இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி..!! தங்க விலை தொடர்பில் வெளியான முக்கிய செய்தி..!!

செய்திகள்

நாட்டில் கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலையானது ஏற்ற இறக்கங்களுடன் பதிவாகி வருகின்றது. அந்தவகையில், இன்றையதினம் தங்கத்தின் விலையானது சற்று வீழ்ச்சி கண்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.இன்றைய தங்க விற்பனை நிலவரப்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலையானது 640,371 ரூபாவாக காணப்படுகின்றது.


இந்த நிலையில், 24 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்றைய தினம் 180,750 ரூபாவாக பதிவாகியுள்ளது.அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 165,700 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 158,150 ரூபாவாக இன்றைய தினம் பதிவாகியுள்ளது.

அதேசமயம், 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை 22,590 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை 20,710 ரூபாவாகவும், 21 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை 19,770 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.எனினும், ஆபரணத் தங்கத்தின் விலை இந்த விலைகளில் இருந்து மாற்றம் பெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.