இந்த 5 ராசிக்காரங்க வாழ்க்கையில் எப்போதும் முட்டாள்தனமான முடிவுகளை எடுத்து துன்பப்படுவார்களாம்..!

செய்திகள்

முடிவெடுக்கும் திறன் என்பது ஒருவரின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். முடிவெடுக்கும் திறன் நபருக்கு நபர் மாறுபடும். சிலர் நிதானமாக சரியான முடிவெடுக்கும் திறன் கொண்டவர்களாக இருக்கும்போது, சிலர் அவசரமாக தவறான முடிவெடுப்பவர்களாக இருப்பார்கள்.எப்போதும் தவறான முடிவெடுக்க யாராலும் முடியாது என்று நீங்கள் நினைத்தால் உங்கள் எண்ணம் தவறானதாகும்.’


ஜோதிடத்தின் படி சில ராசிக்காரர்கள் தங்களின் பதட்டத்தாலும், பிடிவாதத்தாலும் எப்போதும் தவறான முடிவெடுப்பவர்களாக இருப்பார்கள். அவர்கள் எந்தவொரு முடிவையும் எடுக்க தடுமாறுவார்கள் மற்றும் தப்பான முடிவுகளால் பல துன்பங்களுக்கு ஆளாவார்கள். இந்த பதிவில் எந்தந்த ராசிக்காரர்கள் தப்பான முடிவெடுப்பதை வழக்கமாகக் கொண்டிருப்பார்கள் என்று பார்க்கலாம்.

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் கொஞ்சமும் பொறுமை இல்லாதவர்கள். மேஷ ராசிக்காரர்கள் மனக்கிளர்ச்சியுடன் போராடக்கூடியயவர்கள், அவர்கள் தங்கள் உணர்ச்சிகள் மற்றும் உணர்வுகளின்படி செயல்படுபவர்கள். அவர்கள் இயல்பிலேயே மனக்கிளர்ச்சி கொண்டவர்கள் மற்றும் ஒரு முக்கியமான முடிவை எடுப்பதற்கு முன் எப்போதும் சிந்திப்பதில்லை. மேஷ ராசிக்காரர்கள் தங்கள் முடிவுகளை எடுத்த பிறகு அதன் விளைவுகளைப் பற்றி சிந்திப்பதில்லை. மேஷம் உடனடி மனநிறைவை விரும்புவதால், ​​அவர்கள் என்ன தவறு செய்யக்கூடும் என்று அரிதாகவே கருதுகிறார்கள்.

மீனம்மீனம் சில சமயங்களில் நம்பமுடியாத அளவிற்கு தவறான முடிவெடுக்கிறார்கள், தவறான முடிவை எடுக்க பயப்படுவதால் இறுதி முடிவை எடுக்க எப்போதும் அதிக நேரம் எடுத்துக்கொள்வார்கள். இந்த குழப்பம் பெரும்பாலும் அவர்களின் வாழ்க்கையில் மோசமான முடிவுகளை எடுக்க வழிவகுக்கிறது. எல்லாம் சாத்தியமானதாகவும் தீர்க்கமானதாகவும் தோன்றும்போது, அவர்கள் எடுக்கும் முடிவு எப்போதும் காலம் கடந்ததாக இருக்கும்.


மிதுனம்மிதுன ராசிக்காரர்கள் இரட்டை ஆளுமை கொண்டவர்கள். இரண்டு ஆளுமைக்கு இடையிலும் தொடர்ந்து பயணிப்பதால் அவர்கள் சரியான முடிவை எடுப்பதற்கு மிகவும் சிரமப்படுவார்கள். அவர்களின் சீரற்ற தன்மை காரணமாக அவர்கள் முடிவெடுக்கும் திறன்களில் உறுதியற்றவர்களாக இருப்பார்கள். அவர்கள் அமைதியற்றவர்கள் மற்றும் சரியான நேரத்தில் முடிவுகளை எடுக்க முடியாது. அவர்களின் இரட்டை மனம் எப்போதும் அவர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும்.

தனுசுதனுசு ராசிக்காரர்கள் அவசர அவசரமாக முடிவெடுத்துவிட்டு அதற்காக பின்னர் வருத்தப்படுவார்கள். அவர்கள் மக்களை எளிதில் நம்புகிறார்கள், ஏனென்றால் அவர்கள் வெளிப்படையாக இருக்கிறார்கள், இது மோசமான முடிவுகளை எடுக்க வழிவகுக்கும். தனுசு ராசிக்காரர்களின் அதிக அளவு லட்சியம் மற்றும் வைராக்கியம் அவர்களின் இந்த செயல்பாடுகளுக்கு காரணமாகும், ஆனால் அவர்களின் அதிகப்படியான நம்பிக்கை அவர்களை மோசமான முடிவுகளில் தள்ளும்.


கடகம்கடக ராசிக்காரர்கள் எப்போதும் தங்கள் உள்ளுணர்வுகளை பின்பற்ற விரும்புகிறார்கள். அவர்களின் ஒவ்வொரு முடிவும் அவர்களுக்கு திருப்தியை அளிப்பதால் அவர்கள் பின்விளைவுகளை பற்றி கவலைப்படுவதில்லை. அவர்களைப் பொறுத்தவரை அவர்கள் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் சரியானதுதான். அவர்கள் ஒருபோதும் விதிகளைப் பின்பற்றுவதில்லை, ஏனென்றால் அவர்கள் தங்கள் விருப்பங்களுக்கு கட்டுப்படுகிறார்கள். அதனால் வரும் விளைவுளைப் பற்றி கவலைப்படுவதில்லை.