இந்த 4 ராசிக்காரங்க சின்ன விஷயங்களுக்கு கூட பதட்டப்பட்டு அவங்க வாழ்க்கையில் எல்லாத்தையும் இழப்பாங்களாம்..!

செய்திகள்

“பதறிய காரியம் சிதறும்” என்பது பழமொழி. பதட்டத்துடன் செய்யும் எந்த காரியமும் இறுதியில் நமக்கு தோல்வியைத்தான் தரும். ஆனால் வாழ்க்கையில் பதட்டப்படாமல் இருப்பது என்பது யாராலும் முடியாது. நாம் அனவைருமே வாழ்க்கையில் ஏதாவது ஒரு கட்டத்தில் பதட்டத்திற்கு ஆளாகியிருப்போம், ஆனால் சிலர் சின்ன சின்ன விஷ்யங்களுக்குக் கூட பதட்டப்படுபவர்களாக இருப்பார்கள்.


இவர்கள் அனைத்தையும் சரியாக செய்தாலும் தங்களின் பதட்டத்தால் அவர்களின் காரியங்களை நாசமாக்கி விடுவார்கள். அவர்களின் பதட்டம் அவர்களுக்கு எப்போதும் தோல்வி மற்றும் மனஅழுத்தத்தையே பரிசளிக்கும். ஜோதிட சாஸ்திரத்தின் படி சில ராசிக்காரர்கள் இப்படி பதட்டத்தால் தங்களின் வாழ்வை சிதைத்துக் கொள்பவர்களாக இருப்பார்கள். அவர்கள் யாரென்று இந்த பதிவில் பார்க்கலாம்.

கடக ராசியில் பிறந்தவர்கள் இயற்கையாகவே அதிக உணர்ச்சிவசப்படுபவர்கள் மற்றும் அவர்களால் எந்த விஷயத்தையும் பக்குவமாக கையாள முடியாது. அவர்கள் மனஅழுத்தம் மற்றும் அழிவு எண்ணங்களால் தொலைந்து போகிறார்கள். மேலும், அவர்கள் திட்டமிட்டபடி விஷயங்கள் நடக்கவில்லை என்றால் அவர்கள் மனச்சோர்வில் விழுவதற்கு வாய்ப்புள்ளது. அதிகப்படியான சிந்தனை மற்றும் மனச்சோர்வு ஆகியவற்றின் கலவையானது கடக ராசிக்காரர்களை பதட்டப்படுபவர்களில் முதலிடத்தில் வைக்கிறது.

கன்னி ராசிக்காரர்கள் இயல்பிலேயே அதிகளவு சிந்திக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள், அவர்கள் நினைத்தபடி விஷயங்கள் நடக்கவில்லை என்றால் கோபப்படுவார்கள் மற்றும் வன்முறையில் ஈடுபடக்கூட வாய்ப்புள்ளது. இது அவர்களின் மன ஆரோக்கியத்தை பாதிக்கிறது மற்றும் பதட்டமடைய வைக்கும். இவர்களின் அதீத மனஅழுத்தம் இவர்களின் உடல் ஆரோக்கியத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.


விருச்சிக ராசிக்காரர்கள் தங்கள் காதல் வாழ்க்கையில் அதிக உணர்திறன் கொண்டவர்களாகவும், அதிக உணர்ச்சிவசப்படுபவர்களாகவும் இருப்பார்கள். அவர்களின் வாழ்க்கையில் எந்த விதமான இடையூறும், குறிப்பாக, காதல் வாழ்க்கை தொடர்பான எந்த சிக்கலும் அவர்களை கடுமையான மன அழுத்தத்திற்கு தள்ளலாம், இது அவர்களை மனக்கவலைகளுக்கு வழிவகுக்கும். மனச்சோர்வு மற்றும் கவலை இரண்டு பிரச்சினைகளாலும் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ள ஒரே ராசி இவர்கள்தான்.

கும்ப ராசிக்காரர்கள் தாங்கள் சிறந்த புத்திசாலிகள் மற்றும் மற்றவர்களின் மனதுடன் விளையாடுவதுடன் சிறந்தவர்கள் என்று காட்டிக்கொள்ளலாம், ஆனால் உண்மையில் அவர்கள் அப்படிப்பட்டவர்கள் இல்லை. அவர்கள் மற்றவர்களால் எளிதில் கையாளப்படலாம் மற்றும் பின்னர் அதனை உணரும்போது மனஅழுத்தத்திற்கு ஆளாகலாம். மற்றவர்களால் கையாளப்படும் இந்த உணர்வு அவர்களை கவலையில் ஆழ்த்துகிறது. இதனாலேயே இவர்கள் எளிதில் தோல்வியைத் தழுவுகிறார்கள்.Source:boldsky