உங்க பிறந்த தேதி படி எந்த தொழில் அல்லது வேலை உங்களுக்கு ஜாக்பாட் அடிக்க உதவும் தெரியுமா? அவசியம் படியுங்கள்..!!

செய்திகள்

நியூமராலஜி ஒருவரின் வாழ்க்கையை எண்களைப் பொறுத்து எப்படி நிர்ணயிக்கப்படுகிறது என்பதை அடிப்படையாகக் கொண்டது. இது ஒரு தனிநபரின் ஆளுமைப் பண்புகள், விருப்பு வெறுப்பு, மற்றவர்களுடனான இணக்கம் மற்றும் சிறந்த பொருத்தமான தொழில் பற்றிய தகவல்களை வழங்க உதவுகிறது.


இருப்பினும், தொழில் தேர்வு உங்கள் ஆர்வங்கள், திறன்கள் மற்றும் நீங்கள் பெற்ற அறிவின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். நியூமராலஜியின் அடிப்படையில் சில பொதுவான தொழில் பரிந்துரைகள் உங்கள் பிறந்த தேதியின் அடிப்படையில் கணிக்கப்பட்டுள்ளது. அவற்றில் உங்களுக்கு பொருத்தமானது எதுவென்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

எண் 1மாதத்தின் 1, 10, 19 மற்றும் 28 தேதிகளில் பிறந்தவர்களின் விதி எண் 1. தலைமை அதிகாரிகள், தொழில் அதிபர்கள், அரசியல், விளையாட்டு அல்லது கலை தொடர்பான போன்ற துறைகள் அவர்களுக்கு சிறந்த வளர்ச்சிக்கான துணையாக இருக்கும். அவர்கள் மின்சாரத் துறை, மருத்துவமனைகள், மருந்துகள், ரசாயனம் மற்றும் தங்கம் தொடர்பான வேலைகளிலும் சிறந்த வாழ்க்கையை உருவாக்க முடியும்.

எண் 2மாதத்தின் 2, 11, 20 மற்றும் 29 தேதிகளில் பிறந்தவர்களின் விதி எண் 2. குழுப்பணி, வாடிக்கையாளர் சேவை, ஆலோசகர்கள், சமூகப் பணி, சுகாதாரப் பாதுகாப்பு, பங்குச் சந்தை, வங்கி, குளிர்பானங்கள், பால் இறக்குமதி-ஏற்றுமதி மற்றும் ஜவுளித் துறை ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு தொழில் சிறந்த தேர்வாக இருக்கும்.


எண் 33, 12, 21 மற்றும் 30 தேதிகளில் பிறந்தவர்களின் விதி எண் 3 ஆக இருக்கும். எண்டர்டெயின்மெண்ட், ஊடகம், ஆசிரியர், எழுத்தாளர், விளம்பரம் செய்தல் அல்லது படைப்பாற்றல் மற்றும் சுய வெளிப்பாடு ஆகியவற்றை உள்ளடக்கிய எதிலும் இந்த எண்ணை உடையவர்கள் வெற்றிக்கொடி நாட்டலாம். எண் 3 செவ்வாய் கிரகத்தால் ஆளப்படுவதால், அவர்கள் ஆட்டோமொபைல், ரியல் எஸ்டேட் மற்றும் மருத்துவத்துறையிலும் சிறந்து விளங்க முடியும்.

எண் 4மாதத்தின் 4, 13, 22 மற்றும் 31 தேதிகளில் பிறந்தவர்களின் விதி எண் 4. எண் 4 நபர்களுக்கு பொருத்தமான தொழில் நிதி, கணக்கியல், சட்டம், பொறியியல் மற்றும் அறிவியல் தொடர்பான துறைகளில் சிறந்து விளங்கலாம். எண் 4 புதன் கிரகத்தால் ஆளப்படுகிறது, எனவே தொலைத்தொடர்பு, ஐடி, பயணம் மற்றும் சுற்றுலா, அச்சு ஊடகம் மற்றும் ஜோதிடம் போன்ற தொழில்களும் அவர்களுக்கு சிறந்த துறையாக இருக்கும்.

எண் 5மாதத்தின் 5, 12 மற்றும் 23 தேதிகளில் பிறந்தவர்களின் விதி எண் 5. பயணம், விற்பனை, சந்தைப்படுத்தல், பொது உறவுகள் அல்லது சாகசத்தை அனுமதிக்கும் துறைகள் அவர்களுக்கு சிறந்த துறைகளாக இருக்கும். எண் 5-ல் பிறந்தவர்கள் நிதி நிறுவனங்கள், வங்கி, கல்வி நிறுவனங்கள், சட்டம், முதலீட்டு வங்கி மற்றும் ஆலோசனை நிறுவனங்களில் நல்ல முன்னேற்றத்தைக் கொண்டிருக்கலாம்.

எண் 66, 15 மற்றும் 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் விதி எண் 6. அவர்களுக்கு ஹோட்டல், சுகாதாரம், கல்வி, ஆலோசனை அல்லது மற்றவர்களுக்கு உதவுவதை உள்ளடக்கிய எந்தத் தொழிலும் பொருத்தமான தொழிலாக இருக்கலாம். எண் 6-ஐ சுக்கிரன் ஆட்சி செய்வதால் வைரம், வைர நகைகள், ஃபேஷன், திரைப்படத் துறை, அழகுசாதனப் பொருட்கள், ஆடம்பர பிராண்டுகள் மற்றும் வாசனை திரவியங்கள் ஆகியவை 6-ம் எண் நபர்களுக்கு தொழில் வாழ்க்கையின் சிறந்த தேர்வாக இருக்கும்.


எண் 7மாதத்தின் 7, 16 மற்றும் 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் விதி எண் 7. அவர்ளுக்கு மிகவும் பொருத்தமான தொழில் ஆராய்ச்சி, அறிவியல், தொழில்நுட்பம் அல்லது தனியாக செய்யக்கூடிய தொழில்கள் சிறப்பாக இருக்கும். எண் 7-யை கேது ஆட்சி செய்வதால், மின்னணு உள்கட்டமைப்பு, தகவல் தொடர்பு, கழிவு மறுசுழற்சி மற்றும் துப்பறியும் வேலை போன்றவற்றில் நல்ல முன்னேற்றம் உள்ளன.

எண் 88, 17 மற்றும் 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் விதி எண் 8. வணிகம், மேலாண்மை, நிதி, சட்டம் அல்லது அதிகாரத்தை உள்ளடக்கிய எந்தவொரு தொழில் வாழ்க்கையும் அவர்களுக்கு மிகவும் பொருத்தமான விருப்பமாக இருக்கும். இந்த நபர்கள் இரும்பு தாது, தோல், நிலக்கரி, மற்றும் சட்டம் தொடர்பான துறைகளில் ஈடுபட்டால் விரைவில் வெற்றியை அடையலாம்.

எண் 9மாதத்தின் 9, 18 மற்றும் 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் விதி எண் 9. கல்வி, சுகாதாரம் அல்லது சமூகத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதை உள்ளடக்கிய எந்தவொரு தொழிலும் அவர்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும். இது தவிர, அவர்கள் விண்வெளி தொழில்நுட்பம், ரேடார் அமைப்பு மற்றும் வயர்லெஸ் தொழில்நுட்பம் ஆகியவற்றில் வேலையைத் தேர்வு செய்யலாம்.