வாழ்க்கையில் எப்போதுமே நாம் சரியான பாதையில் செல்ல முடியாது. ஏதாவது ஒரு தருணத்தில் நாம் நிச்சயம் தவறான பாதையிலோ அல்லது எங்கு செல்ல வேண்டுமென்றோ தெரியாமலோ திணறி நிற்கக்கூடிய சூழல் ஏற்படும். அந்த தருணத்தில் நம்மை கைப்பிடித்து அரவணைத்து சரியான அறிவுரைக் கூறி நல்வழிப்படுத்த நிச்சயம் ஒருவர் தேவை.

அறிவுரை அனைவரும் கொடுப்பார்கள், ஆனால் உண்மையான அக்கறையுடன் சரியான அறிவுரையைக் கொடுக்க சிலரால் மட்டுமே முடியும். உங்களுக்கு அறிவுரைத் தேவைப்படும் போது நீங்கள் சரியான நபரிடம் செல்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஜோதிட சாஸ்திரத்தின் சில ராசிக்காரர்கள் உண்மையிலேயே உங்கள் மீது அக்கறையுடன் சரியான அறிவுரையை உங்களுக்குக் கூறுவார்கள். அவர்களை எப்போதும் உங்கள் வாழ்க்கையில் தவற விட்டு விடாதீர்கள்.
கன்னிஅனைவருக்கும் பிடித்த அதேசமயம் கண்டிப்பான அம்மா போன்ற ராசிக்காரர்கள் கன்னி ராசிக்காரர்கள். அவர்கள் உங்களிடம் உண்மையைச் சொல்ல ஒருபோதும் பயப்படுவதில்லை. சில சமயங்களில் அவர்கள் அதை கொஞ்சம் மென்மையாகக் கூறுவார்கள், அவர்களின் அறிவுரை சரியானது என்பதை நீங்கள் ஒருபோதும் மறுக்க முடியாது. அவர்கள் உங்களை அரவணைத்து, நீங்கள் கேட்க விரும்புவதைச் சொல்ல மாட்டார்கள், மாறாக நீங்கள் கேட்க வேண்டியதைச் சொல்வார்கள், மேலும் அதனை எப்படி செய்ய வேண்டுமென்றும் உங்களுக்குக் கூறுவார்கள். அவர்கள் அறிவுரை கூறுவதற்கு முன் சிந்திக்க அதிக நேரம் எடுத்துக் கொள்கிறார்கள், எனவே அவர்கள் உங்களுக்கு அறிவுரை வழங்கினால், அது நன்கு ஆலோசிக்கப்பட்டது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
மகரம்இலக்குகளை அடைய ஓடும் போது, மகர ராசிக்காரர்கள் வேறு எதையும் பார்க்க மாட்டார்கள். உங்கள் தொழில் அல்லது தனிப்பட்ட சிக்கலைத் தீர்ப்பதற்கான ஆலோசனைகளை உங்கள் மகர ராசி நண்பர்களிடம் கேட்பது மிகவும் பொருத்தமானதாக இருக்கும், உறவுகள் தொடர்பான விஷயங்களில் அவர்கள் தெளிவான சிந்தனையுடன் உண்மைகளை முன்வைப்பார்கள். நீங்கள் ஒரு முடிவை எடுப்பதற்கு முன்பு நீங்கள் அதில் உறுதியாக இருப்பதை அவர்கள் உறுதி செய்வார்கள்.

ரிஷபம்ரிஷப ராசிக்காரர்கள் பிடிவாதத்திற்கு பெயர் போனவர்கள், ஆனால் நண்பர்களுக்கு அறிவுரைக் கூறும் போது அதனை எப்படி அணுக வேண்டுமென்று அவர்கள் நன்கு அறிவார்கள். அவர்களின் முக்கிய கவலை என்னவென்றால், உங்கள் தகுதிக்கு குறைவான ஒன்றில் நீங்கள் திருப்தியடையவில்லை என்பதை உறுதி செய்வதுதான். மேலும் அந்த மனநிலை வாழ்க்கையில் பல விஷயங்களுக்கு பொருந்தும். அது உறவு சில்லக்கல்கள், வேலை சிக்கல்கள் அல்லது குடும்ப சூழ்நிலைகள் எதுவாக இருந்தாலும், உங்கள் ரிஷப ராய் நண்பர்கள் உங்கள் தகுதி என்னவென்பதையும், உங்களை யாரும் குறைவாக நடத்த அனுமதிக்கக் கூடாது என்பதையும் உங்களுக்கு நினைவூட்டுவார்கள்.
மிதுனம்மிதுன ராசிக்காரர்கள் குழப்பமான மனநிலையில் இருக்கலாம், ஆனால் தங்கள் நண்பர்களுக்கு எப்போதும் தெளிவான முடிவெடுக்க உதவுவார்கள். அவர்கள் எந்த முடிவிற்கும் உங்களை அவசரப்படுத்த மாட்டார்கள். நிதானமாக அதேசமயம் சரியான முடிவெடுக்க உங்களுக்கு உதவுவார்கள். எந்த பக்கம் செல்ல வேண்டும் என்று குழம்பி நிற்கும்போது உங்கள் மிதுன ராசி நண்பர்கள் உங்களுக்கு சரியான திசையைக் காட்டும் வழிகாட்டியாக இருப்பார்கள். அவர்கள் புத்திசாலிகள் மற்றும் பொதுவாக அவர்களின் அனுபவங்களில் இருந்து கற்றுக்கொண்ட பாடத்தை தங்கள் நண்பர்களுக்கு அறிவுரையாகக் கூறுவார்கள்.

மீனம்மீன ராசிக்காரர்கள் மற்றவர்களுக்கு சரியான அறிவுரைகளை வழங்குவதில் ஒரு தனித்துவமான சாமர்த்தியம் கொண்டுள்ளனர், இருப்பினும் அவர்கள் மற்றவர்களின் ஆலோசனைகளை அரிதாகவே கேட்கிறார்கள். அவர்கள் உங்கள் எண்ண ஓட்டத்தையும், உங்கள் சூழ்நிலைகளையும் புரிந்து கொள்ள முற்படுகிறார்கள், மேலும் அவர்கள் உணர்ச்சி மற்றும் சாத்தியக்கூறுகளுக்கு இடையே வாய்ப்புகளை நன்றாக அறியக்கூடியவர்கள். உங்களுக்குத் தேவைப்படும் வரை அவர்கள் உங்களைப் பேச அனுமதிப்பார்கள், மேலும் ஆலோசனை வழங்குவதற்கு முன்பு நீங்கள் சொல்வதை அவர்கள் முழுமையாகக் கேட்பார்கள். அவர்கள் தங்கள் வயதுக்கு மீறிய புத்திசாலிகளாக இருக்கிறார்கள், எனவே அவர்களை சாதாரணமாக நினைக்காதீர்கள்.