நம் ஒவ்வொருவருக்கும் பல உறவினர்கள் இருக்கிறார்கள். சில உறவினர்கள் நமக்கு மிகவும் பிடித்தவர்களாக இருப்பார்கள். நம்முடைய வாழ்க்கைக்கும் உயர்வுக்கும் மிகவும் உறுதுணையாக இருப்பார்கள். பலர் நமக்கு பிடிக்காத உறவினர்களாக இருப்பார்கள். ஏனெனில், எந்த நேரமும் நம்மை எரிச்சலூட்டும் வகையில் நடந்துகொள்வார்கள்.

இது அவர்கள் மீது வெறுப்பை ஏற்படுத்தலாம். சிலர் உறவினர்களை கண்டாலே, நூறு அடி தள்ளி நிற்பார்கள். இது அவர்களின் மோசமான நடத்தையை குறிக்கிறது. கண்டிப்பாக நம் எல்லாருடைய வாழ்க்கையிலும் எரிச்சலூட்டும் சில அல்லது ஒரு உறவினராவது இருப்பார்கள். நாம் அவர்களிடம் நட்பாக இருக்கத்தான் விரும்புவோம். ஆனால், அவர்கள் செய்யும் செயல் நம்மை கோபப்படுத்தி, எரிச்சலூட்டும்.
உறவினர்களாக இருப்பதால், அவர்களை முற்றிலும் தவிர்க்க முடியாது. இந்நிலையில், இதுபோன்ற உறவினரைக் கையாள்வது சவாலானது. எனவே சில உறவினர்களால் நீங்கள் மிகவும் அவதிப்பட்டால், அவர்களை கையாள உதவும் வழிகள் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

உறவில் எல்லைகளை அமைப்பது எப்போதும் நல்லது. ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் விருப்பங்கள் இருக்கும். அதில் யாரும் எந்த குறுக்கீடும் செய்யக்கூடாது. உங்கள் உறவினரின் நடத்தை உங்களைத் தொந்தரவு செய்தால், அவர்களின் எல்லைகளைத் தெளிவாகத் தெரிவிக்க வேண்டும். உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத விஷயங்களை அவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.
அவை தொடர்ந்தால் அதன் விளைவுகளைப் பற்றியும் நீங்கள் தெரிவிக்க வேண்டும். நீங்கள் அவர்களுடன் சண்டையிட விரும்பவில்லை, நல்ல உறவாக இணைந்து வாழத்தான் விரும்புகிறீர்கள் என்பதையும் கூறுங்கள். அதேபோல சில விஷயங்கள் வரம்பிற்கு அப்பாற்பட்டவை என்று அவர்களுக்கு புரிய வையுங்கள்.
சில விஷயங்கள் அல்லது சூழ்நிலைகள் உங்கள் உறவினர்களைத் தொந்தரவு செய்யும் என்று உங்களுக்குத் தெரிந்தால், அவற்றைத் தவிர்க்க முயற்சிக்கவும். உதாரணமாக, உங்கள் உறவினர் எப்போதும் அரசியலைப் பற்றி வாதிட்டால், அவர்களிடம் அரசியலைப் பற்றி விவாதிப்பதைத் தவிர்க்கவும். நீங்கள் எப்போது கேள்வி அல்லது கருத்து கேட்பீர்கள் என்று அவர்கள் எதிர்பார்க்கலாம் அல்லது உங்களிடம் பேச முயற்சிக்கலாம். அப்போது, சிரித்துக்கொண்டே உங்களுக்கு வேலை இருக்கிறது என்று எழுந்து சென்று விடுங்கள். அவர்களே விட்டுக்கொடுக்கும் வரை பதிலளிக்காமல் இருப்பதே சிறந்தது. இது உங்களுக்குள் வர இருக்கும் சண்டை, விவாதம் மற்றும் மனகசப்பை தவிர்க்க உதவும்.

உங்களை எரிச்சலூட்டும் உறவினருடன் பழகும்போது உணர்ச்சிவசப்படுவது பொதுவானது. ஆனால், அந்த இடத்தில் நீங்கள் அமைதியாக இருக்க முயற்சி செய்யுங்கள். உங்களுக்கு கோபம் வந்தால், ஆழ்ந்த மூச்சை எடுத்துக் கொள்ளுங்கள். அவர்களுடன் பேசுவதற்கு முன் உங்களை சாந்தப்படுத்த சில நிமிடங்கள் நடந்து செல்லுங்கள்.
சில சமயங்களில், மக்கள் தங்கள் சொந்த வாழ்க்கையில் ஏதோ ஒரு பிரச்சனையுடன் போராடுவதால் எரிச்சலூட்டும் வகையில் செயல்படுகிறார்கள். அவர்களை பற்றி நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அவர்கள் எந்த வகையில் உங்களை எரிச்சலூட்ட வருகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும். அவர்கள் தொடங்குவதற்கு முன்பு, அவர்களின் பிரச்சனையை பற்றி நீங்கள் பேசுங்கள். அவர்கள் மீது இரக்கம் காட்டுங்கள். பின்னர், அவர்கள் உங்களை எந்த தொந்தரவும் செய்ய மாட்டார்கள்.
சொந்தமாக கையாள முடியாத சூழ்நிலை மிகவும் சவாலானதாக இருக்கும். அப்போது, மற்ற குடும்ப உறுப்பினர்களிடமிருந்து ஆதரவைப் பெறுங்கள். உங்களுக்கு ஆதரவாக பேசுவதற்கு யாரையாவது தயார் செய்து வைத்திருப்பது உங்கள் உணர்வுகளைச் செயல்படுத்தவும் சமாளிக்கும் உத்திகளை உருவாக்கவும் உதவும். இதைப் பற்றி உங்கள் பெற்றோரிடம் முதலில் பேசுங்கள். ஏனென்றால் அவர்களுக்கு உங்கள் உறவினர்களை பற்றி நன்றாக தெரியும். உங்களையும் உறவினர்களையும் உங்கள் பெற்றோர் அறிந்திருப்பதால் அவர்கள் சிறந்த ஆலோசனையை உங்களுக்கு வழங்கலாம். இல்லையென்றால், இந்த பிரச்சனையே அவர்களே சமாளிப்பார்கள்.