஒரு லட்சம் டொலர் என்ற அடிப்படையில் பரிசு வென்றுள்ளார்.பல்கலைக்கழக கட்டணங்களை இந்தப் பணத்தைக் கொண்டு செலுத்த உத்தேசித்துள்ளதாக மாணவர் தெரிவித்துள்ளார்.லொத்தர் சீட்டில் மீண்டும் பரிசு வென்றதாக பெற்றோரிடம் கூறிய போது அவர்கள் அதனை நம்பவில்லை என ச்சூ தெரிவிக்கின்றார்.