இந்த 5 ராசிக்காரங்க உலகம் சுற்றும் வாலிபராக இருப்பார்கள்.!!இவங்க வாழ்க்கைய அனுபவிக்க பிறந்தவங்களாம்!

செய்திகள்

பயணங்கள் என்பது நமது ஆன்மாவிற்கு புத்துணர்ச்சி அளிக்கும் ஒரு விஷயமாகும். பயணம் புதிய இடங்கள், மக்கள், உணவு, கலாச்சாரம் மற்றும் மரபுகள் பற்றிய பல்வேறு அனுபவங்களை வழங்குவதோடு மட்டுமல்லாமல் உடலுக்கும், ஆன்மாவிற்குமான சிகிச்சையாகவும் இருக்கிறது. அன்றாட வாழ்க்கையின் அழுத்தங்களில் இருந்து விலகிஇருக்க , மக்கள் வருடத்திற்கு ஒரு முறையாவது பயணம் செய்ய வேண்டும்.


பயணம் அவசியமான ஒன்றாக இருந்தாலும், அனைவராலும் அதனை அடிக்கடி செய்ய முடியாது. ஆனால் வெளிப்புற சிக்கல்களையம் தாண்டி பயணத்தை அடிக்கடி செய்ய விரும்பும் சிலர் உள்ளனர். அவர்கள் எப்போதும் பயணம் செய்ய தயாராக இருக்கிறார்கள். அவர்களின் ராசிகளின் மூலம் அவர்களை நாம் அடையாளம் காண முடியும்.

தனுசுதனுசு ராசிக்காரர்கள் சுதந்திர மனப்பான்மை கொண்டவர்கள், பயணத்தை அதிகம் விரும்புவார்கள். அவர்கள் தங்களுடைய இல்லத்தில் நீண்ட காலம் தங்க விரும்புவதில்லை. அவர்கள் வெவ்வேறு இடங்களுக்குச் செல்லவும், புதிய அனுபவங்களையும், நினைவுப் பொருட்களையும் சேகரிக்க விரும்புகிறார்கள். வாழ்க்கையை எப்படி முழுமையாக வாழ்வது என்பது அவர்களுக்குத் தெரியும், அதற்கான சிறந்த வழி பயணம் மட்டுமே என்பதை அவர்கள் அறிவார்கள்.

கும்பம்கும்ப ராசிக்காரர்கள் வெவ்வேறு இடங்களில் பயணம் செய்ய விரும்புகிறார்கள். அவர்கள் புதிய நபர்களை சந்திக்கவும், அவர்களுடன் அறிவுசார் உரையாடல் செய்யவும் விரும்புகிறார்கள். சில சமயங்களில், சில பரோபகார செயல்களைச் செய்வதற்கும், தங்களைச் சுற்றியுள்ள ஏழைகளுக்கு உதவுவதற்கும் அவர்கள் விடுமுறையைப் பயன்படுத்துகிறார்கள். அவர்கள் எப்போதும் விஷயங்களைப் பற்றி ஆர்வமாக இருப்பார்கள். எனவே பயணம் அவர்களின் அறிவுப் பசியைப் போக்குகிறது.


மகரம்மகர ராசிக்காரர்கள் இயற்கை எழில் கொஞ்சும் இடங்களை விரும்புகிறார்கள், மேலும் அவர்கள் மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கையிலிருந்து விலகி இருக்க அடிக்கடி விடுமுறைக்கு செல்கின்றனர். அவர்கள் தனியாகவும் குழுவாகவும் பயணம் செய்வதை விரும்புகிறார்கள், மேலும் அவர்கள் எளிதாக சலிப்படைபவர்களாக இருப்பதால் ஒவ்வொரு முறையும் பயணத்தைத் திட்டமிடும்போது புதிய இடங்களைப் பார்க்க விரும்புகிறார்கள். அவர்கள் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதற்காக பயணம் செய்பவர்கள் அல்ல, மாறாக அவர்கள் விடுமுறையில் மகிழ்ந்து ஓய்வெடுக்கச் செல்கிறார்கள்.

மேஷம்மேஷ ராசியில் பிறந்தவர்கள் தைரியசாலிகள், ஆபத்தை எதிர்கொள்பவர்கள். அவர்கள் எப்போதும் புதிய விஷயங்களைச் செய்யத் தயாராக இருக்கிறார்கள். எனவே ஒரு பயணத்தைத் திட்டமிட அவர்களுக்கு ஒரு காரணம் மட்டுமே தேவை. மேலும் அவர்கள் விடுமுறையை மிகவும் சுவாரஸ்யமாக்குவதற்காக அனைத்து சாகச மற்றும் உற்சாகமான செயல்களையும் செய்து முடிப்பார்கள்.

மிதுனம்மிதுன ராசிக்காரர்கள் இயல்பாகவே சமூக பட்டாம்பூச்சிகளாக இருக்கிறார்கள். அவர்கள் அதிக இடங்களை சுற்றி பார்க்க விரும்புகிறார்கள், ஆனால் அவர்களுக்கு பிடித்தவர்களுடன் மட்டுமே சுற்றி பார்க்க விரும்புகிறார்கள். அவர்கள் பயணத்தில் அவர்களுக்குப் பிடித்தமானவர்கள் இல்லை என்றால் அவர்கள் உண்மையிலேயே ஒரு பயணத்தை அனுபவிக்க முடியாது. அவர்கள் சாகச பயணங்களை விரும்புவதில்லை, ஏனெனில் விடுமுறைகள் நிதானமாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்க வேண்டும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.